டயானாவின் மருமகளான கேட் மிடில்டன், அரண்மனையின் பல விதிமுறைகளை உடைக்கிறாராம்!!!

By Maha

சாதாரண பெண்ணாக இருந்து, இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்திற்கு மருமகளாக சென்றவர் தான் கேட் மிடில்டன். இவர் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் வில்லியம்மை திருமணம் செய்து கொண்ட பின்னரும், எந்த ஒரு பட்டத்தையும் பெறாமல் சாதாரண ஒரு பெண்ணாக இன்னும் இருக்கிறார். இப்போது அரச குடும்பத்தின் வாரிசை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கிறார் கேட். என்ன தான் இவர் இளவரசரை மணந்தாலும், அவர் தனக்கு பிறக்க இருக்கும் குழந்தையை அரச குடும்பத்தின் வாரிசு போல வளர்க்காமல், சாதாரண ஒரு குழந்தையாகவே வளர்க்க விரும்புகிறார்.

அதனை வெளிப்படுத்தும் விதம், அவர் அரசக் குடும்பத்தின் பாரம்பரிய விதிமுறைகள் சிலவற்றை உடைத்தெறியும்படி, தன் குழந்தைக்கென்று ஒருசில புதிய விதிமுறைகளை அவரே உருவாக்கியுள்ளார். அவை:

Kate Middleton Breaking Too Many Rules?

* பொதுவாக அரச குடும்பத்தில் பிரசவத்தை அரண்மனையிலேயே தான் மேற்கொள்வார்கள். ஆனால் அதை கேட் மிடில்டன் மறுத்துள்ளார். இது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் இளவரசி டயானாவும் மருத்துவமனையில் தான் பிரசவம் பார்த்தார்.

* அது தான் போகட்டும் என்று பார்த்தால், கேட் தனது மாமியாருக்கு பிரசவம் பார்த்த செயிண்ட் மேரி மருத்துவமனையில் பிரசவம் நடக்கக்கூடாது என்று தீர்மானித்து, அதற்கு பதிலாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு தொலைவிலும், தனது வீட்டிற்கு அருகிலும் இருக்கும் ராயல் பெர்க்ஷயர் மருத்துவமனையில் தான், தன் குழந்தை பிறக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

* அதுமட்டுமல்லாமல், கேட் மிடில்டன் தனக்கு பிறக்க இருக்கும் குழந்தைக்கு அரச குடும்பத்தில் உடுத்தும் ஆடைகளை உடுத்தப்போவதில்லை என்றும் உறுதியாக சொல்வதோடு, அவர் தனது கணவரோடு, பிறக்கப் போகும் குழந்தைக்கு வேண்டிய ஆடைகளை வாங்கிவிட்டாராம்.

* முக்கியமாக, அரண்மனையில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கு நிறைய பேர் இருப்பார்கள். அத்தகைய பராமரிப்பாளர்கள் யாரும் வேண்டாம் என்று அறவே மறுத்துவிட்டார்.

* மேலும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தினால், அதனை வெளிப்படையாக செய்யமாட்டார்கள். ஆனால் அதுவும் கேட் மிடில்டனுக்கு முடிந்துவிட்டது.

இதிலிருந்து கேட் மிடில்டன் பழங்கால பாரம்பரியம் என்று இருக்கும் அரசக் குடும்பத்தின் பின்பற்றி வந்த மூடப்பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது தைரியத்தை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார் என்பது நன்கு தெரிகிறது.

Story first published: Thursday, May 9, 2013, 18:30 [IST]
Desktop Bottom Promotion