Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
குளிர்சாதன பெட்டியில் இந்த காய்கறிகளை தெரியாமல் கூட வைச்சுராதீங்க... இல்லனா உங்களுக்குதான் ஆபத்து...!
குளிர்சாதனப் பெட்டிகள் இந்தியாவின் பெரும்பாலும் வீடுகளிலும் நுழைந்து விட்டது. குளிர்சாதனப் பெட்டிகள் எஞ்சிய உணவுகளைக் கெட்டுப்போகாமல் சேமிக்கவும், பழங்கள் மற்றும் காய்கறிகளை ப்ரெஷாக வைத்திருக்கவும் உதவும். ஆனால் அனைத்து உணவுகளும், காய்கறிகளும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு ஏற்றதல்ல.
குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் போது அவை விரைவில் கெட்டுவிடும், அதேசமயம் அவற்றை அறை வெப்பநிலையில் வைக்கும் போது நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.

வெங்காயம்
வெங்காயம் நார்மலாக இருப்பதை விட நறுக்கிய வெங்காயம் ஈரப்பதத்தையும், கந்தக சேர்மங்களையும் வெளியிடுகிறது, இது அவை விரைவாக கெட்டுப்போகவும், கடுமையான வாசனையை ஏற்படுத்தவும் காரணமாகின்றன. வெங்காயம் குளிர்சாதன பெட்டியில் உள்ள மற்ற உணவுகளிலிருந்து வரும் வாசனையையும் உறிஞ்சிவிடும். வெங்காயத்தை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் வைத்து, தேவைப்படும் போது ப்ரெஷாக நறுக்கிக் கொள்வது நல்லது.
பூண்டு
நறுக்கிய பூண்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அவை விரைவில் அவற்றின் இயற்கையான வாசனையையும், சுவையையும் இழக்கிறது. குளிர்சாதன பெட்டியில் ஈரப்பதத்துடன் தொடர்பு இருக்கும் போது அது ஒட்டும் தன்மையுடையதாக மாறி விரும்பத்தகாத சுவையை உருவாக்குகிறது. நறுக்கப்படாதப் பூண்டுகளை அறை வெப்பநிலையில் நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமிக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை குளிர்சாதன பெட்டியில் ஒருபோதும் வைக்கக் கூடாது குறிப்பாக நறுக்கிய உருளைக்கிழங்கை எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது. ஏனெனில் நறுக்கிய உருளைக்கிழங்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் போது எளிதில் ஆக்ஸிஜனேற்றம் காரணமாக பழுப்பு நிறமாக மாறும். குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது உருளைக்கிழங்கு அதன் ஸ்டார்ச் உள்ளடக்கத்தையும் இழக்கிறது, இது விரும்பத்தகாத சுவையை ஏற்படுத்தும். உருளைக்கிழங்கை அறை வெப்பநிலையில் வைத்து தேவைப்படும்போது மட்டுமே நறுக்க வேண்டும்.
தக்காளி
தக்காளி பொதுவாக அனைத்து வீடுகளின் குளிர்சாதனப் பெட்டியிலும் தூங்கிக் கொண்டிருக்கும். அதேசமயம் நறுக்கிய தக்காளியை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. ஏனெனில் நறுக்கிய தக்காளி குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் போது அதன் நீர்ச்சத்து அதிகரிக்கும், இதனால் சுவையை இழக்கும். குளிர் காரணமாக, அவற்றின் இயற்கையாகவே பழுக்க வைக்கும் தன்மை குறைந்து, அவை மென்மையாகவும், சுவையற்றதாகவும் மாறும்
குடை மிளகாய்
முழு குடை மிளகாயை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் என்றாலும், ஆனால் நறுக்கிய குடை மிளகாயை குளிர் சாதன பெட்டியில் வைக்கும் போது அவை விரைவாக ஈரப்பதத்தை இழந்து மெலிதாகிவிடும். அவற்றின் மொறுமொறுப்பான தன்மை மற்றும் சுவையைப் பாதுகாக்க அவற்றை வெட்டாமல் சேமித்து வைப்பது நல்லது. ஒருவேளை நறுக்கிய குடை மிளகாயை சேமிக்க வேண்டியிருந்தால், காற்று புகாத கொள்கலனில் சேமித்து, ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தவும்.
வெள்ளரிக்காய்
நறுக்கிய வெள்ளரிக்காயை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அவை விரைவில் தண்ணீராக மாறி, மொறுமொறுப்பாக இருக்காது. அவற்றின் நீர் உள்ளடக்கம் காரணமாக வெட்டப்பட்ட பிறகு அவை விரைவில் அழுகும்.
கேரட்
வெட்டப்பட்ட கேரட்டுகள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் போது அவை விரைவாக உலர்ந்து, மொறுமொறுப்பான தன்மை மற்றும் சுவையை இழக்கின்றன. முழு கேரட்டையும் லேசான ஈரப்பதமான நிலையில் சேமிக்கவும்.



Click it and Unblock the Notifications
