Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வாஸ்துப்படி, பெட்ரூம்மில் பீரோவை இந்த திசையில் வெக்காதீங்க.. இல்லன்னா பணமே சேராது...
Vastu Tips In Tamil: நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் வாஸ்து விதிகள் உள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றி வீட்டில் பொருட்களை வைக்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, வீட்டில் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். வாஸ்துப்படி வீட்டில் பொருட்களை வைக்காமல் இருந்தால், அது வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் தான் பீரோ. இந்த பீரோவில் துணிகள் மட்டுமின்றி, நகை மற்றும் பணத்தையும் வைப்போம். இத்தகைய பீரோவை வீட்டில் சரியான திசையில், சரியான இடத்தில் வைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அதன் விளைவாக வீட்டில் பணம் சேராமல் போவதோடு, நீர் போன்று பணம் செலவாகும் மற்றும் பண இழப்பை சந்திக்க நேரிடும். எனவே வீட்டில் பீரோவை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து இப்போது காண்போம்.
* படுக்கையறையில் பீரோவை வைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் என்றால், அந்த பீரோவை நல்ல வெளிச்சம் வரும் ஜன்னலுக்கு அருகில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், பீரோவில் உள்ள பொருட்களை எடுக்க வசதியாக இருக்கும் மற்றும் பிரகாசமான இடத்தில் தான் லட்சுமி தேவி குடிபுகுவார்.
* வாஸ்துப்படி, படுக்கையறையில் பீரோவை வைப்பதாக இருந்தால், கண்ணாடி இல்லாத பீரோவை வைக்க வேண்டும். ஏனெனில் பெட்ரூம்மில் கண்ணாடியுடனான பீரோவை வைத்தால், அந்த கண்ணாடியில் படுக்கை பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை கண்ணாடியுடன் பீரோ இருந்தால், படுக்கைக்கு எதிரே பீரோவை வைக்காதீர்கள்.
* வாஸ்துப்படி, பணம் மற்றும் நகையை பீரோவில் வைத்தால், அந்த பீரோவை அறையில் வடக்கு பகுதியில் வைக்க வேண்டும். ஏனெனில் வடக்கு திசை குபேர திசை. இந்த திசையில் பீரோவை வைக்கும் போது, நகையும், பணமும் அதிகம் சேரும். எனவே பணத்தை படுக்கை அறையில் வைத்தால், திசையை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
* முக்கியமாக பீரோவை சுவற்றை ஒட்டி மிகவும் நெருக்கமாக வைக்காமல், சற்று இடைவெளிவிட்டு வைக்க வேண்டும். இதனால் வெளியே இருந்து வரும் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
* வாஸ்துப்படி, பணம் வைக்கும் பீரோவானது எப்போதும் மரத்தால் ஆனதாக அல்லது இரும்பால் ஆனதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பீரோவில் தான் செல்வம் பெருகும்.
* வாஸ்துப்படி, பீரோவை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், பீரோவை திறக்கும் போது, அது வடக்கு அல்லது கிழக்கு திசையைப் பார்த்தவாறு இருக்கும்.
* பீரோவின் நிறம் எப்போதும் அடர் நிறத்தில் இருக்கக்கூடாது. வாஸ்துப்படி, செல்வம் அதிகம் வீட்டில் சேர வேண்டுமானால், பீரோவின் நிறம் க்ரீம் அல்லது வெளிரிய நிறத்தில் இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications