Latest Updates
-
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்!
வாஸ்துப்படி, வீட்டின் தென்மேற்கு திசையில் மறந்தும் இதை வெச்சுடாதீங்க.. இல்ல கஷ்டம் வாட்டி எடுத்துடும்...
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் திசைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதுவும் வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளும் சரியான திசையில் வைக்கப்பட வேண்டும். தவறான திசையில் பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் உள்ளவர்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனெனில் ஒவ்வொரு திசையில் இருந்தும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் வெளிப்படும். ஒரு பொருளை தவறான திசையில் வைத்தால், அந்த திசையில் இருந்து எதிர்மறை ஆற்றல் அதிகம் வெளிப்பட்டு, எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்.

திசைகள் என்றதும் பலருக்கும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகள் தான் நினைவிற்கு வரும். ஆனால் வீட்டின் தென்மேற்கு திசையில் ஒருசில பொருட்களை வைப்பது அந்த வீட்டில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏனெனில் தென்மேற்கு திசையானது ராகு-கேதுவின் திசையாக கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் எந்த பொருட்களை வைப்பதாக இருந்தாலும், வாஸ்து பார்த்து வைக்க வேண்டும். இப்போது வீட்டின் தென்மேற்கு திசையில் எவற்றையெல்லாம் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
பூஜை அறை கூடாது
வாஸ்துப்படி வீட்டின் தென்மேற்கு திசையில் பூஜை அறையை வைத்திருக்கக்கூடாது. இந்த திசையில் தெய்வங்களை வைத்து வழிபட்டால், அதனால் எந்த ஒரு நல்ல பலனும் கிடைக்காது என்பது நம்பிக்கை. முக்கியமாக இந்த திசையில் மனம் எப்போதும் ஒருநிலையில் இருக்காது. இந்த திசையில் பூஜை அறையை வைத்து தெய்வங்களை வழிபடும் போது, மனதை ஒருமுகப்படுத்தி பூஜை செய்ய முடியாமல் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
படிக்கும் அறை கூடாது
வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், அவர்களின் படிக்கும் அறையை இந்த திசையில் அமைக்காதீர்கள். ஏனெனில் இந்த திசையில் மனம் ஒருமுகப்படாமல் அலைந்துக் கொண்டே இருக்கும். மேலும் இந்த திசையில் குழந்தைகள் உட்கார்ந்து படித்தால், அவர்களின் நினைவில் எதுவும் இருக்காது. எனவே இந்த திசையில் குழந்தைகளின் படிக்கும் அறையை அமைக்கக்கூடாது.
விருந்தினர்களின் அறை கூடாது
வீட்டின் தென்மேற்கு திசையில் எப்போதும் விருந்தினர்களின் அறையை அமைக்கக்கூடாது. ஏனெனில் இந்த திசையானது ராகு மற்றும் கேதுவின் திசை. இந்த திசையில் விருந்தினர்களை தங்க வைத்தால், அங்கு வசிப்பவர்களின் மனநிலையிலும், நடத்தையிலும் திடீர் மாற்றம் ஏற்பட்டு, விருந்தினர்களுடன் சண்டையை சந்திக்க நேரிடும். எனவே இந்த தவறை செய்யாதீர்கள்.
நீர்த்தொட்டி இருக்கக்கூடாது
வீட்டின் தென்மேற்கு திசையில் நிலத்தடி நீர் தொட்டியை அமைக்கக்கூடாது. இல்லாவிட்டால் அது வீட்டில் வாஸ்து தோஷத்தை உருவாக்கும். அதன் விளைவாக வீட்டில் உள்ளோர் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பதோடு, வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கும்.
கழிவறை இருக்கக்கூடாது
வாஸ்துப்படி வீட்டின் தென்மேற்கு திசையில் கழிவறையை அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடை ஏற்படும் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். நிறைய மருத்துவ செலவை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications