Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்து படி வீட்டின் இந்த இடங்களில் தெரியாமகூட பணத்தை வைச்சுராதீங்க... இல்லனா பணம் மொத்தமும் போயிரும்...!
வாழ்க்கையில் அனைவருமே நிதி ஸ்திரத்தன்மையையும், தீராத செல்வத்தையும் விரும்புகிறார்கள். தற்போதைய யுகத்தில் பணம் என்பது நம் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாக இருப்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.
பணத்தட்டுப்பாடு இருந்தால் ஒருவர் நிம்மதியான வாழ்க்கையை ஒருபோதும் வாழ முடியாது. உங்கள் வீட்டில் உள்ள ஆற்றல்கள் உங்கள் வாழ்க்கையில் பணப்புழக்கத்தை பாதிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் லாக்கர் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருட்களை நீங்கள் வைக்கும் திசை கூட உங்கள் அதிர்ஷ்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். வாழ்க்கையில் பெரும் செல்வத்தை அடைய நம் வீட்டில் சீரான வாஸ்துவை பராமரிக்க வேண்டியது அவசியம். பணத்தை அதிகளவில் ஈர்க்கவும், பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும் வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
லாக்கரின் திசை
உங்கள் வீட்டிற்கு அதிகளவு செல்வத்தை ஈர்க்க எப்போதும் உங்கள் லாக்கரை உங்கள் வீட்டின் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசையில் லாக்கரை வைப்பது பணத்தை பாதுகாப்பது மற்றும் செல்வத்தின் மிகுதியை குறிக்கிறது.
லாக்கரின் கதவு மேற்கு திசையில் திறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும், ஏனெனில் அது செல்வத்தின் வெளியேற்றத்தையும், பண விரயத்தையும் ஏற்படுத்தலாம்.
பணத்தை வைக்க வேண்டிய திசை
உங்கள் பணம் மற்றும் கார்டுகளை எப்போதும் வடக்கு திசையில் வைக்க வேண்டும். செல்வத்தின் கடவுளான குபேரர் வசிக்கும் திசையாக வடக்கு திசை கருதப்படுகிறது.
வடக்கு திசையில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பணம் மற்றும் பரிமாற்றங்களைச் சேமிக்க ஒரு லாக்கர் அல்லது பெட்டியை வைக்கவும். நீங்கள் வடக்கு திசையில் பணம் வைக்குமிடம் மூலையாக இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வீட்டின் எந்த மூலையிலும் பணத்தை வைக்காதீர்கள்
உங்கள் வீட்டின் எந்த நான்கு மூலைகளிலும் பணத்தை வைப்பதைத் தவிர்க்கவும். மூலைகள் எப்போதும் முடிவைக் குறிக்கின்றன மற்றும் தடங்கல்களை குறிக்கின்றன. தங்கள் செல்வம் எங்காவது சிக்கியிருப்பதை யாரும் விரும்புவதில்லை.
இருப்பினும், ஏதேனும் தற்செயலாக மூலைகள் தவிர்க்க முடியாததாக இருந்தால், உங்கள் பணத்தை வைக்க வடக்கு அல்லது கிழக்கு மூலையைத் தேர்வு செய்யவும்.
பார்க்கக்கூடிய இடத்தில் வைக்கக்கூடாது
உங்கள் பணப்பெட்டி உங்கள் வீட்டின் நுழைவாயிலில் இருந்தோ அல்லது எந்த வாசலில் இருந்தும் பார்க்கப்படக் கூடியதாக இருக்கக்கூடாது. அலமாரியின் உள்ளே லாக்கரை வைப்பது நல்லது அல்லது கண்களில் படாதவாறு மறைத்து வைப்பது நல்லது என்று வாஸ்து பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் லாக்கர் அல்லது பண அலமாரி வாசலில் இருந்து எளிதில் பார்க்கக் கூடியதாக இருந்தால், உங்கள் செல்வம் அனைத்தும் விரைவில் தொலைந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
எந்தெந்த இடங்களில் பணத்தை வைக்கக்கூடாது?
உங்கள் வீட்டின் தெற்கு திசையில் உங்கள் பணப்பெட்டி அல்லது லாக்கரை எப்போதும் வைக்காதீர்கள். பணத்தின் தெய்வமான லட்சுமி தேவி தெற்கிலிருந்து நுழைந்து வடக்கில் குடியேறுவதாக நம்பப்படுகிறது. உங்கள் பணத்தை தெற்கு திசையில் இருந்து விலக்கி வைப்பது நல்லது. குளியலறை, சமையலறை, படிக்கட்டுகள் அல்லது ஸ்டோர்ரூம் அருகே லாக்கர் அல்லது பணப்பையை வைக்க வேண்டாம்.
லாக்கருக்குள் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?
லாக்கர் இருக்கும் அறைக்குள்ளேயோ அல்லது லாக்கருக்கு உள்ளேயோ சிலைகள் மற்றும் தெய்வங்களை வைக்க வேண்டாம். மாறாக பணத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரு சிறிய கண்ணாடியை பெட்டியில் வைக்கலாம். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் மிகவும் வளமான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லலாம் என்று எங்கள் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
