For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...

Their day soon turned into one of the scariest days of their lives when their baby daughter was born prematurely, was of extremely low birth weight and suffered from respiratory distress syndrome.

By R. Suganthi Rajalingam
|

நோய் என்பது நம்மை எப்போது வேண்டுமானாலும் அண்டலாம். அப்படி கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத சமயத்தில் பாதிப்புக்குள்ளாகிய பெண் குழந்தை தான் ராஜேஷின் குழந்தை. ஒவ்வொருவரும் குழந்தை பிறக்க போகும் நாளை எண்ணி ஏங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். அப்படித்தான் ராஜேஷூம் அவர் மனைவியும் தன் செல்லக் குழந்தையை எண்ணி மனதில் உற்சாகத்துடன் கனவு கண்டு வந்தனர். இந்த உலகத்திற்கு தங்களுடைய செல்ல மகளை வரவேற்க அவர்கள் தயாராகி வந்தனர்.அவர்களின் கனவும் நிறைவேறியது.

உயிருக்கு போராடும் தினக்கூலியின் குழந்தை காப்பாற்ற உதவி

மே மாதம் அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்சம் கூட நிலைக்கவில்லை. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் பல்மோனரி அட்ரஸ்யா (இதய வால்வு கோளாறு) என்ற மோசமான நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதயத்தில் உள்ள பல்மோனரி வால்வு மிகவும் பலவீனமாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் இதயத்திற்கும் மற்ற உடல் பாகங்களுக்கும் இரத்தம் சரிவர பாய முடியாமல் தடைபடுகிறது. இதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்றால் அந்த பிஞ்சு குழந்தைக்கு உடனே அறுவை சி‌கி‌ச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவிட்டனர்

இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள 5 லட்சம் வரை தேவைப்படுகிறது. இப்பொழுது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் தான் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 23 நாட்கள் அந்த குழந்தை தன் வாழ்க்கையை மருத்துவ மனையிலயே கழித்து வருகிறது.

ராஜேஷ் ஒரு தினசரி கூலித் தொழிலாளி. அவரின் மாத வருமானம் வெறும் 4000 ரூபாய் மட்டுமே.தன்னுடைய ஒரு வருமானத்தை கையில் வைத்துக் கொண்டு குடும்பத்தை ஓட்டி வருகிறார். குழந்தை பிறப்புக்காகக் கூட தனது நண்பர்களிடம் இருந்து 20000 ரூபாய் வரை கடன் வாங்கி உள்ளார். அது குழந்தையின் மருத்துவ செலவுக்கே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது அறுவை சி‌கி‌ச்சைக்கு 5 லட்சம் என்பது ராஜேஷ் நினைச்சு கூட பார்க்காத ஒரு தொகையாக உள்ளது. இப்பொழுது அவரின் நிலைமைக்கு உதவ என்று யாரும் இல்லை.

எனவே அவர் நமது உதவிக் கரத்தை நாடி வந்துள்ளார். அவரின் செல்ல மகளை காப்பாற்ற நம்மிடம் வேண்டுகிறார். அவருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்து ஒரு தந்தையின் முகத்தில் சந்தோஷத்தை காண்போம். உயிருக்கு போராடும் அந்த பிஞ்சு குழந்தையை காக்க ஒரு சிறு உதவி செய்யுங்கள். நம் சிறிய உதவி மற்றவர் வாழ்க்கையில் ஒளி வீசட்டும்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பரப்புங்கள். இதுவும் ஒரு சிறிய உதவி தான். உயிர் காக்க உதவி கரம் நீட்டுங்கள்.

English summary

A Labourer Struggles To Save His Newborn Girl With The Daily Wages He Earns

Their day soon turned into one of the scariest days of their lives when their baby daughter was born prematurely, was of extremely low birth weight and suffered from respiratory distress syndrome.
Story first published: Tuesday, June 19, 2018, 15:28 [IST]
Desktop Bottom Promotion