ரொமான்ஸிற்கு பேர்போன இந்தியாவில் உள்ள இடங்கள்!!!

By Maha

காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றாலே அனைத்து காதலர்களும் குதூகலத்துடன் இருப்பார்கள். சொல்லப்போனால், ஒரே காதல் மூடு தான். ஏனென்றால் காதல் தினம் என்ற ஒன்று மட்டுமில்லாமல், காதல் வாரம் என்ற ஒன்று இருப்பதால், இந்த காதல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பரிசுகளை காதலர்கள் பரிமாறிக் கொள்வார்கள். எனவே வரப்போகும் காதலர் தினத்தினை சூப்பராக கொண்டாடுவதற்கு விரும்பினாலோ அல்லது காதலிக்கு மறக்க முடியாத காதல் பரிசாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலோ, அவர்களை ஏதேனும் ஒரு சூப்பரான ரொமான்டிக்கான இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்.

பொதுவாக காதலர் தினத்தை வீட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றி, இரவு நேர விருந்து கொடுப்பது, ஏதேனும் பூங்கா அழைத்து செல்வது என்று தான் கொண்டாடுவார்கள். ஆனால் தற்போது காதலியை உள்ளூரைத் தவிர, அவர்கள் இதுவரை பார்த்திராத இந்தியாவில் உள்ள ஒருசில ரொமான்டிக் நிறைந்துள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று அசத்தி, அவர்கள் மனதில் அழகான இடத்தை பெறலாம்.

மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சுவை என்பதால், இங்கு ஒருசில இடங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, எந்த இடத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, காதலர் தினத்தை கொண்டாடி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணாலி

மணாலி

நிறைய தம்பதியர்கள் திருமணம் முடிந்ததும், செல்ல நினைக்கும் ஒரு தேனிலவு இடம் என்றால் அது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி தான். ஏனெனில் இந்த இடத்தில் கண்களை கவரும் வகையில் அழகான பல இயற்கை காட்சிகள் உள்ளன. மேலும் இந்த இடம் மலைப் பிரதேசம் என்பதால், இது ரொமான்டிக் செய்வதற்கு ஏற்ற ஒரு இடம்.

கோவளம் கடற்கரை

கோவளம் கடற்கரை

கேரளாவில் உள்ள கோவளம் ஒரு சிறந்த சுற்றுலாத்தளம். இந்த தளத்தில் மூன்று பிறைவடிவ கடற்கரைகள் உள்ளன. அவை கலங்கரை விளக்கக் கடற்கரை, அவா கடற்கரை, சமுத்திரக் கடற்கரை என்பன. இந்த இடத்திற்கு காதலர் தினத்தின் போது வந்து, காதலர் தினத்தை துணையுடன் கொண்டாடினால் நன்றாக இருக்கும். மேலும் இந்த இடம் சூரியன் உதிப்பதையும், மறைவதையும் துணையுடன் கண்டு ரசிக்கும் படியாக அழகாக அமைந்துள்ளது.

ஜெய்சால்மர்

ஜெய்சால்மர்

ராஜஸ்தானில் அமைந்துள்ள ஜெய்சால்மர் பெரும்பாலும் அரேபிய இரவுகள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் பழங்கால கோட்டைகளை காண்பதோடு, இந்த இடத்தில் பல வகையான நம்பமுடியாத வித்தியாசமான மற்றும் சுவையான உணவுகளை சுவைக்கலாம். எனவே இந்த இடத்திற்கு வந்தும் சற்று வித்தியாசமாக காதலர் வாரத்தைக் கொண்டாடலாம்.

கோவா

கோவா

கோவா என்றாலே அனைவருக்கும் கடற்கரை தான் ஞாபகம் வரும். ஏனெனில் அந்த அளவு இந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் கடற்கரைகள் இருக்கும். இந்த இடத்திற்கு நிறைய பேர் சுற்றுலாவிற்கு வருவார்கள். இது காதலர்களுக்கு ஏற்ற ஒரு அருமையான இடம். இந்த இடத்திற்கு காதலர்கள் வந்தால், நன்கு மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வதோடு, மனம் விட்டு பேசி, சூப்பராக ரொமான்ஸ் செய்யலாம்.

காஷ்மீர்

காஷ்மீர்

இந்தியாவில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர், பூமியில் உள்ள ஒரு சொர்க்கம் என்று சொல்லலாம். இந்த இடம் மிகவும் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, நிறைய தம்பதியர்கள் மற்றும் காதலர்கள் ரொமான்ஸ் செய்வதற்கு ஒரு சிறந்த இடம். எனவே உங்கள் காதலிக்கு ஒரு பரிசு வழங்க வேண்டுமென்று நினைத்தால், இந்த இடத்திற்கு அழைத்து செல்லலாம்.

கோகர்னா

கோகர்னா

இந்த அருமையான இடம் பெங்களூருவில் இருந்து 483 கி.மீ.க்கு வெளியே அமைந்துள்ளது. இந்த இடம் ஒரு சிறந்த சுற்றுலாத்தளமாக இருப்பதோடு, இங்கு பரபலமான பல கடற்கரைகள் உள்ளன. அவை மெயின் பீச், கூடுல் பீச், ஓம் பீச், அரை நிலவு கடற்கரை மற்றும் பாரடைஸ் அல்லது கோகர்னா கடற்கரை போன்றவை. எனவே இது காதலர்கள் நேரத்தை செலவழிக்கவும், ரொமான்ஸ் செய்வதற்கும் ஏற்ற இடமாக இருக்கும்.

ஷில்லாங்

ஷில்லாங்

இந்தியாவில் உள்ள ரொமான்ஸ் செய்வதற்கு இருக்கும் சிறந்த இடங்களுள் ஷில்லாங் போன்று எதுவும் இருக்காது. ஏனெனில் இந்த இடத்தில் உள்ள ஒரு அருமையான காட்சியான மேகங்கள் பனிகளால் மூடிப்பட்டிருப்பதை தெளிவாக காணலாம்.

சிம்லா

சிம்லா

இந்த காதலர் தினம் சும்மா அசத்தலாக இருக்க வேண்டுமென்றால், குன்றுகளின் ராணி என்று அழைக்கப்படும் சிம்லாவிற்கு வரலாம். இது இமாச்சலப் பிரதேசத்தில், அமைந்துள்ள ஒரு சூப்பரான சுற்றுலாத்தளம்.

தாஜ் மஹால்

தாஜ் மஹால்

எட்டு அதிசயத்தில் ஒன்றான தாஜ் மஹால், காதல் நினைவுச் சின்னங்களுள் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. பொதுவாக காதலர்கள் இந்த மாதிரியான காதலை வெளிப்படுத்தும் இடங்களுக்கு செல்லத் தான் விரும்புவார்கள். எனவே இந்த முறை தாஜ் மஹாலுக்கு போகலாமே!!!

தேக்கடி

தேக்கடி

கோவா செல்வதற்கு திட்டம் போட்டிருந்தால், நிச்சயம் அப்போது தேக்கடியையும் பார்க்க வேண்டும். இங்கு அழகான காட்சிகள் இருப்பதோடு, சற்று வெதுவெதுப்பான காலநிலையுங்ட நிலவுவதால், ரொமான்ஸ் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion