Latest Updates
-
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்!
வாஸ்துப்படி, வீட்டின் ஹாலில் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்ல அது வீட்டின் கஷ்டத்தை அதிகரிக்கும்..
Vastu Tips In Tamil: ஒவ்வொருவருக்குமே அவர்களது வீடு தான் சொர்க்கம். எங்கு சுற்றினாலும், வீட்டில் கிடைக்கும் நிம்மதியான உணர்வு வேறு எங்கும் கிடைக்காது. நிறைய பேர் தங்களின் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள பலவிதமான பொருட்களை வாங்கி வைப்பார்கள். ஒரு வீட்டில் ஹால் முக்கியமான பகுதி.
வீட்டினுள் நுழைந்ததுமே முதலில் ஹாலில் தான் நாம் நுழைவோம். இந்த ஹாலில் தான் நாம் குடும்பத்தினருடன் ஒன்று கூடி இருப்போம். மேலும் வீட்டிலேயே நிறைய நேரம் செலவிடும் ஒரு பகுதியும் இது தான். எனவே இந்த ஹாலை அழகாக வைத்துக் கொள்ள பலரும் விரும்புவோம்.

ஆனால் ஹாலை அலங்கரிக்கும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் வாஸ்துப்படி ஹாலை அலங்கரிக்கும் போது செய்யும் தவறுகள், அந்த வீட்டின் கஷ்டத்தை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
1. வீட்டின் ஹால் எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முக்கியமாக ஹாலில் தேவையில்லாத ஃபர்னிச்சர்கள் மற்றும் பயன்படுத்தாத/தேவையில்லாத பொருட்களை ஹாலில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2. வீட்டின் ஹாலில் சோகமான போட்டோக்கள் அல்லது கலைப் பொருட்களை வைத்திருப்பதைத் தவிர்க் கவேண்டும். அதேப் போல் உடைந்த ஷோபீஸ்கள், வேலை செய்யாத எலக்ட்ரிக்கல் பொருட்கள், உடைந்த கண்ணாடி போன்றவற்றை வைத்திருக்கக்கூடாது. வாஸ்துப்படி இவற்றை ஹாலில் வைத்திருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.
3. வீட்டின் ஹாலை இயற்கை அழகை பிரதிபலிக்கும் பொருட்களால் அலங்கரிக்கலாம். ஆனால் ஹாலில் காய்ந்த பூக்கள், பொன்சாய் அல்லது காக்டஸ் போன்ற செடிகளை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கு பதிலாக, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரத் தூண்டும்.
4. உங்களுக்கு செடிகள் பிடிக்குமானால், வீட்டின் ஹாலில் காற்றை சுத்திகரிக்கும செடிகளான மணி பிளாண்ட், ஸ்பைடர் பிளாண்ட், ஸ்நேக் பிளாண்ட் போன்றவற்றை வைத்து வளர்க்கலாம். இவை அழகான தோற்றத்தைக் கொடுப்பதோடு, வீட்டினுள் சுத்தமான காற்றினை சூழ்ந்திருக்கச் செய்யும்.
5. மீன் தொட்டியை வைக்க விரும்பினால், ஹாலின் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு பக்கத்தில் வைக்க வேண்டும். இதனால் வீட்டுச் சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
6. உங்கள் வீட்டின் ஹாலில் நீரூற்று வைக்கும் வகையில் போதுமான இடம் இருந்தால், அதை வடக்கு திசையில் வையுங்கள். வீட்டினுள் எப்போதும் நீரின் சப்தம் கேட்டவாறு இருந்தால், அது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவி புரியும்.
7. வாஸ்துப்படி, வீட்டின் ஹால் எப்போதும் சதுரம் மற்றும் செவ்வக வடிவில் தான் இருக்க வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருக்கும். ஆனால் உங்கள் வீட்டின் ஹால் அவ்வாறு இல்லாவிட்டால், ஹாலில் உள் அலங்கார செடிகளை வைத்து வளர்த்து வாருங்கள்.
8. வீட்டின் ஹாலை பூக்களால் அலங்கரிப்பது ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுப்பதைத் தவிர, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அதுவும் செயற்கை பூக்களால் அலங்கரிப்பதை விட, நிஜ பூக்களால் அலங்கரித்தால், வீடு நல்ல மணத்துடன் இருப்பதோடு, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications