Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
வாஸ்து படி குழந்தைகள் பக்கத்துல இந்த பொருட்களை தெரியாம கூட வைச்சுராதீங்க... இல்லனா அவங்களுக்குத்தான் ஆபத்து!
Vastu Tips: வாஸ்து சாஸ்திரம் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்பவும், தீய ஆற்றலிடமிருந்து பாதுகாக்கவும் பல நூற்றாண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். வாஸ்து சாஸ்திரம் வீட்டிற்கு அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை ஈர்க்கும் வழிமுறைகளை கூறுவது மட்டுமின்றி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிமுறைகளையும் வழங்குகிறது.

வாஸ்து கொள்கைகளின்படி, ஒருவர் தனது குழந்தையின் அருகில் வைத்திருக்கும் பொருட்கள், அவர்களின் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கலாம். உங்கள் குழந்தையின் அருகில் நீங்கள் வைத்திருக்கக் பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம், ஏனெனில் உங்கள் குழந்தைக்கான இடம் அமைதியாகவும், சீரானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முள் செடிகள்
சில முள் செடிகள் உங்கள் வீட்டிற்கு ஒரு அழகைக் கூட்டும் பொருட்களாக இருந்தாலும், நீங்கள் எப்படிப்பட்ட செடிகளை வீட்டில் வைக்கிறீர்கள் என்பதை கவனமாகத் தேர்ந்தெடுக்கவும். கற்றாழை மற்றும் கூரான இலைகள் அல்லது முட்கள் கொண்ட செடிகளை குழந்தைகள் அருகில் வைப்பதைத் தவிர்க்கவும். வாஸ்து படி, இந்த தாவரங்கள் எதிர்மறை ஆற்றலை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வரலாம், இது உங்கள் குழந்தையை காயப்படுத்தலாம் அல்லது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
கண்ணாடிகள்
கண்ணாடி அனைத்து வீடுகளிலும் இடம்பெறும் ஒரு முக்கியமான பொருளாகும். பல வீடுகளில் கண்ணாடிகள் ஒரு பிரபலமான அலங்கார அம்சமாக இருந்தாலும், வாஸ்து கொள்கைகளின்படி, அவை உங்கள் குழந்தையின் சுற்றுப்புறத்திக்கு ஏற்றதாக இருக்காது.
குழந்தைகள் கண்ணாடிகள் இருப்பது ஆற்றலைப் பிரதிபலிப்பதால் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தலாம். கண்ணாடியின் உயர்ந்த ஆற்றல் உணர்திறன் காரணமாக, குழந்தைகள் தங்கள் உருவ பிரதிபலிப்புகளை அடிக்கடி பார்ப்பதால் அமைதியின்மை மற்றும் தூக்கத்தில் தொந்தரவை அனுபவிக்கலாம்.
உடைந்த பொம்மைகள்
குழந்தைப் பருவத்தில் குழந்தைகளின் உலகமே பொம்மைகள்தான். பொம்மைகள் காலப்போக்கில் உடைவது இயல்பானது என்றாலும், சேதமடைந்த அல்லது உடைந்த பொம்மைகளை உங்கள் குழந்தையின் அருகில் ஒருபோதும் வைக்கக்கூடாது.
ஒழுங்கீனம் இல்லாத, இணக்கமான சூழல் வாஸ்துவால் ஊக்குவிக்கப்படுகிறது, இருப்பினும் உடைந்த பொம்மைகளால் வீட்டின் ஆற்றல் ஓட்டம் பாதிக்கப்படலாம். உடைந்த பொம்மைகளை உடனடியாக வீட்டிலிருந்து அகற்றவும் அல்லது சூழலை அமைதியாக வைத்திருக்க அவற்றை சரிசெய்யவும்.
எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் கலைப்படைப்புகள்
உங்கள் குழந்தையின் அறைக்கு கலைப் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் எப்படிப்பட்ட ஓவியங்களை வாங்குகிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். கலைப்படைப்புகள் அறையின் அழகைக் கூட்டினாலும், வன்முறை அல்லது மோசமான விஷயங்களை சித்தரிக்கும் கலைப்படைப்புகளில் இருந்து விலகி இருங்கள்.
உங்கள் குழந்தைக்கு அன்பான சூழலை வழங்குவதற்கு மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான படங்களைப் பயன்படுத்த வாஸ்து பரிந்துரைக்கிறது. மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் கலைப்படைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
கனமான பர்னிச்சர்கள்
குழந்தைகளின் அறைகள் எப்போதும் காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான அல்லது அதிக எடையுள்ள பொருட்களை குழந்தைகள் இருக்குமிடத்தில் வைப்பதைத் தவிர்க்கவும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நெரிசலான பகுதிகள் காற்றோட்டம் மற்றும் நேர்மறை ஆற்றலைத் தடுக்கலாம்.
இது உங்கள் குழந்தைக்கு அசௌகரியத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, இலகுரக, குழந்தைகளுக்கு பிடித்த பர்னிச்சர்களை வைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
