For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதர்கள் ஏன் மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் மீது அதிக அன்பு செலுத்துகின்றார்கள்?

By Super
|

நீங்கள் ஒரு செல்லப் பிராணியை வளர்க்கும் பொழுது உங்களுக்கு இடையே ஒரு தோழமை உணர்வு மெல்ல மெல்ல வளரும். நீங்கள் ஒரு பூனை அல்லது பறவையை வளர்க்கும் பொழுது உங்களுக்கு இடையே, பரஸ்பர புரிதல் உணர்வு மட்டுமே வளரும்.

ஆனால், நீங்கள் நாய்களை வளர்க்கும் போது உங்களுக்கு இடையே வெறும் புரிதல் மட்டும் இல்லாமல் ஒரு உண்மையான நட்புணர்வும் வளர்கின்றது. ஆகவே உண்மையிலேயே நாய்கள் ஒரு மனிதனின் உன்னத நண்பன் என்று சொல்லப்படுகிறது.

Why people love more dogs than other pet animals

இந்த சொற்றொடரின் உண்மையான அர்த்தத்தை எவர் ஒருவர் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கின்றாரோ அவர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எனவே, ஏன் மனிதர்கள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய்களின் மீது அதிக அன்பு செழுத்துகின்றார்கள்?

ஆண்கள் மற்றும் நாய்களுக்கு இடையேயான பிணைப்பு புதியதல்ல. மனித நாகரிகத்தின் ஆரம்பத்தில் இருந்து, நாய்கள் எப்போதும் மனிதன் அருகில் இருந்து வந்திருக்கின்றது. மனிதர்கள் ஏன் மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய்கள் மீது அதிக அன்பு செழுத்துகின்றார்கள் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உங்களுக்கு செல்ல பிராணிகள் மீது அன்பு இல்லை எனில், இந்த கட்டுரையை படித்த பின், நிச்சயமாக நீங்கள் ஏதேனும் ஒரு வகையான செல்லப் பிராணிகளை வாங்கத் தொடங்குவீர்கள். மனிதர்கள் ஏன் நாய்கள் மீது அதிக அன்பு செழுத்துகின்றார்கள்? அதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.



1. உங்களுடைய உன்னத பாதுகாப்பு
:

'நாய்கள் ஜாக்கிரதை' என்கிற வாசகத்தை நீங்கள் பல்வேறு வீடுகளில் பார்த்திருக்கலாம். ஆமாம், எந்த ஒரு வீட்டில் நாய் இருக்கின்றதோ அந்த வீட்டில் நுழைய குற்றவாளிகள் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பர். நாய்களால் 5-அடி தூரத்திற்கு அப்பால் நிகழும் குற்றத்தை உணர முடியும். உங்களுக்கு ஏதேனும் ஆபத்து வர இருந்தால் நாய்களால் தொடர்ந்து குரைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்ய முடியும்.

2. உங்கள் வீட்டில் உள்ள ஒரு குழந்தை:

மக்கள் ஏன் நாய்கள் மீது அதிக அன்பு செலுத்துகின்றார்கள்? ஒரு குழந்தை எவ்வுளவு அன்பை எதிர்பாக்குமோ அதே அளவு அன்பை நாய்க்குட்டிகளும் உங்களிடம் எதிர்பாக்கும். நாய்க்குட்டிகள் உங்களுடைய வாழ்க்கையை வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குகளால் நிரப்பி விடும்.

குழந்தையில்லாத அல்லது குழந்தையை தள்ளிப்போட விரும்பும் பெண்கள், ஒரு நாயை வளர்ப்பதன் மூலம் ஒரு குழந்தையை வளர்க்கும் அற்புதமான உணர்வைப் பெற முடியும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

3. நிபந்தனையற்ற அன்பு:

உங்களை சுற்றி நாய் இருக்கும் பொழுது, உங்களால் தனிமையை உணர முடியாது. நண்பர்கள் மற்றும் உறவுகள் வந்து வந்து போகும், ஆனால் உங்களுடைய நாய் தனது வாழ்வின் கடைசி நாள் வரை உங்களுடன் தான் இருக்கும். நீங்கள் எவ்வுளவு சம்பாதிக்கின்றீர்கள் அல்லது உங்களின் புறத்தோற்றம் எப்படி இருக்கின்றது என்பது முக்கியமல்ல. உங்களுடைய நட்பு மற்றும் காதல் மட்டுமே நாய்க்கு மிகவும் முக்கியம்.


4. தொடர்ச்சியான தோழமை:

நீங்கள் ஒரு நாய் வளர்த்தால், உங்கள் குழந்தைக்கு பிற நண்பர்கள் தேவையில்லை. குழந்தைகள் மற்றும் நாய்களுக்கு இடையேயான அற்புதமான பிணைப்பை நிரூபிக்கும் பல்வேறு கதைகள் உள்ளன.

நீங்கள் உங்களின் குழந்தையின் அருகே இல்லாத பொழுது உங்களுடைய குழந்தையை நாய் பத்திரமாக பார்த்துக் கொள்ளும். இதுவே மனிதர்கள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய்களின் மீது அதிக அன்பு செழுத்துவதற்கான மிக முக்கியமான காரணமாகும்.


5. மனிதர்களைப் படிப்பதில் மனிதர்களை விட மேலானது:

மோப்ப உணர்வுகள் மனிதர்களை விட நாய்களுக்கு 100% அதிகம். நீங்கள் புதியவர்களை சந்திக்கும் பொழுது வசதியாக உணரவில்லை எனில் உங்களுடைய நாயை உடன் அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில் உங்களுடைய நாய் உங்களுக்கு வரும் துன்பத்தை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டு உங்களை பாதுகாக்கும். உங்களுடைய நாய் ஒரு நபரிடம் இருந்து எதிர்மறையான அதிர்வுகளை உணர்ந்தால், அவன் / அவளுடைய தொடர்பை தொடர்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.


6. மொத்த வேடிக்கை:

நீங்கள் மனிதர்கள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய்கள் மீது அதிக அன்பு ஏன் செலுத்துகின்றார்கள் எனத் தெரிந்து கொள்ள விம்புகின்றீர்கள் எனில் தங்களது பொழுதுபோக்கு அம்சத்தை எண்ணிப் பாருங்கள். உண்மையில் நாய்கள் உங்களுக்கு ஒரு முழு பொழுதுபோக்கு தொகுப்பாக உள்ளன. நாய்களுடன் பிரிஸ்பீ விளையாடலாம் அல்லது அவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடலாம். நாய்கள் உங்களின் கோடை சுற்றுலாவில் எவ்வுளவு வேடிக்கை சேர்க்கின்றார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.


7. நாய்கள் காத்திருக்கும்:

நீங்கள் எவ்வுளவுதான் தாமதமாக வீட்டிற்கு வந்தாலும் உங்களின் அன்பிற்குறியவர் உங்களுக்காக காத்திருக்க மாட்டார். ஆனால் உங்களுடைய நாய் உங்களுக்காக காத்திருக்கும். ஒரு நாய் அவருடைய எஜமானர் இறந்த பிறகு உடல் நலம் குன்றி மெதுவாக மரணத்தை தழுவிய நிகழ்வுகள் உள்ளன.

English summary

Why people love more dogs than other pet animals

Why people love more dogs than other pet animals
Desktop Bottom Promotion