Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
அட்சய திருதியை முதல் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Akshaya Tritiya 2023: இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் மங்களகரமான புனித நாளாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் தங்கம் வாங்குவது நல்லதாக கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 22 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் லட்சுமி தேவி மற்றும் நாராயணனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகுவதோடு, மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று 6 அற்புதமான சுப யோகங்கள் உருவாகின்றன. அவை ஆயுஷ்மான் யோகம், திரிபுஷ்கர் யோகம், சௌபாக்ய யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம் மற்றும் அமிர்த யோகம் போன்றவை ஆகும்.

இந்த மங்களகரமான யோக காலத்தில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கினால், அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது. இப்போது வருகிற அட்சய திருதியை எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இந்நாளில் உங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைப்பதோடு, உங்களின் நீண்ட நாள் ஆசைகளும் நிறைவேறப் போகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தையும், வெற்றியையும் காண்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இந்த அட்சய திருதியையால் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் வருமானத்தில் உயர்வைக் காணலாம். பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை சிறந்த நாளாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நற்பலன்களை வாரி வழங்கலன்னது. பல வழிகளில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்வின் பொருளாதார நிலை உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இதுவரை வேலை தேடிக் கொண்டிருந்தால், அட்சய திருதியை தினத்தில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக இக்காலம் சிறப்பதக இருக்கும். நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications