Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
Aadi Amavasai 2024:: ஆடி அமாவாசையான இன்று மறந்தும் இந்த பொருட்களை வாங்கிடாதீங்க.. இல்ல பாவம் வந்து சேரும்...
Aadi Amavasai 2024: இந்து மதத்தில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் இதுவரை முன்னோர்களுக்கு திரி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், இந்த நாளில் அவற்றை செய்தால், பித்ரு தோஷம் நீக்கி, அவர்களின் ஆசி கிட்டும் மற்றும் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு ஆடி அமாவாசையானது ஆகஸ்ட் 04 ஆம் தேதி வருகிறது. அமாவாசை நாளில் தான் சனி பகவான் பிறந்தார். இந்த சனி பகவான் ஒருவருக்கு கர்ம பலன்களை அளிப்பவர். இந்த அமாவாசை நாளில் ஒருசில விதிகளும், ஒழுங்கு முறைகளும் உள்ளன. அவற்றை ஒருவர் தவறாமல் கடைப்பிடித்து வந்தால், வாழ்க்கை சிறக்கும்.

அதுவும் பித்ருக்களுக்கு உரிய ஆடி அமாவாசை நாளில் ஒருசில பொருட்களை வாங்கினால், அது பாவத்தை சேர்ப்பதோடு, சனி பகவானின் கோபத்திற்கும் ஆளாக்கும். இப்போது ஆடி அமாவாசை நாளில் எந்த மாதிரியான பொருட்களை வாங்கக்கூடாது மற்றும் எந்த விஷயங்களை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
1. ஆல்கஹால்
அமாவாசை நாள் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுவதால், இந்நாளில் ஆல்கஹால் வாங்குவது மற்றும் அதை குடிப்பதை தவிர்க்க வேண்டும் என வேதங்கள் கூறுகின்றன. மேலும் அமாவாசை நாள் சனி பகவானுடன் தொடர்புடையது என்பதால், எந்த வகையான ஆல்கஹாலை வாங்கினாலும், குடித்தாலும், அது வாழ்வில் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த தாக்கம் நீண்ட காலம் நீடித்திருக்கும்.
2. தானியங்கள்
அமாவாசை நாட்களில் வாங்கக்கூடாத மற்றொரு பொருள் தானியங்கள் மற்றும் மாவு பொருட்கள். அதுவும் ஆடி அமாவாசை நாளில் கோதுமை மற்றும் கோதுமை மாவை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வாங்கி அமாவாசை நாளில் சமைத்து உண்பது கெட்டதாக கருதப்படுகிறது. எனவே இவற்றை வாங்காதீர்கள்.
3. பூஜை பொருட்கள்
ஆடி அமாவாசை நாளில் புனிதமான எந்த ஒரு பூஜை பொருட்களையும் வாங்கக்கூடாது. அதாவது, ஊதுபத்தி, சாம்பிராணி, பூக்கள், கற்பூரம் அல்லது தெய்வங்களுக்கு உரிய பிற பொருட்களை வாங்குவது நல்லதாக கருதப்படுவதில்லை. எனவே இப்படியான பொருட்களை வாங்காதீர்கள்.
4. துடைப்பம்
அமாவாசை நாள் பித்ருக்களுக்கு உரிய நாளாகும். துடைப்பம் லட்சுமி தேவியுடன் தொடர்புடையதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த அமாவாசை நாளில் துடைப்பத்தை வாங்கினால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதன் விளைவாக நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவதிப்பட வேண்டியிருக்கும்.
5. இறைச்சி
அமாவாசை நாளில் எப்படி மது அருந்தக்கூடாதோ, அதேப் போல் அசைவ உணவுகளையும் வாங்கி உண்பது அசுபமாக கருதப்படுகிறது. மேலும் சனி பகவானுக்கு உரிய அமாவாசை நாளில் இறைச்சிகளை வாங்கி உட்கொண்டால், அது சனியின் கோபத்திற்கு ஆளாக்கி, வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த தவறையும் எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications