Latest Updates
-
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
அடுத்த இரண்டு மாசம் அமெரிக்காவின் இந்த நகரத்துல சூரியனே தெரியாதாம்... எப்பவும் இருட்டா தான் இருக்குமாம்..
24 மணிநேரமும் சூரியனே உதிக்காமல் இருட்டாக இருந்தால் எப்படி இருக்கும்? நிச்சயம் இம்மாதிரியான சூழ்நிலையை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது அல்லவா? சூரியன் உதிப்பதைக் கொண்டு தான் நாம் ஒரு நாளின் தொடக்கத்தைக் கூறுகிறோம்.
ஆனால் உலகின் ஒரு நகரத்தில் ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, இரண்டு மாதங்கள் வரை சூரியனே தெரியாது என்பது தெரியுமா? இந்த நகரம் எப்போதும் இரவு பொழுது போன்றே காணப்படுமாம்.

பொதுவாக நாம் மாலை வேளையில் வேகமாக இருட்டாகிவிட்டாலே, என்ன ஒரு மோசமான காலநிலை என்று கூறுவோம். ஆனால் அலாஸ்காவில் உள்ள ஒரு நகரத்தில் சுமார் இரண்டு மாதங்கள் வரை சூரியனே தெரியதாம். இந்த நகரத்தில் கடைசியாக சூரிய அஸ்தமனமானது 2023 நவம்பர் 18 ஆம் தேதி நிகழ்ந்தது.
அலாஸ்கா எங்கு உள்ளது?
அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு தொகுதி மாநிலம். இது வட அமெரிக்க கண்டத்தின் தீவிர வரமேற்கில் அமைந்துள்ளது. மேலும் அலாஸ்கா தீபகற்பம் தான் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மிகப்பெரிய தீபகற்பம் ஆகும்.
இரண்டு மாதம் சூரியன் தெரியாது
அலாஸ்காவில் உள்ள உட்கியாகவிக் என்னும் நகரத்தில் சுமார் 4,500 மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டின் கடைசியிலும் சூரியன் இரண்டு மாதங்கள் வரை தென்படாதாம். ஏனெனில் இக்காத்தில் துருவ இரவு (Polar Night) சீசனுக்குள் இந்நகரம் நுழைகிறது. இந்த துருவ இரவு என்னும் நிகழ்வானது ஒவ்வொரு குளிர்காலத்திலும் இங்கு நிகழுமாம்.
துருவ இரவு என்றால் என்ன?
துருவ இரவு என்பது பூமியின் தென் துருவம் மற்றும் வட துருவப் பகுதிகளில் 24 மணிநேரத்திற்கும் மேல் இரவு பொழுது நீடிப்பதைக் குறிக்கிறது. பெரும்பாலும் இம்மாதிரியான நிகழ்வு துருவ வட்டங்களில் மட்டுமே நிகழும். இதில் உட்கியாகவிக் நகரம் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.
ஏன் இங்கு மட்டும் நிகழ்கிறது?
பூமியில் உட்கியாகவிக் நகரம் இருக்கும் பகுதியை எடுத்துக் கொண்டால், இந்த துருவ இரவு காலகட்டத்தில் பூமியானது அதன் அச்சில் 23 1/2 டிகிரியில் சாய்ந்திருக்கும். இப்படி பூமி அச்சின் சாய்வு காரணமாக, இந்த நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்க்காலத்தில் இந்த மாதிரியான ஆச்சரியமான நிகழ்வு நடக்கிறது. நவம்பர் 19 ஆம் தேதி முதல் இருளில் மூழ்கிய இந்த நகரத்தில் மீண்டும் சூரியனை, அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 23 ஆம் தேதி காண முடியும்.
24 மணிநேரமும் இருட்டாகத் தான் இருக்குமா?
சூரியன் இந்த நகரத்தில் கண்ணில் படாமல் இருக்குமே தவிர, மற்ற படி பகல் வேளையில் இந்நகரமானது நீல நிறத்திலும், இரவு வேளையில் இருட்டாகவும் இருக்கும். மேலும் சூரியன் இங்கு தெரியாததால், மிகவும் கடுமையான குளிரை அனுபவிக்கக்கூடும். ஏனெனில் இங்கு இக்காலத்தில் வெப்பநிலையானது மைனஸ் 23 டிகிரியாக இருக்கும். இதனால் இங்கு வாழும் மக்கள் குளிரால் மிகவும் சிரமப்படுவார்கள்.
இந்நகரத்தின் சிறப்பு
அலாஸ்காவில் உள்ள உட்கியாகவிக் நகரத்திற்கு செல்ல வேண்டுமானால், சாலை வழியாக செல்ல முடியாது. இந்நகரத்திற்கு செல்ல ஒரே வழி விமானம் தான். விமானத்தின் உதவியுடன் மட்டுமே இந்த நகரத்திற்கு செல்ல முடியும். அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் பிற பிராந்திய விமான நிறுவனங்கள் ஏங்கரேஜ் மற்றும் ஃபேர்பேங்க்ஸில் இருந்து வழக்கமான விமான சேவையை வழங்குகின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.)



Click it and Unblock the Notifications