Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
Vastu Tips: வாஸ்துப்படி, வீட்டின் எந்த திசையில் குப்பைத் தொட்டியை வைக்கலாம்? எங்கு வைக்கக்கூடாது?
Dustbin Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருந்தால் தான், அந்த சந்தோஷமும் செல்வமும் நிறைந்திருக்கும். அப்படி வீட்டில் நேர்மறை ஆற்றலை நிரம்பியிருக்க வேண்டுமானால், குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். அதோடு வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் வாஸ்துப்படி சரியான இடத்தில், சரியான திசையில் இருக்க வேண்டும். தவறான திசையில் இருந்தால், அது தீங்கை விளைவிக்கும்.
முக்கியமாக வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியை சரியான இடத்தில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் குப்பை தொட்டியை தவறான திசையில் வைக்கும் போது லட்சுமி தேவி கோபப்பட்டு, அதன் விளைவாக பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு வீட்டின் எந்த திசையில் குப்பைத் தொட்டியை வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்பது பற்றி தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது தான்.

எந்த திசையில் குப்பைத் தொட்டியை வைக்கக்கூடாது?
வடகிழக்கு திசை
வாஸ்துப்படி, குப்பைத் தொட்டியை வீட்டினுள் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இப்படி வைத்தால், வீட்டில் உள்ளோரின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். வீட்டின் இருப்போர் ஒருவித மன அழுத்தத்துடனேயே இருப்பார். முக்கியமாக வீட்டின் தலைவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
தென்கிழக்கு திசை
வாஸ்துப்படி, குப்பைத் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்தால், அதன் விளைவாக வீட்டில் பணம் தங்வே தங்காது. எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும், அந்த பணம் வீட்டில் நிலைத்திருக்காமல், தேவையில்லாத செலவுகளால் செலவாகிவிடும். ஒருவேளை வீட்டில் பணத்தை சேமித்து வைத்திருந்தால், அதுவும் படிப்படியாக குறையும். முக்கியமாக கடன் சுமை அதிகரித்துவிடும்.
கிழக்கு மற்றும் வடக்கு
வாஸ்து சாஸ்திரத்தின் படி, குப்பைத் தொட்டியை வீட்டின் கிழக்கு திசையிலோ அல்லது வடக்கு திசையிலோ வைக்கக்கூடாது. இப்படி வைத்தால், வீட்டில் உள்ளோரின் மனதில் ஒருவித விரக்தி ஏற்படத் தொடங்கும். இதன் மூலம் வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் முன்னேற்றம் தடுக்கப்படும். முக்கியமாக வடக்கு திசையில் குப்பை தொட்டி வைத்தால், அது தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எந்த திசையில் குப்பைத் தொட்டியை வைக்க வேண்டும்?
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீட்டில் குப்பைத் தொட்டியை எப்போதும்த வீட்டின் தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். அதுவும் தென்மேற்கு திசை மிகவும் நல்லது. எனவே குப்பைத் தொட்டியை இந்த திசையில் வைக்கலாம்.
* குப்பைத் தொட்டியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைத்தால், அந்த வீட்டில் வறுமை அதிகரிப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில் வடகிழக்கு தெய்வங்கள் குடியிருக்கும் திசையாக கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் குப்பைத் தொட்டியை வைப்பது நல்லதல்ல. ஒருவேளை வடகிழக்கு திசையில் குப்பைத் தொட்டியை வைத்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள் மனரீதியான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.
* முக்கியமாக வாஸ்து சாஸ்திரத்தின் படி, குப்பைத் தொட்டியானது எப்போதும் வீட்டிற்கு வெளியே இருக்கக்கூடாது. வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும்.
* வாஸ்து சாஸ்திரத்தின்படி, குப்பைத் தொட்டியை வடமேற்கு திசையில் வைப்பதால் எந்த எதிர்மறையான விளைவும் ஏற்படாது. எனவே இந்த வடமேற்கு திசையிலும் குப்பைத் தொட்டியை வைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications