Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு பரிசுகள் கொடுக்க சில ஐடியாக்கள்!!!
வருடத்தில் எத்தனையோ விழாக்கள், பண்டிகைகள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக, ஒவ்வொரு நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒருவரை சிறந்த மனிதராக, அறிவுள்ளவர்களாக உருவாக்குபவர்கள் தான் ஆசிரியர்கள். அந்த ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஒரு தினம் தான் ஆசிரியர் தினம். பொதுவாக இந்த ஆசிரியர் தினமானது சர்வப்பள்ளி திரு. ராதாகிருஷ்ணன் பிறந்தநாளாகும். இவர் மிகச்சிறந்த தத்துவ மேதை. மாணவர்களுக்கு ஒரு நல்ல கல்வியாளராக இருந்தவர்.
இவரை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தன்று, நமக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு, அவர்களது நினைவில் என்று இருக்கும் வகையில் ஒரு பரிசுகளைக் கொடுத்தால், அந்த பரிசை பார்க்கும் போதெல்லாம், அவருக்கு நம் நினைவு வரும் அல்லவா! மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பமான ஆசிரியர்கள் இருப்பார்கள். அந்த ஆசிரியர்களுக்கு என்ன பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.
சொல்லப்போனால், ஆசிரியர்களின் மனதில் நல்ல இடம் பிடிக்க வேண்டுமானால், விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில்லை. சிறிதாக இருந்தாலும், அவர்களது நினைவில் என்றும் நீங்காதவாறான பரிசைக் கொடுக்க வேண்டும். அதிலும் பரிசுப் பொருட்களை பள்ளியில் படிக்கும் போது மட்டும் தான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் உங்கள் விருப்பமான ஆசிரியருடன் தொடர்ப்பில் இருந்தாலும், பரிசுப் பொருட்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
சரி, இப்போது ஆசிரியர்களுக்கு கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசுப்பொருட்கள் சிலவற்றைக் கொடுத்துள்ளோம். அதில் பிடித்ததை வாங்கிக் கொடுத்து, ஆசிரியரின் மனதில் இடம் பெறுங்கள்.

ஷோ பீஸ்
பெரும்பாலானோர் வீடுகளில் ஷோ கேஸ் நிச்சயம் இருக்கும். அதிலும் ஆசிரியர் வீடுகளில் நிச்சயம் சிறிய ஷோ கேஸானது இருக்கும். எனவே ஆசிரியர் தினத்தன்று, அவர்களுக்கு பூ ஜாடி, அழகான மின்சார விளக்கு போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் தினமும் பூ ஜாடியில் பூவை மாற்றும் போதெல்லாம் அவர்களுக்கு நம் ஞாபம் வரும்.

பூக்கள்
மாணவர்கள் வகுப்பறைக்கு வரும் ஆசிரியருக்கு பூங்கொத்துக்களை கொடுத்து வரவேற்கலாம். இதனால் அது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, அவர்களது மனதை குளிரச் செய்யும்.

டைரி மற்றும் பேனா
ஆசிரியர்கள் டைரி மற்றும் பேனாவை அதிகம் உபயோகிப்பார்கள். எனவே இதையும் கிப்ட்டாக கொடுக்கலாம். இதனால் இது ஒரு உபயோகமான பொருளை கொடுத்தது போன்றும் இருக்கும்.

புத்தகம்
ஆசிரியருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு நல்ல பயனுள்ள புத்தகத்தையும் வாங்கி பரிசாகக் கொடுக்கலாம்.

வாழ்த்து அட்டை
மற்றொரு சிம்பிள் ஐடியா என்னவென்றால், ஆசிரியருக்கு அழகாக ஒரு வாழ்த்து அட்டையை வாங்கி, அதில் அவர்களது மனதை தொடும் வகையில், எனக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுத்து, அறிவுள்ளவனாக ஆக்கியதற்கு 'நன்றி' என்று எழுதிக் கொடுக்கலாம்.

சாக்லெட்
பெரும்பாலானோர் கடைபிடிக்கும் ஒரு பிரபலமான பரிசுப் பொருள் தான் சாக்லெட். ஆகவே ஆசிரியருக்கு வித்தியாசமான சுவையுடைய சாக்லெட்டுகளைக் கொடுக்கலாம். இல்லாவிட்டால், வீட்டில் அவர்களுக்கு என்று ஏதாவது இனிப்புக்களை நீங்களே செய்து கொண்டு வந்து கொடுக்கலாம்.

பேப்பர் வெயிட்
இது ஒரு சாதாரணமானப் பொருள். அதே சமயம், ஆசியருக்கு மிகவும் பயனுள்ள ஒரு பொருளும் கூட. ஆகவே நல்ல அழகான பேப்பர் வெயிட்டை வாங்கி பரிசாக கொடுக்கலாம்.

பை/பர்ஸ்
உங்களுக்கு பிடித்த ஆசிரியர் பெண்ணாக இருந்தால், ஸ்பெஷலாக இருக்கும் வகையில் அவர்களுக்கு அழகான ஹேண்ட் பேக்/பர்ஸ் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் அதை அவர்கள் தினமும் உபயோகிக்குமாறு தேர்ந்தெடுப்பது அவசியம்.



Click it and Unblock the Notifications