Latest Updates
-
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஜீக்யூ பத்திரிக்கை விருது விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!!
சமீபத்தில் லண்டனில் ஜீக்யூ மென் ஆஃப் தி ஏர் 2013 (GQ Men Of The Year Awards 2013) என்னும் விருது விழா நடந்தது. இதனை ஒவ்வொரு வருடமும் ஜீக்யூ என்னும் பத்திரிக்கை நடத்தி வருகிறது. இந்த வருடமும், இந்த விருது விழாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் மிகவும் ஃபேஷனான உடையில் வந்திருந்தனர். அதிலும் பிரபலமான டிசைனர்கள் வடிவமைத்த ஆடையில் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிலர் மிகவும் சிறப்பான ஆடையில் வந்து பலரது கண்களை கவர்ந்தனர். அதில் நடிகைகளில் சோனம் கபூர், ஸ்ருதிஹாசன், ராணி முகர்ஜி போன்றோரும், நடிகர்களில் க்யூட்டான ரித்திக் ரோஷன் கலந்து கொண்டனர்.
தற்போது ஸ்ருதிஹாசன் பங்குபெறும் விழாக்களின் பட்டியலானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர் இல்லாத விழாக்களே இல்லை. சரி, இப்போது க்யூ மென் ஆஃப் தி ஏர் என்னும் விருது விழாவில் பங்கு கொண்ட பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன், கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற ரஜத் டாங்ரி கவுனில் வந்திருந்தார்.

சோனம் கபூர்
சோனம் கபூர், விலங்குகளின் தோலைப் போன்று பிரிண்ட் செய்யப்பட்ட கவுனை அணிந்து வந்திருந்தார்.

நேகா தூபியா
நேகா கோபால்ட் நீல நிற ஃபுல் ஸ்லீவ் கொண்ட கவுனில் வந்தார்.

கிறிஸ்டினா அகீவா (Kristina Akheeva)
கிறிஸ்டினா சைடு டீப் கட் கொண்ட பவள நிற நம்ரதா ஜோஸிபுரா கவுனில் வந்திருந்தார்.

சோஃபி சௌத்ரி
சோஃபி, பட்டு நூலால் வேலை செய்யப்பட்ட மெரூன் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் பங்கு கொண்டார்.

ஜரின் கான்
கோபால்ட் நிற ஒற்றை தோற்பட்டை கொண்ட கவுனில் ஜரின் கான் கலக்கலாக வந்திருந்தார்.

கங்கனா ரனாத்
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாத் பிங் நிற குட்டையான ப்ரில் கொண்ட கவுனிற்கு, வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்திருந்தார்.

ராணி முகர்ஜி
நீண்ட நாட்களுட்கு பின்னர், ராணி முகர்ஜி ஒரு விழாவில் கலந்து கொள்கிறார். அதிலும் இந்த ஜீக்யூ விருது விழாவிற்கு சில்வர் நிற ஒற்றை தோள்பட்டைக் கொண்ட கவுனில் அழகாக வந்திருந்தார்.

ஃபர்ஹான் அக்தர்
ஃபர்ஹான், இந்த கருப்பு நிற சூட்டில் அழகாக உள்ளார். அவர் அவரது மனைவியுடன் வந்திருந்தார். அவரது மனைவியும் கருப்பு நிறத்தில் முழங்கால் அளவுள்ள ஷீர் கவுனில் வந்திருந்தார்.

அர்ஜுன் மற்றும் மெஹர் ஜெஸியா ராம்பால்
இந்த அழகான ஜோடி ஜீக்யூவின் சிவப்பு நிற கம்பளத்தில் அழகாக நடந்தது. இதில் அர்ஜுன் கருப்பு நிற பந்தகலா ஜாக்கெட் மற்றும் வெள்ளை நிற ஜோத்பூரி பேண்ட் அணிந்து வந்திருந்தார். மெஹர் நியான் ஆரஞ்சு நிற கவுனில் வந்திருந்தார்.

லிசா ஹேடன்
லிசா வெள்ளை நிற ஷீர் கவுனில் வந்திருந்தார். இதில் இவர் மிகவும் ஹாட்டாக இருந்தார்.

ரித்திக் ரோஷன்
க்யூட்டான ரித்திக் ரோஷன், கருப்பு நிற சில்க் சட்டைக்கு, அழகான மின்னும் ப்ரௌன் நிற ஜாக்கெட் போட்டு மிகவும் ஸ்டைலாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications