Latest Updates
-
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம் -
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
ஜூலை 16-ல் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்காய் பாயா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - ஆட்டுக்கால் பாயாவை விட சூப்பரா இருக்கும் -
உங்க முகம் கருப்பா, டல்லா இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
1 தேங்காயும், 1 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
'ஸ்ராவண' மாதத்தில் சிவபெருமானின் ஆசியால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவில்களிலும், பூஜையிலும் தேங்காய் ஏன் உடைக்கப்படுகிறது? அதற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா?
நறுக்குன வெங்காயத்தை தெரியாம கூட ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாதாம்... அப்படி வைச்ச என்ன நடக்கும் தெரியுமா?
நமது வாழ்க்கை முறையை சுலபமாக்கியதிலும், உணவு முறையை மோசமாக்கியத்திலும் குளிர்சாதனப்பெட்டிக்கு முக்கியப்பங்கு உள்ளது. குளிர்சாதனப் பெட்டிகள் உணவு கெட்டுப்போவதைத் தடுக்கவும், அவற்றை நீண்ட காலத்திற்கு சேமிக்கவும் உதவுகிறது.
காய்கறிகள் முதல் பால் வரை அனைத்தும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படுகின்றன, அவை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாகவும் உண்ணக்கூடியதாகவும் இருக்கும். பொதுவாக காலை உணவு/மதியம் உணவு தயாரிப்பதற்கு காலையில் எடுக்கும் நேரத்தை குறைப்பதற்காக நறுக்கிய காய்கறிகளை ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்பது வழக்கம்.

ஆனால், நறுக்கிய வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நறுக்கிய வெங்காயத்தை ஏன் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது?
வெங்காயம் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அதில் கந்தகம் அதிகமாக இருக்கிறது. இதுதான் வெங்காயத்தை நறுக்கும் போது கண்ணீரை உண்டாக்குகிறது. நறுக்கிய வெங்காயத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால், அதில் பாக்டீரியாக்கள் வளரும்.
சுற்றுச்சூழலில் நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் உள்ளன, இதன் காரணமாக வெங்காயம் ஆக்ஸிஜனேற்றப்பட்டு, வெங்காயம் விரைவில் கெட்டுவிடும். இந்த வெங்காயத்தை உட்கொள்வதால், வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்போகவும் வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, வெங்காயத்தில் இருக்கும் சத்துக்களும் குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நேரம் வைத்திருந்தால் இழக்கப்படுகிறது. வெங்காயத்தை வெட்டும்போது உங்கள் கையில் வரும் வெங்காயச் சாறு, காற்றுடன் தொடர்பு கொள்வதால் வெங்காயத்தில் பாக்டீரியாக்கள் வளரும். அதனால்தான் வெட்டப்பட்ட வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் எப்படி சேமிக்க வேண்டும்?
- நறுக்கிய வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம், ஆனால் அதனை நேரடியாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது, மாறாக அதனை ஒரு பெட்டியில் வைப்பதை மறந்து விடாதீர்கள். வெங்காயத்தை ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பது எப்போதும் அதனை புதியதாக வைத்திருக்கும், மேலும் நீங்கள் அதை நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.
- வெங்காயத்தை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, அவற்றை ஒரு பாலிதீன் பையில் வெட்டி வைக்கவும். இப்படி செய்வதால் வெங்காயம் கெட்டுப் போகாது.
- நீங்கள் ஒரு பிஸியான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால், மற்றும் இரவே வெங்காயத்தை நறுக்க வேண்டும் என விரும்பினால், வெங்காயத்தை காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து, குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
- உங்கள் சமையலுக்கு முன் ப்ரெஷாக வெங்காயத்தை வெட்ட வேண்டும் என்றால், திறந்த கொள்கலனில் வெங்காயத்தை வைக்க வேண்டாம். எப்போதும் ஒரு மூடியால் மூடி வைக்கவும்.



Click it and Unblock the Notifications
