Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
வீட்டில் எந்த திசையில் தங்க நகைகளை வைக்கலாம்.. வாஸ்து என்ன சொல்லுகிறது..!
ஜோதிட ரீதியாக வியாழன் கிரகம்தான் தங்கத்தின் அதிபதியாக கருதப்படுகிறார். வியாழனுக்குரிய கடவுள் குரு பகவான் ஆவார்.. அந்த குருவுக்கு உரிய உலோகம் தங்கம்.. அந்த தங்கத்தை வீட்டில் எங்கு வைக்கலாம்? வாஸ்து என்ன சொல்லுகிறது? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும் சரியான திசை மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே அவற்றை பின்பற்றினால் அந்த வீட்டில் நேர்மறையான ஆற்றல் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை..

1. வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு தடைகளை எளிதில் கடக்க சில வழிகள் சொல்லப்பட்டுள்ளன.. அதில் குறிப்பாக வீட்டில் நாம் வைத்திருக்கும் பொருட்களை சரியான திசையில் வைக்க வேண்டும்.. அவ்வாறு வைப்பதினால் பல நன்மைகள் கிடைக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் இதுபோன்ற சில குறிப்புகள் உள்ளன. வாஸ்து சாஸ்திரப்படி தங்கத்தை வீட்டில் எங்கு வைத்தால் பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
2. வாஸ்துபடி, வீட்டில் தங்கம் வாங்குவது மற்றும் ஒரு சிறப்பு இடத்தில் வைத்திருப்பது பல பிரச்சனைகளை சமாளிக்கும். வீட்டில் எந்த திசையில் தங்கம் இருந்தால் செல்வமும் அதிர்ஷ்டமும் இரட்டிப்பாகும். உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நீக்கப்படும் தெரியுமா? தென்மேற்கு திசைதான்..
3. தங்க ஆபரணங்களை வீட்டின் தென்மேற்கு திசையில் வைத்தால், வீட்டில் தங்கம் பெருகும் என்பது ஐதீகம். வடமேற்கு மூலையிலும் தங்கத்தை வைக்கலாம். தங்கம் வைக்கப்பட்டுள்ள அறையின் சுவர்கள் மற்றும் தளம் மஞ்சள் நிறமாக இருந்தால் நல்லது. இ
4. வாஸ்துவில் தங்கம் அலமாரியில் தனி லாக்கரில் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. தங்கம் வைக்கப்படும் அலமாரியின் கதவு வடக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அதிக லாபம் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அதிக செல்வத்தை கொண்டு வர கண்ணாடி பொருட்களை அலமாரியில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள லாக்கரின் கதவு ஒருபோதும் குளியலறையின் முன் இருக்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
5. வாஸ்து சாஸ்த்திரத்தின் படி, இந்த அனைத்து குறிப்புகளையும் பின்பற்றினால் நல்லது.. அதனால் குபேரர் செல்வத்தையும், வளத்தையும் பெருக பண்ணுவார் என்பது ஐதீகம்.
6. இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வீட்டிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்பும், அமைதியும் பெருகும். மேலும் தங்கம் வாங்குவதும் அதிகரிக்கும். அதேசமயம் தங்கம் அல்லது வேறு எந்த ஆபரணங்களையும் வாங்கி வடமேற்கு மூலையில் வைக்கவே கூடாது. இதனால் இருப்பது போய்விடும் என்பது நம்பப்படுகிறது.
7. பொதுவாக வீட்டில் தங்கம் வைப்பது மிகவும் சிறப்பு என்பார்கள். ஒன்று பூமிக்கடியில், மற்றொன்று உச்ச இடம். சிலர் தரைக்கு அடியில் லாக்கர் வைப்பது போது வைக்கலாம். அல்லது ஒரு பீடம் போன்று அமைத்து, உயரமான ஒரு இடத்தில் வைப்பது சிறப்பானது. வாயு மூலையில் பீரோ அல்லது பணம் வைத்தால் பணம் வேக வேகமாக கரைந்து கொண்டே இருக்கும். ஒரே அறைதான் உள்ளது வேறு வழியில்லை என்றால் ஒரு துணி வைத்து அந்த இடத்தில் பீரோ வைப்பது சிறப்பானதாக இருக்கும்..



Click it and Unblock the Notifications