Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்க வீட்டுல விண்ட் சைம் இருக்கா? அதை சரியான இடத்துல மாட்டுங்க.. இல்ல வீட்டுல கஷ்டம் அதிகரிக்கும்..
Vastu Tips In Tamil: வீட்டின் அழகை மேம்படுத்த உதவும் பல்வேறு பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் விண்ட் சைம். இந்த விண்ட் சைம் வெறும் அழகு பொருள் மட்டுமல்ல. வீட்டில் நேர்மறை ஆற்றல், அமைதி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை ஈர்க்கவும் உதவுகிறது. இந்த விண்ட் சைம் வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சூயி போன்றவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
விண்ட் சைம் இவ்வளவு சிறப்பானதாக கருதப்படுவதற்கு காரணம், காற்று வீசும் போது விண்ட் சைம்மில் இருந்து வெளிவரும் இனிமையான ஓசை தான். இந்த ஓசை வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து, வீட்டில் உள்ள தடைகளை நீக்குகிறது.

இப்படிப்பட்ட விண்ட் சைம்மை சரியான திசையில், சரியான இடத்தில் தொங்கவிட வேண்டும். அதேப் போல் விண்ட் சைம்மில் உள்ள கம்பிகளின் எண்ணிக்கையையும் கவனிக்க வேண்டும் இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
எந்த இடத்தில் விண்ட் சைம்மை தொங்க விட வேண்டும்?
* விண்ட் சைம்களை வழக்கமாக வீட்டின் ஹாலில் தொங்க விடுவது நல்லது. அதுவும், ஹாலில் பிரதான கதவுக்கு அருகில் வைப்பது சிறந்தது. ஆனால் அதை வாசல் கதவுக்கு மேலே அல்லது வாசல் கதவின் மேல் தொங்கவிடக்கூடாது.
* விண்ட் சைம்களை வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிடலாம். இப்படி நடுவீட்டில் தொங்கவிடும் போது அதன் ஓசை எல்லா திசைகளிலிருந்தும் கேட்கப்படும். மேலும் இது பிரம்மஸ்தானத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலை நடுநிலையாக்க உதவுகிறது.
* விண்ட் சைம்களை உட்காரும் இடம், சாப்பிடும் இடம், வேலை செய்யும் இடம் அல்லது ஓய்வெடுக்கும் இடத்தில் தொங்கவிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு, இதை எப்போதும் சுவர், செடிகள், நாற்காலிகள் போன்றவற்றில் இருந்து குறைந்தது 2 அடி தொலைவில் தான் தொங்கவிட வேண்டும்.
படுக்கை அறையில் எங்கு தொங்கவிடலாம்?
படுக்கை அறையில் விண்ட் சைம்களை ஜன்னல் அல்லது பால்கனி நுழைவாயிலுக்கு முன் தொங்கவிடலாம். இதனால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். ஆனால் படுக்கைக்கு மேலே இதை தொங்கவிடக்கூடாது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்க மேற்கு, வடமேற்கு அல்லது தென்மேற்கு திசையில் செராமிக் வகை விண்ட் சைம்களை தொங்கவிட வேண்டும்.
வீட்டிற்கு வெளியே எந்த வகை விண்ட் சைம்மை தொங்கவிடலாம்?
வீட்டிற்கு வெளியே பால்கனி, தோட்டம் போன்ற பகுதிகளில் விண்ட் சைம்களை தொங்க விடுவதாக இருந்தால், அங்கு மெட்டலால் ஆன விண்ட் சைம்களை தொங்கவிடக்கூடாது. அதற்கு பதிலாக மரத்தாலான அல்லது மூங்கில் விண்ட் சைம்களை தொங்கவிட வேண்டும்.
விண்ட் சைம்மில் எத்தனை கம்பிகள் இருக்க வேண்டும்?
வீட்டில் விண்ட் சைம்களை வாங்கி தொங்கவிட விரும்பினால், அதில் உள்ள கம்பிகளின் எண்ணிக்கையை கவனித்து வாங்க வேண்டும். ஏனெனில் அதன் ஒவ்வொரு எண்ணிக்கையும் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.
* குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமாக இருந்தால், அந்த பிரச்சனை நீங்கி, வீட்டில் அமைதி நிலைத்திருக்க 2-3 கம்பிகளை/தண்டுகளைக் கொண்ட விண்ட் சைம்களை தொங்கவிடலாம்.
* வீட்டில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், வெற்றி மேல் வெற்றி கிடைக்கவும், செல்வம் பெருகவும் 3, 6, 9 ஆகிய எண்ணிக்கையிலான விண்ட் சைம்களை தொங்கவிடலாம்.
* 4 கம்பிகளைக் கொண்ட மெட்டல் விண்ட் சைம்கள் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் இந்த விண்ட் சைம்மை நுழைவாயிலுக்கு முன் தொங்கவிட வேண்டும். இதனால் நல்ல அதிர்ஷ்டமும், செல்வமும் ஈர்க்கப்படும்.
* 5 கம்பிகளைக் கொண்ட விண்ட் சைம்கள் நிலம், நீர், நெருப்பு, உலோகம் மற்றும் மரம் ஆகிய 5 கூறுகளையும் குறிக்கிறது. இதை வீட்டில் தொங்க விடுவதால், வீட்டில் உள்ளோரிடையே நல்லிணக்கத்திற்கு உதவும். அதுவும் இந்த வகை விண்ட் சைம்மை ஹாலின் தென்கிழக்கு திசையில் தொங்கவிட வேண்டும்.
* 6 கம்பிகளைக் கொண்ட விண்ட் சைம்கள் வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்க உதவுகிறது. மேலும் இது தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண உதவுகிறது.
* 7 கம்பிகளைக் கொண்ட விண்ட் சைம்கள் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதோடு, கற்பனைத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், அவர்களின் அறிவாற்றல் சிறப்பாக இருக்க இந்த வகை விண்ட் சைம்களை படிக்கும் அறையின் மேற்கு திசையில் தொங்கவிடலாம்.
* 8 கம்பிகளைக் கொண்ட விண்ட் சைம்கள் முன்னேற்றத்திற்காகவும் செல்வம் பெருகவும் சிறந்தது. அதற்கு இதை வீட்டின் தென்கிழக்கு திசையில் தொங்கவிட வேண்டும்.
* 9 கம்பிகளைக் கொண்ட விண்ட் சைம்கள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கதவுகள் எதிரெதிரே இருந்தால், இந்த வகை விண்ட் சைம்களை தொங்க விடலாம். இந்த வகை விண்ட் சைம்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications