Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற நல்ல நேரம் எது?...
ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறோம். இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில் தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அதனால் இதை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறோம்..
தமிழ் மாதங்களில் 5வது மாதமாக வரும் இந்த ஆவணி மாதத்தை சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மாதம் என்றே சொல்லலாம். சூரிய பகவான், சிம்ம ராசியில் தன்னுடைய பயணத்தை துவங்கும் இந்த மாதத்தில், ஆடி மாதம் நடத்தாமல் நிறுத்தி வைத்திருந்த திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த ஆவனி மாதத்தில் ஏராளமான விஷேசங்கல் வரும்.. அதில் மாதத்தின் முதலிலேயே வரும் ஆவணி அவிட்டம் மிகவும் விஷேசமானது.. அன்று பிராமணர்கள் பூணூல் மாற்றுவது வழக்கம்.. வாங்க எப்போது பூணூல் மாற்றலாம் ? எது நல்ல நேரம்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

ஆவணி மாதம் என்பது திதி, நட்சத்திரங்கள் இரண்டுமே சிறப்பு பெறும் மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அவிட்டம், மூலம் நட்சத்திரங்களும், சதுர்த்தி திதியும் மிக விசேஷமானதாகும். இந்த ஆண்டு ஆவணி மாதம் ஆகஸ்ட் 17ம் தேதி சனிக்கிழமை துவங்கி, செப்டம்பர் 16ம் தேதி வரை உள்ளது. மொத்தம் 31 நாட்கள் கொண்ட ஆவணி மாதத்தின் முதல் நாளே சனிப் பிரதோஷ நாளாக அமைந்தது. தொடர்ந்து வரிசையாக விரத மற்றும் விசேஷங்கள் நிறைந்ததாக இந்த ஆண்டு ஆவணி மாதம் அமைந்துள்ளது...
பூணூல் மாற்றும் நேரம் எது?
இந்த ஆண்டு ஆவணி அவிட்டம் இன்று (ஆகஸ்ட் 19) வருகிறது. இன்று அதிகாலை 03.07 மணி தொடங்கி, நாளை மறுநாள் (ஆகஸ்டு 20) அதிகாலை 01.09 வரை பெளவுர்ணமி திதி உள்ளது. அதே சமயம், நாளை காலை 09.09 மணிக்கு பிறகுதான் அவிட்ட நட்சத்திரம் தொடங்குகிறது. நாளை மறுநாள் காலை 07.50 வரை அவிட்ட நட்சத்திரம் உள்ளது. இருந்தாலும் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யும் காரியங்களுக்கு நாள், நட்சத்திரம், கிழமை என எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்று சாஸ்திரங்கள் சொல்லிகின்றன..
அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த வேளையில் பூணூல் மாற்றிக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு பகல் 12 முதல் 1 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் இந்த நேரத்திலும் பூணூல் மாற்றிக் கொள்ளலாம். ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படும். மேலும் இந்த பூணூல் மாற்றுவது என்பது ஆவணி அவிட்டத்தின் மிக முக்கியமான சடங்கு.. இந்த நாளில் உபநயனம் பெற்றவர்கள் பூணூலை மாற்றிக் கொள்கிறார்கள். வேதங்களை படிக்க துவங்குவதற்கும் இது நல்ல நாளாகும்.



Click it and Unblock the Notifications