For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி அன்று இந்த பூஜை செய்தால், எதிர்பாராத வழிகளில் எல்லாம் செல்வம் கொழிக்கும்!

லட்சுமி குபேர பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

தீபாவளி என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆனந்தம் தான். நமது தமிழகத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும். தீபாவளி என்றால் எண்ணெய் குளியல், கோவிலுக்கு செல்லுதல், வகைவகையான பலகாரங்களை சாப்பிடுதல், பட்டாசுகள் வெடித்தல் மட்டுமல்ல...! வீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி, குபேர பூஜை செய்வதும் தான். இந்த பூஜையை செய்ய தீபாவளியே உகந்த நாளாகும். இதை செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். இந்த பூஜையை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குபேர யந்திரம்

குபேர யந்திரம்

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும்.

Image source

அலங்காரம்

அலங்காரம்

லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.

பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

விநாயகர் வழிபாடு

விநாயகர் வழிபாடு

தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம்.

விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி... அஷ்டலட்சுமியே போற்றி... குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம்.

குபேர பூஜை

குபேர பூஜை

தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ... தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

Image Source

தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்

தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

நாணய வழிபாடு

நாணய வழிபாடு

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி... என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?

எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு.

லட்சுமி எங்கிருப்பாள்?

லட்சுமி எங்கிருப்பாள்?

சுத்தமாகவும், நறுமணம் நிறைந்ததாகவும் உள்ள இல்லங்களில் விரும்பி கொலுவிருப்பாள். எங்கு முதியோர்களுக்கு மரியாதையும், குழந்தைகளுக்கு தேவையான கவனிப்பும் இருக்கிறதோ அந்த இல்லங்களில் அருள்மழை பொழிவாள்.

கடுமையான பேச்சுக்கள், கெட்ட எண்ணங்கள் இல்லாத இல்லத்தில் நிறைந்திருப்பாள் என்கிறது புராணம். நம் இல்லம் சிறியதாக இருக்கலாம். ஆனால் சுத்தமாகவும், வீட்டில் இருப்போர் அன்பாகவும் இருத்தலே இறை வழிபாட்டின் ஆரம்பம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

lakshmi kubera pooja for Diwali

lakshmi kubera pooja for Diwali
Desktop Bottom Promotion