Latest Updates
-
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம்
Aadi 2025: நீங்கள் வேண்டும் வரம் உங்களுக்கு கிடைக்க ஆடி மாசம் அம்மனை எந்த நாளில் எப்படி வழிபடணும் தெரியுமா?
Aadi 2025: பொதுவாகவே ஆடி மாதத்தில் நாம் எந்த விசேஷங்களும் செய்வதில்லை. இதனால் பலருக்கு இந்த மாதம் நல்ல மாதம் இல்லையா என்கிற சந்தேகம் ஏற்படும். இன்னொரு பக்கம் ஆடி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் அம்பிகைக்கு உரிய மாதம் என்பார்கள். ஆனால் இந்த ஆடி மாதத்தில் சிவன், மகாலட்சுமி, முருகன், விநாயகர், குல தெய்வம், கிராம காவல் தெய்வம் என அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும் ஏற்ற மாதமாகவும் இருக்கிறது.
இந்த மாதத்தில் அனைத்து கடவுள்களின் விசேஷ தினங்களும் கூடுதல் சிறப்பை பெறுகின்றன. ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், மற்றும் ஞாயிற்று கிழமையும் சிறப்பாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆடி ஆரம்பமே திருவிழா காலம் போல் வீட்டை சுத்தம் செய்து வாயிற்கால்களுக்கு மஞ்சள் குங்குமம் என சிறப்பாக ஆரம்பித்து விடுவார்கள் பெண்கள். இந்த ஆடி மாதத்தில் ஒவ்வொருக்கு நாளும் தனி சிறப்பும், பின்பற்ற வேண்டிய சில விஷயங்களும் இருக்கும். சரி வாங்க என்னன்னு பார்க்கலாம்.

ஆடி மாதம்
நமக்கு ஒரு நாளில் பகல்-இரவு என மாறி வருகிறது. அதே போல் தான் தேவர்கள் வாழும் தேவ லோகத்திலும் பகல்-இரவு உண்டு. நமது ஒரு வருடம் தேவலோகத்தில் ஒரு நாள் என்பார்கள். அதில் இந்த ஆடி மாதம் மாலை வேலையாக கருதப்படுகிறது. இதனால் இது அவர்களின் வழிபாட்டு காலமாகிறது. இந்த நேரத்தில் நாமும் கடவுளை வணங்குவதன் மூலம் சிறப்பு பலன்களை பெற முடியும். இன்னொன்று பாண்டவர்கள் பாரத போரில் வெற்றி பெற வேண்டும் என இறைவனை வழிபட்டு போருக்கு சென்ற நாள் ஆடி மாதத்தின் முதல் நாள் என்பார்கள்.
ஆடி 1
ஆடி ஒன்று தலையாடி என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் மற்ற பூஜைகளுக்கு வீட்டை சுத்தம் செய்வதை துடைத்து, வாயிற்படியில் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்வார்கள். பின் தலைக்கு காய்ச்சிய நல்லெண்ணெய் வைத்து தலைக்கு குளிப்பார்கள். சில பெண்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை அழைக்கும் பூஜை செய்வார்கள். குழந்தைகளுக்கு மாலை வேளையில் வெடி தேங்காய் சுட்டு சாமி கும்பிட்டு சாப்பிடும் பழக்கம் இன்றும் கொங்கு பகுதி மக்களிடத்தில் பரவலாக காணப்படுகிறது.
தேதி: ஆடி 1
ஜூலை - 17-07-2025 வியாழக்கிழமை
ஆடி வெள்ளி
பொதுவாகவே நமது வழிபாட்டு முறைகளில் வெள்ளி கிழமை பெண் தெய்வங்களுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதிலும் அம்மனுக்கு உரிய மாதமான ஆடி மாத வெள்ளி கிழமைகள் தனி சிறப்பை பெறுகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சில பூஜைகளை செய்து பலன் பெறலாம்.
தேதி: ஆடி வெள்ளி
ஜூலை - 18-07-2025 முதல் வெள்ளிக்கிழமை - குலதெய்வ வழிபாடு & திருவிளக்கு வழிபாடு
ஜூலை - 25-07-2025 இரண்டாம் வெள்ளிக்கிழமை - மகாலக்ஷ்மி வழிபாடு
ஆகஸ்ட் - 01-08-2025 மூன்றாம் வெள்ளிக்கிழமை - தளிகை வழிபாடு
ஆகஸ்ட் - 08-08-2025 நான்காம் வெள்ளிக்கிழமை - வரலக்ஷ்மி நோம்பு
ஆகஸ்ட் - 15-08-2025 ஐந்தாம் வெள்ளிக்கிழமை - அன்னதான வழிபாடு & கோமாதா பூஜை
ஆடி செவ்வாய்
ஆடி வெள்ளிகிழமையை போல் செவ்வாய் கிழமையும் தனி சிறப்பை கொண்டிருக்கிறது. அதிலும் முருகனுக்கும் அம்பாளுக்கும் உகந்த செவ்வாய் கிழமையில் ஆடி மாதமும் சேர்த்து வரும் போது நாம் செய்யும் பிராத்தனைகளும் நமக்கு கிடைக்க பெறும்.
ஜூலை - 22-07-2025 முதல் செவ்வாய் - நாக தேவதை வழிபாடு
ஜூலை - 29-07-2025 இரண்டாம் செவ்வாய் - மாவிளக்கு பூஜை
ஆகஸ்ட் - 04-08-2025 மூன்றாம் செவ்வாய் - மங்கள கௌரி நோம்பு
ஆகஸ்ட் - 11-08-2025 நான்காம் செவ்வாய் - மருந்து பிரசாத வழிபாடு
ஆடி ஞாயிறு
ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாய் போலவே ஆடி ஞாயிறு மிகவும் சிறப்பான ஒன்று. ஞாயிற்று கிழமை சூரிய பகவானுக்கும் மாரியம்மனுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்று கிழமை வழிபாட்டிற்கு உரிய நாளாகவும் விளங்குகிறது.
ஜூலை - 20-07-2025 முதல் செவ்வாய் - சூரிய வழிபாடு
ஜூலை - 27-07-2025 இரண்டாம் செவ்வாய் - மாரியம்மன் கூழ் வார்த்தல்
ஆகஸ்ட் - 03-08-2025 மூன்றாம் செவ்வாய் - தம்பதி பூஜை
ஆகஸ்ட் - 10-08-2025 நான்காம் செவ்வாய் - கன்னி தேவதை வழிபாடு/காயத்ரி ஜபம்
ஆடி கிருத்திகை
பொதுவாக கிருத்திகை முருகனுக்கு உரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. முருகன் அவதரித்தது விசாக நட்சத்திரமாக இருந்தாலும், அவரை அன்போடு வளர்த்த கார்த்திகை பெண்களின் பெயரில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முன்னுரிமை பெறுகிறது.
தேதி: ஆடி கிருத்திகை
ஜூலை - 20-07-2025 - ஞாயிற்று கிழமை
ஆகஸ்ட் - 16-08-2025 - சனிக்கிழமை
இதில் எந்த நாளில் கிருத்திகை வழிபாடு செய்ய வேண்டும் என ஆன்மீக வல்லுநர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆடி அமாவாசை
அமாவாசை எப்போதும் முன்னோர்களை நினைவு கூறும் நாளாக இருந்து வருகிறது. அதில் வருடத்தில் தை அமாவாசை, மகாளய அமாவாசை எனப்படும் புரட்டாசி அமாவாசை, மற்றும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர் வழிபாட்டை மேற்கொண்டு தான தர்மங்கள் செய்வது தலை முறை தலை முறையாய் பின்தொடரும் சாபத்தை தகர்க்க கூடியது.
தேதி: ஆடி அமாவாசை
ஜூலை - 24-07-2025 - வியாழக்கிழமை
ஆடி பௌர்ணமி
கடவுளை கொண்டாடும் மாதமாக அனைத்து கடவுள்களுக்கு உகந்த நாள் நட்சத்திரமும் சிறப்பை பெறுகிறது. இந்த மாதத்தில் விஷ்ணுவின் வடிவமான கல்வி கடவுளாக திகழும் ஹயக்ரீவரை வழிபட உகந்த நாள் தான் ஆடி பௌர்ணமி. ஆடி பௌர்ணமில் ஹயக்ரீவர் அவதரித்ததாக ஐதீகம்.
தேதி: ஆடி பௌர்ணமி
ஆகஸ்ட் - 08-08-2025 - வெள்ளிக்கிழமை
ஆடி பூரம் & நாக சதுர்த்தி
இந்த நாளில் அம்பிகை அவதரித்ததாக கருதப்படுகிறது. மேலும் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்வதோடு மட்டுமின்றி வளைகாப்பும் இந்த நாளில் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம், திருமண வரன், மற்றும் குழந்தைகளுக்காக வேண்டுபவர்கள் விரதமிருக்கலாம். அருகில் இருக்கும் அம்மன் கோவில்களுக்கு வளையல்கள் வாங்கி கொடுக்கலாம். மேலும், இந்த நாளில் நாக தேவதையை வழிபடுவது சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யும்.
தேதி: ஆடி பூரம் & நாக சதுர்த்தி
ஜூலை - 28-07-2025 - திங்கள் கிழமை
கருட பஞ்சமி & நாக பஞ்சமி
கருட பஞ்சமி நாளில் கருடனை வழிபட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, கண் திருஷ்டி, தீய சக்திகள், திருமணத்தில் தடை, குழந்தை பிறப்பில் தடை போன்ற நிவர்த்தியாகும். இந்த நாளில் கருடன் அவதரித்ததாக கூறப்படுகிறது.
தேதி: கருட பஞ்சமி & நாக பஞ்சமி
ஜூலை - 29-07-2025 - செவ்வாய் கிழமை
ஆடிப்பெருக்கு
ஆடி மாதத்தின் 18-ம் நாள் தான் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 எனவும் அழைக்கப்படுகிறது. ஆடி பெருக்கின் வரலாற்றிற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பலவகையான வழிபாட்டு முறைகளும் பின்பற்ற படுகின்றன.
தேதி: ஆடிப்பெருக்கு
ஜூலை - 03-08-2025 - ஞாயிற்று கிழமை
ஆடித்தபசு
அரியும் சிவனும் ஒன்று என உணர்த்த உமையவள் ஒற்றை காலில் ஊசி முனையில் தவம் புரிந்தார். அவர் தவத்தின் பலனாக சிவனும் ஒரு பாதியும் விஷ்ணு மறு பாதியுமாக காட்சியளித்த நாள் தான் ஆடித்தபசு எனப்படுகிறது. ஆடித்தபசு தினத்தில் அம்மனை வழிபடுபவர்களுக்கு அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தேதி: ஆடித்தபசு
ஜூலை - 03-08-2025 - ஞாயிற்று கிழமை
ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்ட தினத்தில் பூணூல் அணிபவர்கள் அதை மாற்றி கொள்வார்கள். இது ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் அவிட்டம் நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படுகிறது.
தேதி: ஆவணி அவிட்டம்
ஜூலை - 09-08-2025 - சனிக்கிழமை



Click it and Unblock the Notifications













