For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஜினியை பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள்!

ரஜினி ஏன் தன் பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை தெரியுமா?

By Lakshmi
|

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார். திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார். ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.

22 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதிலிருந்து ரஜினி தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடுவதில்லை. ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்த ரஜினி, ஆரம்ப காலத்தில், கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பணவசதி இல்லை

பணவசதி இல்லை

அவரது தாய் மொழி மராத்தியாக இருந்தாலும், இதுவரை ஒரு மராத்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்ததில்லை. திரைத்துறையில் நுழைவதற்கு முன், கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளில் ரஜினி நடித்துள்ளார். போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர்.

சிறிய கதாப்பாத்திரம்

சிறிய கதாப்பாத்திரம்

நாடக நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ரஜினியை பார்த்த இயக்குனர் கே.பாலச்சந்தர் "அபூர்வ ராகங்கள்"(1975) படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார். அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.

தேம்பி அழுத ரஜினி

தேம்பி அழுத ரஜினி

கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமன். நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜிராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் ரஜினி அழுததாக ஒருமுறை கே.பி குறிப்பிட்டிருந்தார்.

அவர் ஒரு வைரம்

அவர் ஒரு வைரம்

எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி. "ரஜினி வைரம் என்றால், நானும் கே.பியும் அவனை மிளிரச் செய்தோம். கே.பி வைரத்தை கண்டுபிடித்தார். நான் அதனை மெருகேற்றினேன்", என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.

அவர் என் தந்தை போல..!

அவர் என் தந்தை போல..!

கே.பாலச்சந்தர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல. அவர் என் தந்தை போல" என ஒருமுறை ரஜினி கூறியிருந்தார். "என்னை திருத்தவும் கண்டிக்கவும் உரிமையுள்ள ஒரே இயக்குநர் நீங்கதான்" என்றும் கே.பியிடம் ரஜினி கூறினார்.

அபூர்வ ராகங்கள் வெளியான அடுத்த ஆண்டே, கன்னடத்தில் 'கத சங்கமா' என்ற படத்தில் அவர் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.

ஆங்கில படம்

ஆங்கில படம்

ரஜினி ஆங்கில மொழியில் நடித்த முதல் மற்றும் ஒரே படம் "ப்ளட்ஸ்டோன்" 1988 ஆம் ஆண்டு வெளியானது. "அவர்கள்", "மூன்று முடிச்சு", "16 வயதினிலே" படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி, அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கினார்.

ரஜினி கமல்

ரஜினி கமல்

கமலும் ரஜினியும் ஒன்றாக இணைந்து 12 படங்களில் நடித்துள்ளனர். அதில் 9 தமிழ் படங்கள், 2 தெலுங்கு மற்றும் ஒரு இந்தி மொழிப்படம் ஆகும். இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் "நினைத்தாலே இனிக்கும்". முதன் முதலில் முழு கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமாகிய திரைப்படம் பாஸ்கர் இயக்கிய "பைரவி"(1978).

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பல கதாப்பாத்திரங்களை தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஸ்டைல், நடை, உடை பாவனைகளிலேயே தீவிர ரசிகர் கூட்டத்தைப் ரஜினி பெற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync
English summary

Why Rajini not Celebrating his Birthday

Why Rajini not Celebrating his Birthday
Story first published: Tuesday, December 12, 2017, 18:51 [IST]
Desktop Bottom Promotion