Latest Updates
-
ஹைதராபாத் சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டல் சுவையில் அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (12 July 2026-18 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சட்டையில் ஏன் பாக்கெட் எப்போதும் இடதுபுறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? காரணம் தெரிஞ்ச ஷாக் ஆகிருவீங்க -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீரி புலாவை செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
இந்த 4 நபர்களுடன் சண்டையிடுவது உங்கள் நிம்மதியை காணாமல் போகச்செய்யுமாம் - சாணக்கிய ரகசியம் -
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க -
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்..
தனது கர்ப்பத்தை போட்டோசூட் மூலம் வெளியிட்ட அமலா பால்!
Amala Paul Announces Her Pregnancy: தென்னிந்திய நடிகையான அமலா பால் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் தேதி தனது நீண்ட கால நண்பரும், காதலருமான ஜகத் தேசாய் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதை கடற்கரையில் எடுத்த மகப்பேறு ஃபோட்டோசூட் மூலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராம்மில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். முக்கியமாக அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் பலவிதமான ஃபோட்டோசூட்டுகளை எடுத்து வெளியிட்டு வருவார். இவருக்கு இன்ஸ்டாவில் சுமார் 5.2 மில்லியர் ஃபாலோவர்கள் உள்ளனர். அமலா பால் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டதும், பலருக்கும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அமலா பால் வெளியிட்ட இந்த ஃபோட்டோவில், அவர் சிவப்பு நிற ஹால்டர் நெக் கிராப் டாப் மற்றும் அதற்கு பொருத்தமான தை-ஹை ஸ்லிட் ஸ்கர்ட் அணிந்திருந்தார். அதோடு தனடு கர்ப்பத்தை வெளிப்படுத்தும் வகையில், அமலா பாலும், அவரது கணவருமான ஜகத் தேசாயும் வயிற்றைப் பிடித்தவாறு போஸ் கொடுத்திருந்தனர். அதோடு இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக "Now I know that 1+1 is 3 with you!" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமலா பால் தனது கர்ப்பத்தை வெளியிட்டதும், நடிகை காஜல் அகர்வால், திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் போன்ற திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் திருமணம்
அமலா பால் மற்றும் ஜகத் தேசாயின் திருமண கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது, புதுமண தம்பதிகள் அணிந்திருந்த ஆடைகள் முதல் அலங்காரம் வரை அனைத்துமே லாவெண்டர் நிறமாக இருந்தது. அமலா பால் தனது திருமணத்தின் போது வெளிர் நிற லாவெண்டர் லெஹெங்காவை அணிந்திருந்தார், அதற்கு பொருத்தமாக ஜகத் தேசாயும் லாவெண்டர் நிற ஆடையை அணிந்திருந்தார்.
அமலா பால் ஏற்கனவே இயக்குநர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்ததோடு, 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்தாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications