Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
தொழிலில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படணுமா? அப்ப கருப்பு ஆமையை இந்த இடத்துல வையுங்க..
Vastu Tips In Tamil: வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கவலை இருக்கும். அதில் சிலர் பண பிரச்சனைகளை சந்திக்கலாம். சிலர் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். இன்னும் சிலர் தொழிலில் எவ்வித முன்னேற்றத்தையும் காணாமல் இருக்கலாம். இப்படி சந்திக்கும் பிரச்சனைகளை நம்மால் நீக்க முடியாது.
ஆனால் அந்த பிரச்சனைகளின் தாக்கத்தை வாஸ்துவின் உதவியுடன் குறைக்க முடியும். ஏனெனில் வாஸ்து விதிகளைப் பின்பற்றும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

ஒருவரது வீட்டில் அல்லது ஒருவரைச் சுற்றியுள்ள பகுதி நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருந்தால், அங்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்கும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் பல பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆமை.
ஆனால் அந்த ஆமையை சரியான இடத்தில் மற்றும் சரியான திசையில் வைக்க வேண்டும். இப்போது வாஸ்துப்படி, எந்த பிரச்சனைக்கு எந்த மாதிரியான ஆமையை வீட்டின் எந்த பகுதியில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க..
நீங்கள் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் வாஸ்துப்படி, கருப்பு ஆமையை வீட்டின் அல்லது பணியிடத்தின் வடக்கு திசையில் வையுங்கள். வடக்கு திசையானது லட்சுமி தேவியின் திசையாக கருதப்படுகிறது. இந்த திசையில் ஆமையை வைக்கும் போது, அது நல்ல லாபத்தைக் கொண்டு வருவதோடு, ரகசிய எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அதோடு, வியாபாரம் அல்லது வேலை தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.
கனவுகள் நனவாக..
வீட்டில் ஆமையை வைத்திருப்பது அதிர்ஷ்டமானது. இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். திருமணமாகாமல் குழந்தைக்காக காத்திருப்பவர்கள், வீட்டில் குழந்தைகளை முதுகில் சுமக்கும் படியான பெண் ஆமையை வைத்திருக்க வேண்டும். இதனால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஆரோக்கியம் மேம்பட..
ஆமைகள் நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய உயிரினம். எனவே இந்த ஆமையை வீட்டில் வைத்திருக்கும் போது, வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும். ஆகவே தான் ஆமையை வீடு அல்லது அலுவலகத்தில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படுகிறது.
வியாபாரம் சிறப்பாக இருக்க...
உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் தெரியவில்லையா? நல்ல முன்னேற்றத்தைக் காண விரும்புகிறீர்களா? அப்படியானால் கருப்பு ஆமையை வீட்டின் வடக்கு திசையில் வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதோடு குடும்ப வாழ்க்கையும் அமைதியாக மற்றும் இனிமையாக இருக்கும்.
தேர்வில் வெற்றி காண...
நீங்கள் ஏதேனும் முக்கியமான தேர்வை எழுத செல்லும் போது, அந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி காண வேண்டுமானால், ஆமையை உடன் எடுத்து செல்லுங்கள். மேலும் ஆமையை வீட்டில் வைத்திருந்தால், கண் திருஷ்டி நீங்கும் மற்றும் வீட்டு சூழல் அமைதியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications