Latest Updates
-
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
வாஸ்துப்படி, ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. பண கஷ்டம் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்..
Vastu Tips In Tamil: அனைவருக்குமே வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரியும். நாம் குடியிருக்கும் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி இருந்தால், அந்த வீடு செல்வ செழிப்போடு இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வர்.
வாஸ்து குறைபாடு கொண்ட வீட்டில் இருந்தால், அது வாழ்வில் பிரச்சனை மேல் பிரச்சனையை சந்திக்க நேரிட்டு, வாழ்க்கையே நரகமாக இருக்கும். எனவே நீங்கள் உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கக்கூடாதெனில் வீட்டில் வைக்கும் பொருட்களை சரியான திசையில் மற்றும் இடத்தில் வையுங்கள்.

அந்த வகையில் வீட்டில் ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அந்த ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் சரியான திசையில், சரியான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் அதன் முழு பலனைப் பெற முடியும். இப்போது ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் வைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்களைக் காண்போம்.
ராமர் பட்டாபிஷேக போட்டோ எப்படி இருக்கும்?
ராமர் பட்டாபிஷேக போட்டோவில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் இருப்பர். இந்த ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் சூழல் இனிமையாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்து கடவுள்களில் ஒருவர் தான் ராமர். இந்த ராமர் ஒரு நல்ல மகன், கணவன் மற்றும் ராஜாசிற்கு முன்மாதிரியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட ராமரைப் பற்றிய கதை தான் ராமாயணம்.
ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைக்க சிறந்த திசை எது?
பழங்கால வாஸ்து சாஸ்திரத்தின் படி, ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைக்க சிறந்த திசை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளைப் பார்த்தவாறு வைப்பது சிறந்தது. ஏனெனில் இந்த அனைத்து திசைகளுமே நேர்மறை ஆற்றல்களை வரவேற்கின்றன. இப்படிப்பட்ட திசையில் ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைப்பதோடு, அந்த இடத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த இடத்தில் வைக்க வேண்டும்?
ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைக்க சிறந்த இடம் என்றால், பாத்ரூம்மைத் தவிர, படுக்கை அறை, ஹால், படிக்கும் அறை போன்றவை தான். இந்த பகுதிகளில் ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைத்தால், அது அந்த வீட்டில் நல்ல பலனைத் தரும். ஒருவேளை உங்கள் வீட்டில் தனியாக பூஜை அறை இருந்தால், அங்கு வைப்பது இன்னும் நல்லது. அதுவும் அந்த போட்டோவை மிகவும் உயரத்தில் வைக்காமல், கண் மட்டத்தில் வைக்க வேண்டும்.
எந்த வகையான ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைக்க வேண்டும்?
ராமர் பட்டாபிஷேக போட்டோவானது உயர்தரமான பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதுவும் கோல்டன் மற்றும் வெண்கல நிறங்களால் ஆன ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைப்பது நல்லது. இப்படி நல்ல தரமான பொருட்களால் ஆன ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைப்பது நல்ல தோற்றத்தைத் தருவதோடு, நல்ல பலனை வாரி வழங்கும்.
ஹாலில் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும்?
ஸ்ரீராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டின் ஹாலில் வைத்தால், அது வசீகரமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, வீட்டில் உள்ளோரிடையே இணக்கத்தை அதிகரிக்கும். மேலும் வீட்டின் சூழ்நிலையையும் மேம்படுத்தும். முக்கியமாக வீட்டில் இருப்போருக்கு ஒருவித மன அமைதியைத் தரும்.
படுக்கையறையில் வைப்பதால் என்ன நன்மை கிடைக்கும்?
படுக்கையறையில் ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைத்தால், அது ஒரு தெய்வீக பாதுகாப்பு மற்றும் மனதில் அன்பை அதிகரிக்கும். மேலும் இந்த போட்டோ ஒரு நித்திய மற்றும் நல்லொழுக்கமான உறவின் இலட்சியத்தைக் குறிக்கும். தம்பதிகளின் படுக்கையறையில் வைக்க ஏற்ற போட்டோக்களுள், இதுவும் ஒன்று.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications