Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
துபாயில் நடைபெற்ற ஆசியா விஷன் விருது விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!!
சமீபத்தில் துபாயில் ஆசியா விஷன் விருது விழா நடைபெற்றது. அதில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் வந்த அனைத்து பிரபலங்களும் மிகவும் அழகான உடையில் வந்து கலக்கினர். மேலும் இந்த விழாவின் போது அனைத்து நடிகர் நடிகைகளையும் ஒன்றாக பார்க்கலாம்.
அதுவும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் வந்திருந்தனர். அதில் நடிகைகளில் காஜல் அகர்வால், நஸ்ரியா, ப்ரீத்தி ஜிந்தா மற்றும் பலரும், நடிகர்களில் மம்மூட்டி, மாதவன், ஜான் அபிரஹாம் போன்ற பலர பிரபலங்களும் கலந்து கொண்டு அசத்தினர்.
இங்கு அந்த ஆசியா விஷன் விருது விழாவில் பங்கு கொண்ட பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது...

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் இந்த விழாவிற்கு கடல் பச்சை நிற ஜொலிக்கும் கவுனில் க்யூட்டாக வந்திருந்தார்.

நஸ்ரியா
தற்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நஸ்ரியா கூட, ஆசியா விஷன் விருது விழாவில் கலந்து கொண்டார். மேலும் இந்த விழாவிற்கு அவர் நீல நிற உடையில் வந்திருந்தார்.

கரீஷ்மா கபூர்
பாலிவுட் நடிகையான கரீஷ்மா கபூர் வெள்ளை மற்றும் கருப்பு கலந்த காலர் கொண்ட உடையில் செம அழகாக வந்திருந்தார்.

ராணி முகர்ஜி
எப்போதும் புடவையில் வந்து கலக்கும் ராணி முகர்ஜி, இந்த ஆசியா விஷன் விருது விழாவிற்கு அழகான கருப்பு நிற புடவையை அணிந்து, கைகளுக்கு பலவண்ண வளையல்களை அணிந்து சிம்பிளாகவும், அதே சமயம் அழகாகவும் வந்திருந்தார்.

ப்ரீத்தி ஜிந்தா
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூட புடவையில் வந்திருந்தார். அதிலும் கோல்டன் மற்றும் சில்வர் கலந்த புடவையில் கலக்காக வந்திருந்தார்.

ஸ்வேதா மேனன்
நடிகை ஸ்வேதா மேனன், கருப்பு மற்றும் நீலம் கலந்த நெட்டட் புடவையில் வந்திருந்தார். அதிலும் இநத் உடைக்கு இவர் மேற்கொண்டிருந்த ஸ்டைல், முற்றிலும் பாரம்பரிய தோற்றத்தைக் கொடுத்தது.

மம்மூட்டி
நடிகர் மம்மூட்டி அழகான பூப்போட்ட சட்டையில் வந்திருந்தார். இதில் இவரைப் பார்க்கும் போது இன்றும் எனது இளமை குறையவில்லை என்பதை சொல்லாமல் வெளிப்படுத்தியது.

மாதவன்
அனைத்து இளம் பெண்களையும் கவர்ந்த நடிகர் மாதவன் கூட, இந்த ஆசியா விஷன் விருது விழாவில் கலந்து கொண்டார். ஆனால் என்ன கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டார்.

ஜான் ஆபிரஹாம்
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், ஆசியா விஷன் விருது விழாவில் மிகவும் அழகான க்ரே நிற பளபளக்கும் டாக்ஷிடோவில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications