Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 தீய குணங்கள் பெண்களுக்கு கூடவே பிறந்ததாம் - என்னென்ன தீய குணங்கள் தெரியுமா? -
Guru Peyarchi 2026: உச்சம் பெறும் குருவால் இந்த 6 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
வாஸ்துப்படி, வீட்டின் இந்த திசையில் இந்த படங்களை வெச்சா.. வீட்டில் செல்வம் குவியுமாம்..
Vastu Tips: நாம் ஒவ்வொருவருமே தங்கள் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்காக வீட்டில் பல பொருட்களை வாங்கி வைத்து வீட்டை அலங்கரிப்போம். ஆனால் ஒரு வீட்டில் சந்தோஷமும், அமைதியும் நிலைத்திருக்க வேண்டுமானால், அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் வாஸ்துப்படி சரியான இடத்தில், சரியான திசையில் இருக்க வேண்டும்.
சிலருக்கு வீட்டில் விதவிதமான படங்களை வாங்கி வைக்க பிடிக்கும். அப்படி வாங்கும் படங்களை கண்ட இடத்தில் வைப்போம். ஆனால் வீட்டில் எந்த படங்களை வைப்பதாக இருந்தாலும், வாஸ்துப்படி சரியான திசையில் வைக்காமல் இருந்தால், அதன் விளைவாக வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, அந்த வீட்டில் உள்ளோர் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நீங்களும் உங்கள் வீட்டில் இப்படி கண்ட போட்டோக்களை வாங்கி வைப்பீர்களானால், அவற்றை வாஸ்து பார்த்து, வீட்டில் சரியான திசையில், இடத்தில் தொங்கவிடுங்கள். இப்போது வாஸ்துப்படி, வீட்டில் செல்வம் பெருகி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் எந்த போட்டோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
குபேரர் போட்டோ
செல்வத்தின் கடவுளாக கருதப்படுபவர் தான் குபேரர். வீட்டில் பணப்பிரச்சனையை அதிகம் சந்தித்தாலோ அல்லது வீட்டில் பணப்பற்றாக்குறை இருந்தாலோ, குபேரரின் போட்டோவை வீட்டில் வாங்கி வைக்கலாம். அதுவும் அப்படி வாங்கும் குபேரரின் போட்டோவை வாஸ்துப்படி வடக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, பணப்புழக்கமும் அதிகரிக்கும்.
பஞ்சமுக அனுமன் போட்டோ
வீட்டில் திருஷ்டி படக்கூடாதெனில், பஞ்சமுக அனுமனின் போட்டோவை வாங்கி வைப்பது நல்லது. அதுவும் வாஸ்துப்படி இந்த பஞ்சமுக அனுமன் போட்டோவை தெற்கு பக்கமாக வைப்பதே மிகவும் நல்லது. இப்படி வைப்பதன் மூலம், வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் மீது எந்த திருஷ்டியும் படாது மற்றும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நுழையாது. வேண்டுமானால் இந்த போட்டோவை தென்மேற்கு மூலையிலும் வைக்கலாம்.
ஏழு குதிரைகளின் போட்டோ
ஏழு குதிரைகள் ஓடும் படியான போட்டோவை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த வகை போட்டோ தொழில், வணிகம் மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. வாஸ்துப்படி, இந்த ஏழு குதிரைகளின் போட்டோவை வடக்கு திசையில் வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. வேண்டுமானால், இதை தெற்கு அல்லது கிழக்கு திசையிலும் வைக்கலாம். அதுவும் குதிரைகளானது கடற்கரையோரங்களில் ஓடுவது போன்று இருந்தால், படத்தில் உள்ள நீரோட்டம் முன்னோக்கி பாய வேண்டும். இப்படி இருந்தால், அது அந்த வீட்டில் உள்ளோரின் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தரும்.
கிருஷ்ணரின் போட்டோ
வீட்டில் உள்ளோரிடையே அன்பையும், நல்லிணக்கத்தையும் பராமரிக்க விரும்பினால், கிருஷ்ணரின் போட்டோவை வீட்டில் வைத்திருப்பது நல்லது. வாஸ்துப்படி, கிருஷ்ணரின் போட்டோவை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் படுக்கை அறையில் கிருஷ்ணர் ராதையுடன் இருக்கும் போட்டோவை வைப்பது நல்லது. இதனால் உறவுகளில் இனிமை அதிகரிக்கும் மற்றும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
நீர்வீழ்ச்சியின் போட்டோ
உங்களுக்கு இயற்கையின் மீது விருப்பம் இருந்தால், நிச்சயம் உங்கள் வீட்டில் நீர்வீழ்ச்சி அல்லது ஓடும் நீர் போன்ற இயற்கை காட்சி நிறைந்த போட்டோக்களை வைத்திருக்க விரும்புவீர்கள். இப்படியான போட்டோக்களை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. அதுவும் வாஸ்துப்படி இந்த வகை போட்டோக்களை வடக்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அதோடு இந்த வகை படத்தை கிழக்கு திசையிலும் வைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications