வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? அப்ப சிரிக்கும் புத்தரை வீட்டின் இந்த இடத்தில் வையுங்க போதும்...

Vastu Tips In Tamil: ஒவ்வொருவருமே தங்கள் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்காக பல்வேறு பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்போம். பெரும்பாலும் வீடுகளை அலங்கரிக்கும் போது வீட்டில் செல்வத்தை மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க உதவும் பொருட்களை வாங்கி அலங்கரிப்போம். அப்படிப்பட்ட ஒரு பொருள் தான் சிரிக்கும் புத்தர் சிலை.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, சிரிக்கும் புத்தரை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பை ஈர்க்கும். மேலும் சிரிக்கும் புத்தர் எப்போதும் புன்னகை நிறைந்த முகத்துடன் இருப்பதால், வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியைப் பரப்புவார்.

Vastu Tips: Where To Place Laughing Buddha For Luck And Prosperity At Home In Tamil

இப்படிப்பட்ட சிரிக்கும் புத்தரை வீட்டில் வைத்திருக்கும் போது நிறைய பேர் ஒருசில தவறுகளை செய்கிறார்கள். இப்படி செய்யும் தவறுகளால் வீட்டில் நேர்மறை ஆற்றலுக்கு பதிலாக எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது மற்றும் வறுமையும் சேர்ந்து வருகிறது.

இப்போது வாஸ்துப்படி சிரிக்கும் புத்தரை வீட்டின் எந்த திசையில் மற்றும் எந்த இடத்தில் வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது மற்றும் சிரிக்கும் புத்தரை வீட்டில் வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து காண்போம்.

சிரிக்கும் புத்தர் சிலையை எந்த இடத்தில் வைக்க வேண்டும்?

* சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைக்க சிறந்த திசை என்றால், அது தென்கிழக்கு திசை தான். அதுவும் ஹால், டைனிங் ஹால் அல்லது படுக்கை அறை என எந்த அறையிலும் உள்ள தென்கிழக்கு திசையிலும் வைக்கலாம். இப்படி இந்த திசையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைப்பதால், வீட்டில் உள்ளோரின் வருமானம் அதிகரிப்பதோடு, வீட்டில் பணம் அதிகரிக்கும்.

* உங்கள் வீட்டில் பணத்தை அதிகரிப்பதற்காக சிரிக்கும் புத்தர் சிலையை வைக்க விரும்பினால், அதை வைக்க சிறந்த இடம் வீட்டின் நுழைவாயிலுக்கு முன்பு தான். அதுவும் புத்தர்சிலையானது நுழைவாயிலை பார்த்தவாறு வைக்க வேண்டும். இப்படி வீட்டினுள் நுழையும் போது சிரிக்கும் புத்தர் வரவேற்கும் வகையில் இருந்தால், அது பண வரவை இன்னும் அதிகரிக்கும்.

* உங்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கவும், ஆரோக்கியமான உறவுகளைப் பேணவும் விரும்பினால், சிரிக்கும் புத்தர் சிலையை வீடு மற்றும் அலுவலகத்தில் வாங்கி வையுங்கள். இப்படி வைப்பதனால் மன அழுத்தம் மற்றும் டென்சன் குறையும். அதுவும் வேலை செய்யும் மேஜையின் மேல் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்கும் போது, அதிர்ஷ்டத்தால் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும்.

* சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைக்கும் போது, குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும் மற்றம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் தீரும். ஹாலில் சிரிக்கும் புத்தரை வைக்க சிறந்த இடம் என்றால் அது வீட்டின் ஹால் தான்.

* உங்கள் குழந்தைகள் படிப்பில் சிறந்தவராக திகழ வேண்டுமானால், படிக்கும் மேஜையின் மேல் சிரிக்கும் புத்தர் சிலையை வையுங்கள். இதனால் குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.

வீட்டில் புத்தர் சிலையை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:

* சிரிக்கும் புத்தர் சிலையை எப்போதும் பாத்ரூம், சமையலறை, கழிவறை போன்ற பகுதிகளில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வருவதோடு, எதிர்மறை ஆற்றலை வீட்டில் அதிகம் ஈர்க்கும்.

* சிரிக்கும் புத்தர் சிலையை எப்போதும் தரையில் வைக்கக்கூடாது. தரையில் இருந்து உயரத்தில் தான் வைக்க வேண்டும்.

* முக்கியமாக சிரிக்கும் புத்தர் சிலையை டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் மேல் வைக்கக்கூடாது. இப்படி வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை தான் அதிகரிக்கும் மற்றும் வீட்டில் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும்.

* சிரிக்கும் புத்தர் சிலை எப்போதும் வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். வேறு எந்த ஒரு பகுதியையும் பார்த்தவாறு இருக்கக்கூடாது.

* சிரிக்கும் புத்தர் சிலையை ஷூ வைக்கம் ரேக்கிற்கு மேலே வைக்கக்கூடாது. சிரிக்கும் புத்தர் சிலை இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

* முக்கியமாக சிரிக்கும் புத்தர் சிலை வழிபாட்டிற்கு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, August 4, 2023, 15:40 [IST]
Desktop Bottom Promotion