Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
வாஸ்து படி பெண்கள் ஹேண்ட்பேக்கை இப்படி வாங்குனா அவங்க கையில் பணம் எப்பவும் புரண்டுகிட்டே இருக்குமாம்...!
Vastu tips for handbag: ஆண்களுக்கு எப்படி பர்ஸோ அதேபோல கிட்டதட்ட அனைத்து பெண்களிடமும் இருக்கும் ஒரு பொருள் ஹேண்ட் பேக் ஆகும். பெண்கள் எங்கு சென்றாலும் அதனை தங்களுடன் எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது உங்கள் பணத்தை சேமிப்பதுடன், உங்களின் அடையாளமாகவும் இருக்கிறது.
இந்த ஹேண்ட் பேக் உங்களின் அடையாளமாக இருப்பதுடன் உங்களின் வருமானத்தையும், நிதிநிலையையும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பிரபலமான ஜோதிட கணிப்புகளின் படி பெண்கள் அவர்களின் ஹேண்ட் பேக் வாங்கும் போதும் மற்றும் அதில் வைக்கும் பொருட்கள் மீதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் பணப்பையை சரியாக ஒழுங்கமைத்தால் அது உங்கள் வெற்றி மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமாக மாறும். இந்த பதிவில் பெண்கள் ஹேண்ட் பேக் விஷயத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டுமென்று என்று தெரிந்து கொள்ளலாம்.
ஹேண்ட் பேக்கை தரையில் வைக்கக்கூடாது
பெண்கள் தங்கள் பைகளை உணவகங்களில் அல்லது கழிவறைகளில் தரையில் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு செயலாகும். அதை எப்போதும் எங்காவது தொங்கவிட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
பெண்களின் வழக்கமான பழக்கம், அவர்களுக்கு தேவையில்லாத அனைத்துள் குப்பைகளையும் தங்கள் பைகளில் சேமித்து வைப்பது. பபுள் கம் அல்லது சாக்லேட் கவர்கள், காகிதத் துண்டுகள் அல்லது பயன்படுத்திய டிஸ்யூ பேப்பரை உங்கள் கைப்பையில் வைப்பதைத் தடுக்கவும். இப்படி செய்தால் நீங்கள் உங்கள் பணத்தை குப்பைத்தொட்டியில் வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது பணத்தை அவமதிக்கும் செயலாகும்.
நாணயங்கள் வைப்பதைத் தவிர்க்கவும்
உங்கள் ஹேண்ட் பேக்கில் நாணயங்களை வைப்பதைத் தவிர்க்கவும். உங்கள் பையில் நாணயங்களை எறிந்தால், அது உங்கள் பையின் அடிப்பகுதியில் விழும். இது பணத்தை மதிக்காத செயலாகும். உங்கள் நாணயங்களை தனியாக வைத்திருக்க உங்கள் கைப்பையில் தனியாக ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும்.
அதிர்ஷ்ட பொருட்கள்
உங்கள் ஹேண்ட் பேக்கில் சில அதிர்ஷ்ட பொருட்களை வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சிவப்பு துணி, கௌரிகள், கடவுளின் புகைப்படம் போன்ற அதிர்ஷ்டப் பொருட்களை ஹேண்ட் பேக்கில் வைக்க மறந்து விடாதீர்கள்.
சரியான கைப்பையை வாங்க வேண்டும்
ட்ரெண்டில் உள்ளது என்பதற்காகவே ஒரு கைப்பையை வாங்கக்கூடாது, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சரியான கைப்பையை மட்டுமே வாங்க வேண்டும். அது உங்கள் தோளில் வசதியாகத் தொங்க வேண்டும் மற்றும் கீழே விழாமல் இருக்க வேண்டும். உங்கள் சின்ன சின்ன அத்தியாவசியப் பொருட்களை வைத்துக்கொள்ள பல பாக்கெட்டுகள் கொண்ட பைகளை வாங்குவது நல்லது.
சரியான நிறத்தில் வாங்க வேண்டும்
உங்கள் தனிப்பட்ட செல்வ ஆற்றலை பிரதிபலிக்கும் வண்ணம் உங்கள் செல்வம் மற்றும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைத் தூண்ட உதவும். பொதுவாக சிவப்பு, மெட்டல், வெள்ளை, கருப்பு மற்றும் நீலம் ஆகியவை அதிர்ஷ்டமான நிறங்களாக கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
