Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
அட்சய திரிதியை உருவாக்கும் ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கூரையை பிச்சிட்டு கொட்டப்போகுதாம்...!
இந்துக்களின் முக்கிய பண்டிகையான அட்சய திருதியை இந்த ஆண்டு மே 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை இந்த ஆண்டு பல நல்ல நிகழ்வுகளுடன் வருகிறது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு அட்சய திருதியை நாளில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் சந்திரனும் வியாழனும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமான ராஜயோகமாகும்.

தேவகுருவான வியாழனும் சந்திரனும் சிறந்த நண்பர்கள். கஜகேசரி யோகம் சந்திரன் மற்றும் வியாழனால் உருவாகிறது. அட்சய திருதியில் கஜகேசரியோகம் உருவாகி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். அட்சய திருதியையில் உருவாகும் கஜகேசரியோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் சாதகமான பலன்களை அளிக்கப் போகிறது. ஏனெனில் உங்கள் ஜாதகத்தில் பணம் மற்றும் தொடர்புகளுக்கான வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகப் போகிறது. அதனால் எதிர்பாராத பண பலன்களை அவ்வப்போது பெறுவீர்கள். மேலும் வெளிநாட்டில் இருந்து வியாபாரம் செய்பவர்களுக்கு பல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த ராசிக்காரர்கள் நினைத்துப் பார்த்ததை விட அதிக செல்வத்தைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கூடும். இந்த நேரத்தில் உங்கள் பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். உங்கள் பேச்சால் மற்றவர்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் நல்ல பலன்களைத் தரும். இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் ஒன்பதாம் வீட்டில் உருவாகும். எனவே இந்த நேரத்தில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள வேலையை முடிக்க முடியும். உங்கள் தொழில் சம்பந்தமாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
உங்கள் நிதி நிலையும் நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். வெளியூர் பயணத்திற்கான வாய்ப்பு அமையும். இந்த காலம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமைவதால் சிறப்பான பலன்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். பல அற்புதமான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள் நல்ல லாபம் சம்பாதித்து தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியுடன் சிறப்பான நேரத்தை செலவிடலாம். புதிய வாகனம் வாங்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். நிதி நிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை மிகவும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் பல வெற்றி வாய்ப்புகள் தேடிவரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
