Latest Updates
-
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம்
உலகின் டாப் 10 இந்து கோவில்கள்.. எங்கு இருக்குனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீர்கள்..!
இந்தியாவில் மட்டுமல்ல உலககெங்கிலும் இந்து கோவில்கள் பிரம்மாண்டமாகவும், அற்புத கட்டிடகலையுடன் கட்டப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட இந்த கோவில்களில் எந்தவித இயந்திர ஏற்பாடு இல்லாமல் கட்டப்பட்டன. அதில் தமிழகத்தில் மட்டும் 7 கோயில்கள் உள்ளன.. ஆச்சரியமாக உள்ளதா? ஆம் உலகிலேயே மிகப்பெரிய கோயில்களின் பட்டியலில் நம் தமிழகத்தை சேர்ந்த 7 கோவிகள் உள்ளன. வாங்க அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
அக்ஷர்தாம் கோயில், டெல்லி
சுவாமநாரயண் கோயில் 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 10,000 ஆண்டுகள் பழமையான கலாச்சராம், ஆன்மீகத்தை இந்த கட்டிடக்லை சித்தரிக்கிறது. இந்த அக்ஷர்தாம் கோயில் 2007 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தது, இது உலகின் மிகப்பெரிய விரிவான இந்துக் கோயிலாகும், இது உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை கொண்டுள்ளது.. கோவில் வளாகத்தின் IMAX தியேட்டர் மற்றும் ஒரு பிரமிக்க வைக்கும் இசை நீரூற்று ஆகியவை உள்ளன.

அங்கோர் வாட் கோயில், கம்போடியா
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில் வளாகம் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்து கோவிலாகும். சிம்ரிப் நகரில் மீகாங் ஆற்றின் கரையில் கட்டப்பட்ட இந்த கோயில், கெமர் கட்டிடக்கலையின் பழமையை காட்டுகிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அது மட்டுமல்லாமல் இது உலகின் எட்டாவது அதிசயம் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் அங்கோர் வாட், மனிதகுலத்தின் கட்டிடக்கலை திறன் மற்றும் ஆன்மீக ஆழத்திற்கு சான்றாக உள்ளது. முதலில் விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாக கட்டப்பட்டது, அது காலப்போக்கில் புத்த தளமாக மாறியது. இன்று, இது கம்போடியாவின் சின்னமாக உள்ளது, நாட்டின் கொடியை கூட தற்போது அலங்கரிக்கிறது.
அண்ணாமலையர் கோயில், திருவண்ணாமலை
அண்ணாமலையர் கோயில் 1,01,171 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவில் இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாகும். பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புக்குரிய தலம். ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது. இங்கு மலையே இறைவனின் சொரூபம். சோணாசலம், அருணாச்சலம், அண்ணாமலை எல்லாம் இத்தலத்தைக் குறிப்பவையே.
பெலூர் மடம், மேற்கு வங்கம்
ஹூக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ள பேலூர் மடம் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது. இது நாற்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது அனைத்து மதங்களின் ஒற்றுமையின் அடையாளமாக இந்து, இசுலாமிய, பௌத்த மற்றும் கிறித்தவக் கலை மற்றும் உருவகங்களை இணைக்கும் கட்டிடக்கலைக்கு உதாரணமாக உள்ளது.
பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சை
1000 ஆண்டு பழமையான தஞ்சை பெரியக்கோவில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கு கட்டப்பட்ட மிகப்பெரிய இந்து கோவில். கிரானைட் கல்லினால் கட்டப்பட்ட இந்த கோவில் யுனெஸ்கோவால் உலக பாரம்பாரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏகாம்பரேஸ்வர் கோவில், காஞ்சிபுரம்
காஞ்சி ஏகாம்பரேஸ்வர் கோவில் பிரதிபெற்ற சிவன் கோவில். இந்த கோவில் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
ஜம்புகேஷ்வர் கோவில், திருச்சி
திருச்சி திருவானைக்காவல் கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில். ஆறாம் நூற்றாண்டில் இந்த திருத்தலம் கட்டப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி
திருநெல்வேலியில் அமைந்துள்ள இந்த கோவில் சுமார் 71,00 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவின் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
ஸ்ரீரங்கம், திருச்சி
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. ஸ்ரீரங்கம் இந்தியாவில் மிகப்பெரிய கோயிலாகும், உலகின் இராண்டவது பெரிய கோயிலாகவும் உள்ளது.
தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்
சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படும் நடராஜா கோயில் சிவபெருமானின் முக்கிய கோயில்களில் ஒன்றாகும். 1,06,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, நடராஜராக சிவனின் தனித்துவமான வடிவம் கோயிலின் முதன்மை தெய்வம் மற்றும் அவர் கோயிலின் ஒவ்வொரு கல் மற்றும் தூணிலும் காணப்படுகிறார்.



Click it and Unblock the Notifications











