Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாஸ்துப்படி, கண்ணாடியை வீட்டின் இந்த திசையில் வெக்காதீங்க.. இல்ல துரதிர்ஷ்டம் துரத்தும்...
Vastu Tips In Tamil: நம் அனைவரது வீட்டிலுமே முகத்தைப் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அந்த கண்ணாடியை நாம் வீட்டில் சரியான இடத்தில், சரியான திசையில் வைக்க வேண்டும். ஏனெனில் கண்ணாடியானது வீட்டில் உள்ள ஆற்றலை பாதிக்கக்கூடியது.
அப்படிப்பட்ட கண்ணாடியை வாஸ்துப்படி சரியான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். தவறான திசையில் வைத்தால், அது வீட்டில் வாஸ்து தோஷத்தை உண்டாக்கி, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரத் தூண்டும். அதுவே சரியான திசையில் வைத்தால், வாஸ்து தோஷம் நீங்கும்.

உங்களுக்கு கண்ணாடியை வாஸ்துப்படி வைக்க தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே வாஸ்துப்படி வீட்டில் கண்ணாடியை தொங்க விடும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.
* வாஸ்துப்படி வீட்டில் கண்ணாடியை தொங்கவிடுவதாக இருந்தால், எக்காரணம் கொண்டும் அவற்றை மேற்கு அல்லது தெற்கு சுவற்றில் வைக்காதீர்கள். இந்த திசையில் வைத்து கண்ணாடியை பார்த்தால், அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் மற்றும் வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின், கண்ணாடியை கிழக்கு அல்லது வடக்கு திசையில் தான் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது, அது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும்.
* வீட்டில் உடைந்த கண்ணாடிகளை வைத்திருக்கக்கூடாது. ஒருவேளை உங்கள் வீட்டில் இருந்தால், அவற்றை பத்திரப்படுத்தாமல் உடனே அப்புறப்படுத்துங்கள். இல்லாவிட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் மேலும் அதிகரிக்கும்.
* கண்ணாடிகளை எப்போதும் அழுக்காக வைத்திருக்கக்கூடாது. வாஸ்துப்படி, அழுக்கு படிந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பது, அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து, வீட்டில் பல பிரச்சனைகளை வரத்தூண்டும்.
* உங்கள் வீட்டின் படுக்கையறையில் கண்ணாடி இருந்தால், தூங்கும் போது அந்த கண்ணாடியில் உடலின் எந்த பகுதியும் தெரியாத வகையில் வைக்க வேண்டும். வாஸ்துப்படி, படுக்கையறையில் உள்ள கண்ணாடியில் உடல் பகுதி தெரிந்தால், அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும்.
* ஒருவேளை படுக்கை அறையில் கண்ணாடியை வைக்க வேறு இடம் தெரியாவிட்டால், தூங்கும் போது அந்த கண்ணாடியின் மேல் ஒரு துணியை போர்த்திவிடுங்கள். இதனால் எதிர்மறை தாக்கம் சற்று குறையும்.
* வாஸ்துப்படி கண்ணாடியை வீட்டில் வைக்கும் போது, ஒன்றுக்கொன்று எதிரே இருக்கக்கூடாது. அப்படி எதிரெதிரே கண்ணாடியை வைத்தால், அது வீட்டில் பதற்றத்தையும், சண்டைகளையும் அதிகரிக்கும்.
* வீட்டின் குளியலறையில் கண்ணாடியை வைத்துள்ளீர்களா? அப்படியானால் அந்த கண்ணாடி குளியலறைக்கு எதிரே இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அது வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
* தற்போது கண்ணாடிகள் பல வடிவங்களில் உள்ளன. ஆனால் வீட்டில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ கண்ணாடியை பயன்படுத்துவதே நல்லது. ஏனெனில் இது ஆற்றல்களை சமமாக பரப்புகின்றன. மேலும் நீள்வட்டம் மற்றும் வட்ட வடிவ கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பது சிறந்ததாக கருதப்படுவதில்லை.
* வாஸ்துப்படி, கண்ணாடியை சமையலறையில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. எனவே உங்கள் வீட்டின் சமையலறையில் கண்ணாடி இருந்தால், உடனே அவற்றை நீக்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications