Latest Updates
-
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன?
வாஸ்துப்படி திருமண போட்டோவை வீட்டின் இந்த இடத்துல வெக்காதீங்க.. இல்லன்னா சண்டை அதிகமா வரும்...
Vastu Tips In Tamil: திருமணமான ஒவ்வொருவருமே தங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். ஒருவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், தம்பதிகள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிட வேண்டும்.
அதுவும் தற்போதைய பணத்தேவை அதிகம் நிறைந்த உலகில் தம்பதிகள் இருவருமே வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக தம்பதிகளால் தங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட முடியாமல் போகிறது. சில சமயங்களில் அதிக மன அழுத்தம் காரணமாக வாழ்க்கைத் துணையின் மீதான ஈர்ப்பு குறையத் தொடங்குகிறது.

இதற்கு காரணம் வெறும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் மட்டுமின்றி, வாழும் வீட்டில் உள்ள சில வாஸ்து குறைபாடுகளும் தான். ஆம், குடியிருக்கும் வீட்டில் வாஸ்து பிரச்சனைகள் இருந்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக வீட்டில் பலவிதமான பிரச்சனைகள் வரத் தொடங்கும்.
அதுவும் வீட்டில் நாம் மேற்கொள்ளும் சில தவறான விஷயங்கள் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தி, திருமண வாழ்க்கையையே சீர்குலைக்கும். இந்நிலையில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வாஸ்து சாஸ்திரம் கூறும் சில விஷயங்களை தெரிந்து, அந்த தவறுகளை தவிர்த்து வந்தால், திருமண வாழ்க்கை நிச்சயம் இனிமையாக இருக்கும்.
தவறான திசையில் படுக்கை
வாஸ்து சாஸ்திரம், திருமண வாழ்க்கையுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. வாஸ்துப்படி, வடமேற்கு மற்றும் வடக்கு திசை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையுடன் தொடர்புடையது. திருமணமான தம்பதிகளின் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டுமானால், தம்பதிகளின் படுக்கை இந்த திசையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால், அது திருமண வாழ்க்கையில் இனிமையைக் கொண்டு வருவதோடு, திருப்தியையும் தரும்.
படுக்கை அறை சுத்தமாக இருக்க வேண்டும்
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், படுக்கை அறையில் புத்தகங்கள், லேப்டாப் போன்ற வேலை தொடர்பான பொருட்களை வைத்திருக்கக்கூடாது. படுக்கை அறையானது சுத்தமாக இருக்க வேண்டும். அதோடு, படுக்கை அறையில் நற்பதமான பூக்களை வைத்திருப்பது, தம்பதிகளுக்கு இடையேயான பிணைப்பையும், உறவையும் வலுப்படுத்தும்.
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது
பொதுவாக வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது. அதுவும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வடக்கு நோக்கி தலை வைத்து தூங்குவது திருமண வாழ்க்கையைப் பாதிக்கும். அதோடு, ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் கணவனும் மனைவியும் இந்த திசையில் தலை வைத்து தூங்கினால், அது மிகுந்த சோர்வை உண்டாக்கி, திருமண வாழ்க்கையை பாதிக்கும்.
எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்?
திருமணமான தம்பதிகளின் திருமண வாழ்க்கை சிறக்க வேண்டுமானால், தம்பதிகள் தெற்கு நோக்கி தலை வைத்து தூங்க வேண்டும். இது தம்பதிகளுக்கு இடையே உறவுகளை ஆழப்படுத்தும். மேலும் இப்படி தூஙகும் போது, அது திருமண வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
திருமண போட்டோக்களை எங்கு வைக்க வேண்டும்?
பெரும்பாலானோரின் வீடுகளில் திருமண போட்டோக்களை வீட்டில் ப்ரேம் செய்து வைத்திருக்கும் பழக்கம் இருக்கும். நீங்களும் அப்படி வைப்பவராயின், அந்த திருமண போட்டோவை சரியான திசையில் வையுங்கள். இல்லாவிடடால், அது தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகளை அதிகரிக்கும்.
திருமண போட்டோக்களை படுக்கை அறையில் வைக்க சிறந்த திசை கிழக்கு. அதேப் போல் குடும்ப போட்டோக்களை வைக்க சிறந்த திசை தென் மேற்கு. இப்படி வைக்கும் போது நேர்மறை ஆற்றலை படுக்கை அறையில் அதிகரித்து, தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications