Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஸ்ருதி ஹாசனின் சமீபத்திய ஸ்டைல் புக்!!!
தற்போது உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் பாலிவுட்டில் அசத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் அவரது படங்களை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதற்காக அவர் தனது ஸ்டைலையே மாற்றிவிட்டார். இப்போது ஸ்ருதியைப் பார்த்தால், பாலிவுட்டிற்கு செல்லும் முன்பு இருந்ததை விட பல மடங்கு, அவரது தோற்றத்தில் பெரிய வித்தியாசத்தைக் காணலாம். ஏற்கனவே ஃபேஷனாக காணப்படும் ஸ்ருதி, பாலிவுட்டிற்கு சென்ற பின்னர் இன்னும் ஃபேஷனாகிவிட்டார்.
இவ்வாறு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுவதால், அவர் பாலிவுட்டில் இன்னும் ஹாட்டான மற்றும் கவர்ச்சியான பெண்ணாகவும் காணப்படுகிறார். இப்போது ஸ்ருதி ஹாசனின் தற்போதைய சில ஸ்டைலான போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக...

ரஜத் தாங்கிரி கவுன்
ஸ்ருதி ஹாசன் அணிந்திருக்கும் மின்னும் ரஜத் தாங்கிரி கவுன், இவரது கூடுதல் அழகினைக் கொடுகிறது.

சைடு ஹேர்
ரஜத் தாங்கிரி கவுனிற்கு, அவரது சைடு ஹேர் ஸ்டைல் மிகவும் க்யூட்டான தோற்றத்தைத் தருகிறது.

டீப் கட் பேக்
ஸ்ருதி அணிந்துள்ள கவுன், டீப் கட் பேக் கொண்டது. இந்த கவுனின் டீப் கட்டிற்கு ஏற்ப, ஸ்ருதி முதுகில் டாட்டூ போட்டுள்ளார்.

கருப்பு மற்றும் கோல்டன் சுருளி கவுன்
இந்த டீப் கட் ஸ்டைலிஷ் கவுனை சுருளி கோயல் என்பவர் வடிவமைத்தார். இந்த ஆடைக்கு இவரது ஸ்ட்ரைட் ஹேர் ஸ்டைல் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. மேலும் இந்த ஆடைக்கு மேட்சாக கருப்ப நிற ப்ரேஸ்லெட் அணிந்துள்ளார். சொல்லப்போனால் இந்த ஆடையில் ஸ்ருதி ஹாட்டாக இருக்கிறார்.

ஜம்ப்சூட்
இந்த ஆடையும் சுருளி கோயல் என்பவரால் தான் வடிவமைக்கப்பட்டது. ஸ்ருதி, இந்த ஸ்டாப்லெஸ் சிவப்பு நிற ஜம்ப்சூட் ஆடையில் கவர்ச்சியான தோற்றத்தில் இருக்கிறார்.

வெள்ளை அனார்கலி
ஸ்ருதி வெள்ளை நிற அனார்கலியில் பொம்மை போன்று அழகாக உள்ளார்.

அழகான செருப்பு
முற்றிலும் பாரம்பரிய தோற்றத்தில் காணப்பட வேண்டுமென்று, ஆடைக்கு பொருத்தமான சந்தன நிற T-வடிவ தட்டையான செருப்பை அணிந்துள்ளார்.

பொருத்தமான காதணி
எவ்வளவு தான் காதணி ஃபேஷனாக இருந்தாலும், இவர் அணிந்துள்ள வெள்ளை நிற இறகு கம்மலானது, ஸ்ருதியின் தோற்றத்தை கூடுதல் அழகில் வெளிப்படுத்துகிறது.

நீல நிற காக்டைல் ஆடை
இந்த நீல நிற காக்டைல் ஆடையில், ஸ்ருதியா என்று கேட்கும் அளவு வித்தியாசமாக இருக்கிறார்.

கருப்பு லின்கெரீ
சமீபத்தில் ஒரு போட்டோவிற்கு ஸ்ருதி, கருப்பு லின்கெரீ ஆடை அணிந்து, செக்ஸியான ஒரு போஸ் கொடுத்த போது எடுத்த போட்டோ தான் இது.

லேஸ் ஆடை
இது ஸ்ருதி கருப்பு நிற லேஸ் உள்ள நீச்சல் உடையில், சற்று செக்ஸியான மேக்-கப் போட்டு போஸ் கொடுத்த போது எடுத்த போட்டோ.

புடவை
2012 ஃபிலிம்பேர் சவுத் விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, பிங்க் நிற நெட்டட் புடவையில் வந்த போது எடுத்த படம் தான் இது.

ஸ்லீவ்லெஸ் அனார்கலி
இதில் ஸ்ருதி அணிந்திருப்பது ஸ்லீவ்லெஸ் டீப் நெக் அனார்கலி. இந்த உடைக்கு ஏற்றவாறு அவர் சைடு கொண்டை, அழகான டயமண்ட் நெக்லெஸ் மற்றும் பொருத்தமான கல் வைத்த பொட்டு போன்றவற்றில் செம அழகாக காணப்படுகிறார்.
அட... இவருக்கு அனைத்து ஆடைகளுமே பொருத்தமா இருக்குப்பா...



Click it and Unblock the Notifications