Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி, பித்தளை மான் சிலையை வீட்டின் இந்த இடத்தில் வையுங்க.. ஆரோக்கியமும், செல்வமும் மேம்படும்...!
Vastu Tips In Tamil: நல்ல ஆரோக்கியமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி இருக்க வேண்டும்.
இது தவிர வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் வாஸ்துப்படி சரியான இடத்தில், திசையில் இருக்க வேண்டும். அதோடு வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு செல்வ செழிப்போடு இருக்க ஒருசில பொருட்கள் உதவி புரிகின்றன.

நீங்கள் உங்கள் வீட்டை அழகாக அலங்கரிக்க பல பொருட்களை வாங்கி வைக்கலாம். ஆனால் வாஸ்து அலங்காரப் பொருட்களை வாங்கி வைக்கும் போது வீட்டில் செல்வம் பெருகுவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். அப்படிப்பட்ட ஒரு வாஸ்து அலங்காரப் பொருள் தான் மான் சிலை. அதுவும் நீளமான கொம்பு கொண்ட பித்தளை மான் சிலையை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது.
மான் சிலை
நீண்ட கொம்பு கொண்ட மான் ஒரு அழகான விலங்கு மட்டுமின்றி, வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங் சூயில் மான் ஒரு முக்கியமான விலங்காகும். இந்த மான் சிலையை வீட்டில் வைத்திருக்கும் போது, அது மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, பித்தளை மான் காதல், கருணை, மென்மை மற்றும் இரக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
இப்படிப்பட்ட மான் சிலையை ஒருவர் வீட்டில் வைக்கும் போது, அது அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான ஆற்றலை ஈர்க்கின்றன. ஆனால் அதற்கு அந்த மான் சிலையை சரியான இடத்தில் மற்றும் திசையில் வைக்க வேண்டும்.
எந்த இடத்தில் மான் சிலையை வைக்க வேண்டும்?
* வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், நீண்ட கொம்புகளைக் கொண்ட பித்தளை மானை சமையலறையின் தென்கிழக்கு மூலையில் வையுங்கள். இல்லாவிட்டால், வீட்டின் கிழக்கு பகுதியில் வையுங்கள்.
* வீட்டில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்க வேண்டுமானால், பித்தளை மான் சிலையை வீட்டின் தெற்கு திசையில் வையுங்கள். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும்.
* பித்தளை மான் வணிகம் மற்றும் வியாபாரத்தில் ஒரு நல்ல நெட்வொர்க்கை உருவாக்க உதவுகிறது. பணியிடத்தில் பித்தளை மான் சிலையை வைக்கும் போது, அது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்குகிறது. அதுவும் ஜோடி மான் சிலையை வைக்கும் போது, அது தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை அதிகரிக்கிறது. அதற்கு இந்த மான் சிலையை பணியிட மேஜை மற்றும் படுக்கை அறையின் கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும்.
* மான் சுறுசுறுப்பைக் குறிக்கிறது. வீட்டில் உள்ளோர் மந்தமாக சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தால், பித்தளை மான் சிலையை மேற்கு திசையில் வையுங்கள். அதுவும் இதை தரையில் அல்லது வீட்டின் மேற்கு மூலையில் உள்ள டேபிளில் வைக்க வேண்டும். இன்னும் சிறப்பான பலனைப் பெற நினைத்தால், வடக்குத் திசையைப் பார்த்தவாறு பித்தளை மானை வையுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications