Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
நீங்க அபார்ட்மெண்ட் வீட்டுல இருக்கீங்களா? வாஸ்து தோஷம் நீங்க.. இத ஃபாலோ பண்ணுங்க...
Vastu Tips In Tamil: நம் அனைவருக்குமே சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்ற ஒரு கனவு நிச்சயம் இருக்கும். முன்பெல்லாம் நிலத்தை வாங்கி தங்களுக்கு வேண்டியவாறு வீட்டை வாஸ்து பார்த்து கட்டுவார்கள்.
ஆனால் தற்போது நிலத்தின் விலையைப் பார்க்கும் போது, கட்டிய வீட்டையே வாங்கிவிடலாம் போன்று உள்ளது. அந்த அளவில் தற்போது விலை தாறுமாறாக ஏறியுள்ளது. அதற்கு ஏற்ப தற்போது பல அடுக்குமாடி அபார்ட்மெண்ட் வீடுகள் விலை குறைவில் கிடைக்கின்றன.

ஆனால் இப்படி அபார்ட்மெண்ட் வீடுகள் முற்றிலும் வாஸ்துப்படி இருக்கும் என்று கூறிவிட முடியாது. சில விஷயங்கள் மட்டுமே வாஸ்துப்படி இருக்கும். மற்றபடி வாஸ்து குறைபாடுகள் இருக்கும்.
இப்படி வாஸ்து குறைபாடுகளைக் கொண்ட வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருக்கும். இப்படிப்பட்ட வீடுகளில் இருந்தால், அது அந்த வீட்டில் பண பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, திருமண வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் பல பிரச்சனைகளையும் வரவழைக்கும்.
இந்த வாஸ்து குறைபாடுகளை போக்க, அபார்ட்மெண்ட்டுகளில் இருக்கும் வீடுகளை இடித்து சரிசெய்ய முடியாது. ஆனால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளைப் போக்க ஒருசில எளிய வழிகள் உள்ளன. இப்போது அதுக்குறித்து காண்போம்.
வடகிழக்கு திசையில் இதை வைக்கவும்
வாஸ்துப்படி, வீட்டின் வடகிழக்கு திசையானது மிகவும் மங்களகரமான திசையாகும். இந்த திசையில் நேர்மறை ஆற்றல் அதிகம் உருவாகும். உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், இந்த வடகிழக்கு திசையில் சூரியன் உதிக்கும்படியான படம், பறவைகள் பறக்கும்படியான படம், மணி பிளாண்ட், பாம்பு செடி போன்றவற்றை வைக்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, வாஸ்து குறைபாடுகளின் தாக்கம் குறையும்.
குதிரை சிலையை வைக்கவும்
ஒரு வீட்டின் நுழைவாயில் வழியாகத் தான் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நுழைகின்றன. எனவே வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்க வேண்டுமானால், வீட்டின் நுழைவாயிலில் குதிரை சிலையை வைப்பது நல்லதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இப்படி குதிரை சிலையை வைக்கும் போது, எதிர்மறை ஆற்றல் நுழைய முடியாமல் போவதோடு, வீட்டில் செல்வம் பெருகும்.
சிவப்பு விளக்கை வைக்கவும்
உங்கள் வீட்டின் சமையலறையில் வாஸ்து குறைபாடு உள்ளதா? அப்படியானால் சமையலறையின் தென்கிழக்கு திசையில் ஒரு மண்விளக்கை வைத்து, அதை எப்போதும் எரிய விடுங்கள். இப்படி செய்யும் போது சமையலறையில் உள்ள வாஸ்து குறைபாட்டினால் சந்திக்கும் பிரச்சனைகள் குறையும்.
கடல் உப்பை வைக்கவும்
வாஸ்துப்படி, வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டைப் போக்க கல் உப்பு பெரிதும் உதவி புரியும். அதற்கு அந்த கல் உப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதை கழிவறை, குளியலறையில் வைக்க வேண்டும். மேலும் இந்த உப்பை வாரத்திற்கு ஒருமுறை நீரில் கரைத்துவிட்டு, மீண்டும் கிண்ணத்தில் புதிய கல் உப்பை நிரப்ப வேண்டும். அதோடு வாரம் ஒருமுறை நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, அந்நீரால் வீட்டைத் துடைக்க வேண்டும்.
கடல் போட்டோ
படுக்கை அறையானது சரியான திசையில் இருக்க வேண்டும். அதாவது தென்மேற்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது வாஸ்து குறைபாடுகளால் திருமணமானவர்களின் வாழ்வில் பிரச்சனைகளை அதிகரிப்பதோடு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமலும் தடுக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் படுக்கை அறையில் அமைதியான கடல் போட்டோவை வைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications