For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொக்கிஷம் போன்று இருக்கும் 9 பணக்கார கோவில்கள்!!!

By Maha
|

இந்தியாவில் தெய்வ நம்பிக்கைகள் அதிகம் உள்ளன. அதற்கேற்றாற் போல் கோவில்களும் நிறைய உள்ளன. அதுவும் தெருவோரத்தில், மரத்தின் அடியில், ஏன் எங்கு திரும்பினாலும் சிறு கோவில்களை காணலாம். ஆனால் அவை அனைத்துமே பிரபலமானதாக இருப்பதில்லை. இருப்பினும் ஒருசில கோவில்கள் மிகவும் பிரபலமாகவும், இந்தியாவின் பொக்கிஷம் போன்றும் இருக்கின்றன. ஏனெனில் அத்தகைய கோவில்கள் பல ஆண்டுகளாக இருக்கிறது.

எனவே அந்த கோவில்களுக்கு தினமும் நிறைய பேர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதனால் அந்த கோவில்களுக்கு நிறைய நன்கொடைகளும் வரும். இந்த நன்கொடைகளால் கோவில்களை பலவாறு மேம்படுத்துகின்றனர். இப்போது இந்தியாவின் பொக்கிஷமாக இருக்கும் சில பணக்கார கோவில்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, செல்லாத கோவில்களுக்கு உடனே சென்று வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பத்மநாபசுவாமி கோவில்

பத்மநாபசுவாமி கோவில்

கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த கோவிலில் பல கோடிக்கணக்கில் பொக்கிஷங்கள் உள்ளது. இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே மிகவும் பிரபலமான கோவிலாகும்.

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவில் இரண்டாவது பணக்கார கோவில்களுள் ஒன்று. இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60,000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் இங்கு 650 கோடிக்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் உள்ளது. எனவே தான் இந்த கோவில் பணக்கார கோவில்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வைஷ்ணவ தேவி கோவில்

வைஷ்ணவ தேவி கோவில்

இந்த கோவில் மிகவும் பழமையானது மட்டுமல்ல, செல்வம் அதிகம் நிறைந்துள்ள கோவில்களுள் ஒன்றாகும். இங்கு மாதா தேவியின் ஆசியைப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இங்கு வருடத்திற்கு 500 கோடி மதிப்பீட்டில் வருமானம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

சித்தி விநாயகர் கோவில்

சித்தி விநாயகர் கோவில்

இது மற்றொரு பணக்கார கோவிலாகும். இந்த கோவிலில் நிறைய பாலிவுட் நடிகர், நடிகைகள் விநாயகரின் ஆசியைப் பெற வருவதோடு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். மேலும் இந்த கோவிலுக்கு நன்கொடையாக 3.5 கிலோ தங்கத்தை கொல்த்தாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொடுத்துள்ளார். இதனை வைத்து இந்த கோவிலின் குவிமாடம் மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.

ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோவில்

ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோவில்

சீக்கிய யாத்ரீகத்தில் மிகவும் பிரபலமானதாக ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோவில் உள்ளது. இந்த கோவிலின் விதானம் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டது. இதன் மேல் 'ஆதி கிரந்த' (குரு கிரந்த சாஹிப்) விலையுயர்ந்த கற்கள், வைரம் மற்றும் இரத்தினங்களைப் பதித்தார்.

சோம்நாத் கோவில்

சோம்நாத் கோவில்

பல முறை அழிக்கப்பட்டும், ஜோதிலிங்கம் இன்றும் ஆன்மீக பக்தர்கள் செல்லும் தளங்களுள் ஒன்றாக உள்ளது.

பூரி ஜெகன்னாத்

பூரி ஜெகன்னாத்

ஒரிஸ்ஸாவின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பூரியில் உள்ள மிகவும் பழமையான கோவில் தான் ஜெகன்னாத். இதுவும் செல்வம் அதிகம் பொங்கும் கோவில்களுள் ஒன்றாகும்.

காசி விஸ்வநாதர் கோவில்

காசி விஸ்வநாதர் கோவில்

வாரணாசியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் பணக்கார கோவிலில் காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் முக்கியமானது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் பணக்கார கோவில்களுள் ஒன்றானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Richest Temples Of India

Temple is a place of worship for Hindu devotees. And you can find en number of temples in this spiritual country. Every nook and corner, below the tree shades and near footpaths, you will find a big or small temple. But, there are few famous temples that are not only highly religious but one of the richest temples in India.
Desktop Bottom Promotion