Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பெரியவர்களாக இருப்பதை விட குழந்தைகளாக இருப்பதே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!!!
நாம் சிறு குழந்தைகளாக இருந்த போது, எப்போது பெரிய ஆளாக வளருவோம் என்று ஏங்குவோம். இப்போது பெரியவர்களாக ஆகிவிட்டோம். ஆனால் சந்தோஷாமாக இருக்கிறோமா? அநேகபேரின் பதில் "குழந்தைப் பருவத்திலேயே இருந்திருக்கலாம்" என்று தான் இருக்கும்.
நாம் வளர்ந்த பின் வாழ்க்கையின் மாற்றத்தை பார்த்து அடிக்கடி குறை சொல்வோம். அப்போது தான் குழந்தை பருவத்தை நினைத்து ஏங்குவோம். இதை உணரந்தவர்கள், உங்கள் குழந்தை பருவத்தின் பொன்னான நாட்களை கண்முன் கொண்டு வந்து மகிழுங்கள். சரி, பெரியவர்களாக இருப்பதை விட குழந்தைகளாக இருப்பதே மேல் என்பதற்கு சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.

1. ஒரு ராஜகுமாரியாக கொண்டாடப்படுவீர்கள்:
உங்களுக்கு பசிக்கிறதா? உங்கள் அம்மா உங்களுக்கு சத்துள்ள, சுவையான உணவை தயாரிக்க உடனே சமயலறைக்கு ஓடுவார்கள். நீங்கள் கீழே விழுந்து விட்டீர்களா? உங்களை தூக்கி விட மட்டுமல்லாமல், சமாதானம் படுத்தவும் பத்து பேர் ஓடி வருவார்கள். நீங்கள் லேசாக வாயைத் திறந்தால் போதும், உங்கள் மழலை பேச்சை கேட்க, உங்களை சுற்றி ஒரு கூட்டம் ஆவலோடு சுற்றி விடும், அது ஏதாவது உளறலாக இருந்தாலும் கூட. இப்போது சொல்லுங்கள், இந்த வாழ்க்கை முறை ஒரு ராஜகுமாரியின் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் எந்த விதத்தில் குறைந்தது.

2. எந்த ஒரு பொறுப்பைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை:
குழந்தையாக இருந்தால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். உங்கள் வீட்டின் சொந்தக்காரர் உங்கள் இடத்துக்கு வந்து சண்டையிடுவார் என்ற கவலை உங்களுக்கு தேவையில்லை; ஏனென்றால் வாடகை கொடுக்க போவது நீங்கள் இல்லை. உங்கள் மேல் அதிகாரி உங்களுக்கு கொடுத்த வேலையை கொடுத்த நேரத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டும் என்ற கவலையும் உங்களுக்கு இல்லை. உங்களுக்கு இருக்கும் ஒரே கவலை பள்ளியில் கொடுக்கும் வீட்டு பாடத்தை குறித்த நேரத்திற்குள் முடித்து, சீக்கிரம் தூங்கச் செல்வது மட்டும் தான்.

3. மதிய நேரம் குட்டி தூக்கம் போடலாம்:
குழந்தைகளுக்கு மதிய நேரம் தூக்கம் மிகவும் அவசியமானது. இன்றைய காலக்கட்டத்தில் நீண்ட நேர அலுவலக மற்றும் வீட்டு வேலைகள் இருப்பதால், மதிய தூக்கம் என்பது பெரியவர்களுக்கு கைக்கு எட்டாத ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. மீண்டும் குழந்தைகளாக மாறி விட்டால், வாழ்க்கை எவ்வளவு சுகமாக இருக்கும் என்று தோன்றுகிறதா?

4. விளையாட அதிக நேரம் கிடைக்கும்:
குழந்தைகளாக இருந்த போது, விளையாட அதிக நேரம் எடுத்துக் கொள்வது, நமது பிறப்புரிமையாக இருந்தது. ஏன், சொல்லப்போனால் இன்னும் அதிக நேரம் வேண்டும் என்று கோரிக்கையையும் நாம் வைக்கலாம். வீட்டுப் பாடத்தினால் எவ்வளவு சுமை ஏற்பட்டாலும் அல்லது பரீட்சைக்கு நாட்கள் அருகில் இருந்தாலும், தினசரி விளையாடுவதை மட்டும் நாம் நிறுத்துவதில்லை. ஆனால் வளர்ந்த பின் நமக்கு ஓய்வு கிடைப்பதெல்லாம் வார இறுதி நாட்களில் மட்டும் தான். சில நேரம் அது கூட கிடைப்பதில்லை.

5. எல்லையில்லா சக்திகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்:
குழந்தைப் பருவம் என்பது ஹெர்குலசிற்கு உள்ள பலத்தை போல் எல்லையில்லா சக்திகளைக் கொண்டது. இந்த பருவத்தில் அயர்ச்சி அடைவதே கிடையாது. மேலும் மூட்டு வலி மற்றும் தசை பிடிப்புகள் போன்றவற்றை எண்ணி வருத்தப்பட தேவையில்லை. ஏனெனில் எலும்புகள் இரும்பை போன்று உறுதியாக இருக்கும். ஒரு நாள் முழுவதும் கால்பந்து விளையாடினால் கூட, மறுநாள் மூட்டு வலி, முதுகு வலி என்று குறை கூற மாட்டீர்கள்.

6. பேசும் உரிமையை பெற்றிருக்கிறீர்கள்:
ஒரு குழந்தை என்ன சொன்னாலும் சரி, அதை யாரும் அலட்சியப்படுத்துவதில்லை. அது ஏதேனும் உளறினால் கூட அதற்கு செவி சாய்ப்பர். ஆனால் வளர்ந்த நிலையில் இருக்கும் நமக்கோ, மனதில் தோன்றிய படைப்புத் திறனை வெளிப்படுத்த உடனே தைரியம் கிடைப்பதில்லை. மற்றவர்கள் நம்மை முட்டாளாக நினைப்பார்களோ என்ற பயமே அதற்கு காரணம்.

7. அதிக பகையாளிகள் இருப்பதில்லை:
தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் யாரையாவது எத்தனை முறை காயப்படுத்தி, அதனால் பகையை வளர்த்திருக்கிறீர்கள்? கண்டிப்பாக ஒரு முறையாவது இது நடந்திருக்கும்? அதுவும் குழந்தையாக இருந்தால், யாரையாவது வாய் வழியாக காயப்படுத்தினால், அதைப் பற்றி பெரிதும் கவலைப் படத் தேவையில்லை. வயதானவர்களை பிடிப்பதில்லை என்று அண்டை வீட்டில் வாழும் வயதானவர்களை பார்த்து சொன்னால், உங்களை பார்த்து சிரிக்க மட்டும் தான் செய்வார்கள். மேலும் நீங்கள் குழந்தையாக இருந்தால், பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். மேலும் நண்பனிடம் கடுமையாக சண்டையிட்டாலும், அடுத்த நாளே மிகவும் நெருக்கமாக இருக்கலாம். பகை என்பது பெரியவர்களுக்குள் வாழும் ஒரு குணம். அதனால் குழந்தையாக இருக்கும் போது, குறைந்த அளவே பகைவர் இருப்பர். ஏன் அது கூட இல்லாமல் போகலாம்.

8. ஏதவாது வேண்டும் என்று கேட்கிறீர்களா, அது உங்களுடையதுதான்:
குழந்தையாக இருந்த போது அநேகமாக,பெற்றோர்கள் செல்லமாக வைத்திருந்திருப்பார்கள். அப்போது அடம்பிடித்து கேட்கும் சின்ன சின்ன பொருளைக் கூட உங்களுக்கு வாங்கி தந்து விடுவார்கள். ஆனால் இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்கள், அதனால் உங்கள் தேவைகளை நீங்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். விலை உயர்ந்த ஆடை வேண்டுமா, அதற்கு பணம் சேர்க்க கொஞ்சம் வேலை அதிகமாக செய்வீர்கள். புது கார் வேண்டுமா? அப்படியானால் அதற்கு உண்டான பணத்தைச் சேர்க்க மற்ற செலவுகளை குறைக்க வேண்டும்.

9. அனைவருக்கும் குழந்தையை பிடிக்கும்:
இது உண்மை. ஒரு குழந்தையாக உங்கள் செயலுக்கும், பேச்சுக்கும் பல பாராட்டு மழை கிடைத்திருக்கும் அல்லவா? அதற்கு நீங்கள் எந்த வித மேக்கப்போ அல்லது ஆடை அலங்காரமோ செய்யத் தேவையில்லை. அதற்கு ஒரே காரணம் நீங்கள் ஒரு குழந்தை, அதனால் இயற்கையிலேயே அனைவருக்கும் உங்களிடம் ஒரு ஈர்ப்பு ஏற்படும். ஆனால் வளர்ந்த நீங்கள், உங்கள் அழகை யாரேனும் சிறிதளவாவது பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் குறைந்தது ஒரு மணி நேரமாவது அதற்கு உங்களை நீங்கள் தயார் செய்ய வேண்டும்.

10. உடைந்த இதயத்தை விட காயப்பட்ட முட்டியே மேல்:
இந்த பழமொழியை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம் இல்லையா? இதில் அவ்வளவு உண்மை உள்ளது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் இதயம் காயப்பட்டிருக்கும். அது எவ்வளவு வலி கொடுக்கும் என்று அனைவரும் அறிந்ததே. இதனோடு ஒப்பிடுகையில் அடிபட்ட மூட்டின் வலி குறைவே. முட்டி, காயப்பட்ட இதயத்தை விட வேகமாக காய்ந்துவிடும். சில நேரம் காயப்பட்ட இதயத்தின் வலி காலம் முழுவதும் நீடிக்கும். இதுவே நீங்கள் குழந்தையாக இருந்தால் இதயம் காயப்படுவது என்றால் என்னவென்று கூட உங்களுக்கு தெரியாது. எனவே குழந்தைப் பருவமே மேல் என்று நாம் கூறுவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
இதையெல்லாம் படிக்கும் போது உங்களுக்கு மீண்டும் குழந்தைப் பருவத்துக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதா? அது கண்டிப்பாக நடக்கப் போவதில்லை. ஆனால் உங்களுக்குள் இருக்கும் குழந்தையை எப்போதாவது வெளிக்கொண்டு வரலாம் அல்லவா; அது கண்டிப்பாக நடக்கும். அப்படி குழந்தைத்தனமாக நடந்து, சிறுப்பிள்ளை போல சிரித்து குறும்பு செய்ய என்றுமே பயம் கொள்ளாதீர்கள். அன்பான வாழக்கையை வாழுங்கள்!



Click it and Unblock the Notifications











