Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இந்த பொருட்கள் உங்க வீட்டுல இருந்தா உடனே தூக்கி போடுங்க.. இல்ல வீட்டுல கஷ்டம் பலமடங்கு அதிகரிக்கும்..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலை வெளியிடுகின்றன. ஆகவே தான் நமது வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதுவும் ஒவ்வொரு பொருட்களையும் சரியான இடத்தில், சரியான திசையில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாஸ்துப்படி வீட்டில் ஒருசில பொருட்களை வைத்திருக்கக்கூடாது மற்றும் ஒருசில பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் வைக்கக்கூடாது.

அப்படி வைக்கும் போது, அதன் விளைவாக வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருமடங்கு அதிகரித்து, குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம், நிதி நிலை போன்றவற்றில் பல எதிர்பாராத பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது எந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
உடைந்த அல்லது பயன்படுத்தாத பொருட்கள்
பெரும்பாலானோர் தங்களின் வீடுகளில் பயன்படுத்தப்படாத அல்லது உடைந்த பொருட்களை அழகாக உள்ளது என்ற காரணத்திற்காக சேகரித்து வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி வீட்டில் பயன்படுத்தாத பயனற்ற பொருட்களை சேகரித்து வைப்பதால், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, ஆரோக்கியம், நிதி நிலை, மன நிலை, உணர்ச்சி ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உபயோகப்படுத்தாத பொருட்கள் வீட்டில் இருந்தால், அவற்றை உடனே வீட்டில் இருந்து அகற்றுங்கள்.
கட்டிலுக்கு அடியில் எதையும் வைக்காதீர்கள்
நிறைய பேர் தாங்கள் படுக்கும் கட்டிலுக்கு அடியில் காலணிகளை விடுவார்கள். ஆனால் இப்படி கட்டிலுக்கு அடியில் செருப்புக்களை வைத்தால், அது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைத் தடுத்து, எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதன் விளைவாக நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்காமல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே உங்கள் கட்டிலுக்கு அடியில் செருப்புக்களை விடுவீர்களானால், அதை உடனே அகற்றுங்கள்.
படுக்கைக்கு முன் கண்ணாடி
உங்கள் வீட்டில் கண்ணாடியைக் கொண்ட பீரோ உள்ளதா? அப்படியானால் அந்த பீரோவை படுக்கையின் முன் வைப்பதைத் தவிர்த்திடுங்கள். கண்ணாடியில் படுக்கையானது பிரதிபலித்தால், அது நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தடுப்பதோடு, மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். ஒருவேளை கண்ணாடி உள்ள பீரோவை வைக்க வேறு இடம் இல்லாவிட்டால், அந்த கண்ணாடியை தூங்கும் போது ஒரு துணியால் மறைத்துவிட்டு தூங்குங்கள்.
முட்செடிகள்
வாஸ்துப்படி, கற்றாழை செடியை மற்றும் ரோஜா செடிகளைத் தவிர, பிற முட்களைக் கொண்ட செடிகளை அழகாக உள்ளது என்பதற்காக வீட்டில் வைத்திருந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்துங்கள். ஏனெனில் இப்படிப்பட்ட செடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகம் ஈர்க்கும். இதன் விளைவாக குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கும் மற்றும் குடும்ப வாழ்க்கை எப்போதும் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். எனவே இந்த செடிகளுக்கு பதிலாக மணி பிளாண்ட், மூங்கில் செடி, ரப்பர் செடி போன்றவற்றை வளர்த்து வாருங்கள்.
மின்னணு பொருட்களை படுக்கையில் இருந்து அகற்றவும்
வாஸ்துப்படி, படுக்கை அறையில் டிவி, லேப்டாப், மொபைல் போன்றவற்றை வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல் தடுக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே எப்போதும் தூங்கும் போது அருகில் லேப்டாப் மற்றும் மொபைலை வைத்திருக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
