Latest Updates
-
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது!
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த 4 பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டில் பண இழப்பு ஏற்படும்...
Vastu Tips In Tamil: தற்போது அனைவரது வீட்டிலுமே ஃப்ரிட்ஜ் உள்ளது. அந்த அளவில் ஃப்ரிட்ஜ் ஒரு அத்தியாவசிய பொருளாகிவிட்டது. அதோடு நிறைய வீடுகளில் ஃப்ரிட்ஜ் உணவுகளை பாதுகாக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், ஒரு ஸ்டேன்ட்டாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது நிறைய பேர் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ்ஜின் மேல் சில பொருட்களை வைப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைக்கும் சில பொருட்கள், அந்த வீட்டில் வாஸ்து தோஷத்தை உருவாக்குவதாக கூறப்படுகிறது.

மேலும் ஃப்ரிட்ஜ்ஜை வீட்டின் சமையலறையில் வைப்பதாக இருந்தால், அதை வாஸ்துப்படி வைக்க வேண்டும். அதேப் போல் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் எந்த பொருட்களை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதையும் அறிந்தே வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் பண இழப்பை ஏற்படுத்தும். இப்போது வாஸ்துப்படி, வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜின் மேல் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
எந்த திசையில் ஃப்ரிட்ஜ்ஜை வைக்க வேண்டும்?
வீட்டில் ஃப்ரிட்ஜ்ஜை வைப்பதாக இருந்தால் வாஸ்துப்படி வைக்க வேண்டும். அதுவும் எப்போதும் ஃப்ரிட்ஜ்ஜை மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். மேலும் ஃப்ரிட்ஜ்ஜை சுவற்றை ஒட்டி வைக்காமல், சுவற்றில் இருந்து குறைந்தது ஒரு அடி இடைவெளி விட்டு தான் வைக்க வேண்டும். இந்த திசையில் ஃப்ரிட்ஜ்ஜை வைப்பதால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
தங்கம், பணம்
பலர் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ்ஜின் மேல் பணம், தங்கம் போன்றவற்றை வைப்பார்கள். இப்படி பணத்தை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைத்தால், அது பண இழப்பை தான் ஏற்படுத்தும். அதுவும் நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், ஃப்ரிட்ஜ்ஜின் மீது பணம் வைக்கும் போது, வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
பரிசுகள், நினைவுப் பொருட்கள்
சிலர் தங்கள் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ்ஜின் மீது பரிசுகள், நினைவுப் பொருட்கள் போன்றவற்றை வைத்திருப்பார்கள். ஆனால் அப்படி வைப்பது நல்லதல்ல. ஏனெனில் இது அந்த வீட்டில் உள்ளோரிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மருந்துகள்
தற்போது அனைவரது வீட்டிலுமே முதலுதவி அளிப்பதற்காக மருந்து பெட்டிகள் இருக்கும். அந்த மருந்து பெட்டிகளை பலர் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி, மருந்துகளை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைக்கக்கூடாது. அப்படி வைத்து பயன்படுத்தினால், அது ஆரோக்கியத்தை இன்னும் தான் மோசமாக்கும்.
மூங்கில் செடி
வாஸ்துப்படி மூங்கில் செடியை வீட்டில் வைத்து வளர்த்தால், வீட்டின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அந்த மூங்கில் செடியை நிறைய பேர் அழகிற்காக ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி இப்படி ஃப்ரிட்ஜ்ஜின் மேல் மூங்கில் செடியை வைத்தால், அது பண இழப்பையும், செலவுகளையும் தான் அதிகரிக்கும். எனவே இந்த தவறை செய்துவிடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications