Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க
வாஸ்துப்படி, வீட்டின் தெற்கு திசையில் இந்த பொருட்களை வெக்காதீங்க. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்...
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேப் போல் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி இருக்க வேண்டும்.
தவறான திசையில் பொருட்கள் வைக்கப்பட்டால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க வைக்கும். எனவே எந்த ஒரு பொருளை வீட்டில் வைப்பதாக இருந்தாலும், அவற்றை வாஸ்து பார்த்து வைக்க வேண்டும்.

தற்போது வீடு, அலுவலகம், கடை என்று அனைத்து இடங்களிலும் வாஸ்து விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கிறது. திசைகளில் தெற்கு திசையில் பொருட்களை வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த திசையில் தவறுதலாக பொருட்களை வைத்தால், அது அந்த வீட்டில் பிரச்சனைகளை அதிகரித்து, வறுமையை வரவழைக்கும். இப்போது வாஸ்துப்படி வீட்டின் தெற்கு திசையில் எவற்றை வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
படுக்கையறை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் எப்போதும் படுக்கையறையானது தெற்கு திசையில் இருக்கக்கூடாது. அப்படி வீட்டில் தெற்கு திசையில் படுக்கை அறை இருந்தால், அது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிப்பதோடு, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கும்.
ஸ்டோர் ரூம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பொருட்களை வைக்கும் ஸ்டோர் ரூம் தெற்கு திசையில் இருக்கக்கூடாது. அப்படி தெற்கு திசையில் ஸ்டோர் ரூம் இருந்தால், அது குடும்ப உறுப்பினர்களிடையேயான பிணைப்பு மற்றும் அன்பைக் குறைத்து, குடும்ப சூழல் எப்போதும் சண்டைகள் நிறைந்து இருக்கும்.
துளசி செடி
உங்கள் வீட்டில் துளசி செடியை வளர்க்கிறீர்களா? அப்படியானால் துளசி செடியை வீட்டின் தெற்கு திசையில் வைக்காதீர்கள். தெற்கு திசையானது முன்னோர்களின் திசை மற்றும் இந்த திசையில் துளசி செடியை வைத்தால், அது வீட்டில் லாபத்திற்கு பதிலாக நிதி இழப்பை தான் அதிகரிக்கும்.
காலணிகள்
காலணிகளை எப்போதும் வீட்டின் தெற்கு திசையில் வைக்கக்வடாது. அப்படி வைத்தால், அது முன்னோர்களை அவமதிப்பது போன்றதாகும். மேலும் செருப்புக்களை இந்த திசையில் வைக்கும் போது வீட்டில் சிக்கல்கள் அதிகரிக்கும் மற்றும் வறுமை வாட்டி வதைத்துவிடும்.
இயந்திரங்கள்
வீட்டில் எந்த ஒரு இயந்திரங்களையும் தெற்கு திசையில் வைக்கக்கூடாது. தெற்கு திசையில் இவற்றை வைத்தால், அது வீட்டில் நேர்மறை ஆற்றலை தடுத்து, எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். கனமாக இருக்கும் பொருட்களை தெற்கு திசையில் வைக்கலாம். ஆனால் எந்த இயந்திரங்களையும் தெற்கு திசையில் வைக்கக்கூடாது.
ஃபீனிக்ஸ் பறவை போட்டோ
வாஸ்துப்படி, வீட்டில் ஒருசில போட்டோக்களை வைப்பது நல்லதாக கருதப்படுகிறது. அதில் ஒன்று தான் ஃபீனிக்ஸ் பறவை போட்டோ. இந்த போட்டோவை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது மற்றும் இது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும். இந்த போட்டோவை வைக்க சிறந்த திசை என்றால், அது தெற்கு திசை தான். தென்திசையில் ஃபீனிக்ஸ் போட்டோவை வைக்கும் போது, அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் வெளியேற்றி, வீட்டை செல்வ செழிப்போடு வைத்திருக்கும்.அதுவும் இந்த போட்டோவை வீட்டின் ஹாலில் தான் தொங்கவிட வேண்டும்.
துடைப்பம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் துடைப்பத்தை எப்போதும் சரியான வழியில், சரியான திசையில் வைக்க வேண்டும். ஏனெனில் ஜோதிடத்தின் படி துடைப்பம் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறத. எனவே எப்போதும் துடைப்பத்தை காலால் மிதிக்கக்கூடாது. மேலும் இந்த துடைப்பத்தை எப்போதும் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. அதே சமயம் துடைப்பத்தை தெற்கு திசையில் தான் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications