Latest Updates
-
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
வாஸ்து படி வீட்டில் இந்த இடத்தில் தங்க நகைகளை வைச்சா உங்க வீட்டில் பணமழை கொட்டுமாம்... ட்ரை பண்ணுங்க!
Vastu tips for gold: வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருட்களை சரியான திசையில் வைத்திருப்பது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கிறது. இந்தியர்களிடையே வாஸ்து மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, அது ஒரு வீட்டைக் கட்டுவது அல்லது பொருட்களை சரியான திசையில் வைப்பது குறித்து வாஸ்து குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் பரிந்துரைக்கிறது.
வீட்டில் பொருட்களை சரியான திசையில் வைக்காததால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மிகச் சிலரே விலைமதிப்பற்ற நகைகளை சரியான திசையில் வீட்டில் வைத்திருப்பார்கள். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை நீங்கள் பராமரிக்க விரும்பினால், வாஸ்து படி, உங்கள் தங்க நகைகளை வீட்டின் சரியான திசையில் வைக்க வேண்டும்.

தங்க நகையை எந்த திசையில் வைக்க வேண்டும்?
விலைமதிப்பற்ற உலோக நகைகள் அல்லது தங்க ஆபரணங்கள் அல்லது தங்கம் வீட்டின் தென்மேற்கு பகுதியில் வைக்கப்பட வேண்டும். வீட்டின் வடமேற்கு மூலையில் தங்க ஆபரணங்கள் அல்லது தங்கம் அல்லது வெள்ளி அல்லது வைரங்களை ஒருபோதும் வைக்கக்கூடாது என்பதை மறந்து விடாதீர்கள், இல்லையெனில் வீட்டிற்கு வறுமை தேடிவரும்.
சுவரின் நிறம்
எப்போதும் தங்கள் வைத்திருக்கும் அறையின் சுவர்கள் மற்றும் அதன் தரையை மஞ்சள் நிறத்தில் வரைய முயற்சிக்கவும். மஞ்சள் நிறம் குபேரனுடன் தொடர்புடையது மற்றும் இது செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கிறது. மேலும் இந்த அறையில் ஒரு கதவு மட்டுமே இருக்க வேண்டும், அது வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.
மஞ்சள் நிற துணி
சிவப்பு அல்லது மஞ்சள் துணியில், குங்குமப்பூவுடன் தங்கத்தை வைக்க வேண்டும். இது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் உங்கள் வீட்டிற்கு செழிப்பைக் கொண்டுவருகிறது.
நகைகளின் வடிவங்கள்
நகைகள் அல்லது ஆபரணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, சதுரம், வட்டம் அல்லது ஓவல் போன்ற வழக்கமான வடிவங்களில் வாங்கவும். கூர்மையான முனைகள் கொண்ட நகைகள் எதிர்மறை ஆற்றலை அழைக்கும் என்பதால் முக்கோண வடிவ நகைகளை தவிர்க்க வேண்டும்.
கண்ணாடி அவசியம்
தங்க நகைகள் இருக்கும் லாக்கரின் முன் அதனைப் பிரதிபலிக்கும் கண்ணாடியை வைக்கவும். லாக்கர் கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி வைக்கப்பட வேண்டும். பிரதிபலிப்பு நல்ல சகுனத்தின் அடையாளம் மற்றும் வாஸ்து படி அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது.
நெய் தீபம்
தங்கம் இருக்கும் லாக்கர் அறை எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்வது மிகவும் பயனுள்ள விதிகளில் ஒன்றாகும், மேலும் நீங்கள் தினமும் காலையில் லாக்கர் அறையில் ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது உங்கள் செல்வம் மென்மேலும் வளர உதவும்.
பணப்பெட்டியை எங்கு வைக்க வேண்டும்?
வீட்டில் பணப்பெட்டியை வைக்க தெற்கு மற்றும் தென்மேற்கு சிறந்த திசைகளாகும். இது கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையை எதிர்கொள்ளும் படி இருக்க வேண்டும். இது உங்கள் வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும்.
எங்கு வைக்கக்கூடாது?
பணப்பெட்டி தெற்கு அல்லது மேற்கு சுவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது மற்றும் அது தெற்கு, மேற்கு அல்லது தென்மேற்கு நோக்கி இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். இது உங்கள் வீட்டில் உள்ள செல்வத்தை வேகமாக கரைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
