Latest Updates
-
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்..
வாஸ்துப்படி, 7 குதிரை பெயிண்டிங்கை வீட்டின் எந்த திசையில் வைக்கணும்? எங்கு வைக்கக்கூடாது?
Vastu Tips In Tamil: வீட்டை அலங்கரிப்பதை எடுத்துக் கொண்டால், அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பம் இருக்கும். சிலர் செடிகளால், கலைப் பொருட்களால் வீட்டை அலங்கரிப்பார்கள். இன்னும் சிலர் ஓவியங்கள் அல்லது பெயிண்டிங் மூலம் தங்கள் வீட்டின் சுவர்களை அழகாக அலங்கரிப்பார்கள்.
ஆனால் வீட்டில் எந்த ஒரு பொருளை வைப்பதாக இருந்தாலும், அதை வாஸ்து பார்த்து வைக்க வேண்டும். ஏனெனில் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களும் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் பெயிண்டிங் பிரியர் என்றால், வீட்டில் ஏழு குதிரை பெயிண்டிங்கை வாங்கி தொங்கவிடலாம். வாஸ்துவில், குதிரைகள் ஸ்திரத்தன்மை, தைரியம், சக்தி, வலிமை மற்றும் விசுவாசம் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அதுவும் வீட்டில் ஏழு குதிரை பெயிண்டிங்கை வாங்கி தொங்கவிடுவது மிகவும் நல்லது.
இந்து மதத்தில் சூரிய பகவானின் ரதத்தில் ஏழு குதிரைகள் இருக்கும். எனவே இந்த ஏழு குதிரை ஓவியங்கள் வாஸ்துவில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதுவும் இது வெற்றி மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. எனவே இந்த ஏழு குதிரை ஓவியத்தை வீட்டில் வைத்தால், அது ஒருவருக்கு வெற்றியை கொண்டு வரும்.
ஆனால் அதற்கு இந்த ஓவியத்தை சரியான திசையில் தொங்கவிட வேண்டும். தவறான திசையில் வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது வீட்டில் ஏழு குதிரை பெயிண்டிங்கை வீட்டின் எந்த திசையில் தொங்க விட வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்பது குறித்து காண்போம்.
வீட்டின் எந்த இடத்தில் ஏழு குதிரை பெயிண்டிங்கை வைக்கலாம்?
* வாஸ்துப்படி ஏழு குதிரை பெயிண்டிங்கை வீடு அல்லது அலுவலகத்தில் தொங்க விட சிறந்த இடம் தெற்கு திசையில் உள்ள சுவர் தான். இந்த திசை மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசையானது புகழ் மற்றும் வெற்றியைக் கொண்டு வரும். ஒருவேளை உங்களால் தெற்கு சுவற்றில் தொடங்க விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதை வடக்கு அல்லது கிழக்கு சுவற்றில் தொங்கவிடலாம்.
* வீட்டில் ஏழு குதிரை பெயிண்டிங்கை வைக்க சிறந்த பகுதி வீட்டின் ஹால் தான். வாஸ்துப்படி, வீட்டின் ஹாலில் இந்த ஏழு குதிரை பெயிண்டிங்கை தொங்கவிடுவதன் மூலம், ஏராளமான நற்பலன்களைப் பெற முடியும்.
* பணியிடத்தில் ஏழு குதிரை பெயிண்டிங்கை வைக்கும் போது, அவற்றை அலுவலக வளாகத்தில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது. அப்படி வைக்கும் போது, அது வணிகத்திற்கு நல்ல வெற்றியையும், வளர்ச்சியையும் கொண்டு வரும். அதுவும் புதிய தொழிலை தொடங்கும் போது, இந்த பெயிண்டிங்கை வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, தொழிலை வெற்றிகரமாக கொண்டு செல்லும்.
ஏழு குதிரை பெயிண்டிங்கை எந்த திசையில் தொங்கவிட்டால் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்?
இந்து மதம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒவ்வொரு திசையும் ஒவ்வொருவிதமான பலன்களை அளிக்கும். ஒரு பொருளை தவறான திசையில் வைத்தால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே வீட்டில் ஏழு குதிரை பெயிண்டிங்கை வைக்கும் போது எந்த திசையில் வைத்தால், எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து வைக்க வேண்டும்.
* வடக்கு - ஏழு குதிரை பெயிண்டிங்கை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், அது வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும்.
* கிழக்கு - கிழக்கு திசை தொழில் வளர்ச்சி மற்றும் வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றியுடன் தொடர்புடையது. எனவே உங்கள் தொழிலில் வெற்றியும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமானால் கிழக்கு திசையில் தொங்க விட வேண்டும்.
* தெற்கு - ஏழு குதிரை பெயிண்டிங்கை தொங்க விட மிகச்சிறந்த திசை தெற்கு. இந்த திசையில் இந்த பெயிண்டிங்கை தொங்க விடும் போது, அது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் புகழையும் வெற்றியையும் கொண்டு வரும்.
* மேற்கு - மேற்கு திசையில் ஏழு குதிரை பெயிண்டிங்கை தொங்கவிடக்கூடாது. இல்லாவிட்டால் அது எதிர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கும்.
வீட்டின் எந்த இடத்தில் ஏழு குதிரை பெயிண்டிங்கை தொங்கவிடக்கூடாது?
* வாஸ்துப்படி ஏழு குதிரை பெயிண்டிங்கை எக்காரணம் கொண்டும் வீட்டின் படுக்கை அறையில் தொங்கவிடக்கூடாது. படுக்கை அறையில் இந்த பெயிண்டிங்கை வைத்தால், அது வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
* வாஸ்துப்படி, இந்த ஏழு குதிரை பெயிண்டிங்கை வீட்டின் பூஜை அறையில் வைக்கக்கூடாது.
* ஏழு குதிரை பெயிண்டிங்கை எப்போதும் வீட்டின் பிரதான வாசலை நோக்கியோ அல்லது கழிவறையை பார்த்தவாறோ வைக்கக்கூடாது.
* ஏழு குதிரை பெயிண்டிங் எப்போதும் வீட்டின் உட்பகுதியைப் பார்த்தவாறு வைக்க வேண்டுமே தவிர, வெளிப்பகுதியை பார்த்தவாறு வைக்கக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications