Latest Updates
-
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க..
வாஸ்துப்படி, மிக்ஸி, கிரைண்டரை இந்த திசையில் வெக்காதீங்க.. இல்ல பண இழப்பு ஏற்படும்..
Vastu Tips For Kitchen In Tamil: ஒருவரது வீடு வாஸ்துப்படி கட்டப்பட்டு, அந்த வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றும் வாஸ்து விதிகளின் படி வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருந்து, மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும்.
ஆனால் வாஸ்து விதிகளை பின்பற்றாத வீடுகளில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம், நிதி நிலை மற்றும் தொழில் வாழ்க்கை போன்றவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் உங்கள் வீடுகளில் உள்ளோரின் ஆரோக்கியம் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்க விரும்பினால், வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வாஸ்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக வீட்டின் சமையலறையில் அவசியம் பின்பற்றப்பட வேண்டும்.
பலரும் சமையலறையில் கிடைக்கும் இடங்களில் பொருட்களை வைத்து பயன்படுத்துவதுண்டு. ஆனால் வாஸ்துப்படி சமையலறையில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் வைக்கும் போது அது வீட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வீட்டிலேயே சமையலறையில் தான் மற்ற அறைகளை விட அதிகமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இந்த சமையலறையானது நன்கு விசாலமாக இருக்க வேண்டியது முக்கியம். மேலும் சமையலறையானது ஒரு வீட்டில் சரியான திசையில், இடத்தில் அமைந்திருக்க வேண்டும்.
எந்த திசையில் சமையலறை இருக்க வேண்டும்?
வாஸ்துப்படி சமையலறையை வீட்டின் தென்கிழக்கு திசையில் அமைக்க வேண்டும். சமையலறையில் நெருப்பு அதிகமாக பயன்படுத்தப்படுவதால், இது அமைந்திருக்க ஏற்ற திசை தென்கிழக்கு திசை. ஒருவேளை இந்த திசையில் வைக்க முடியாவிட்டால், வடமேற்கு திசையில் வைக்கலாம். ஒரு வீட்டில் சமைலறையை அமைக்க சிறந்த திசை இவை இரண்டும் தான். மேலும் இந்த சமையலறைக்கு கதவுகளை அமைப்பதாக இருந்தால், அது கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் அமைக்க வேண்டும்.
வாஸ்து குறைபாடு உள்ள சமையலறை
வீட்டில் உள்ள சமையலறையில் வாஸ்து குறைபாடு இருந்தால் அல்லது வாஸ்துப்படி கட்டப்படாமல் இருந்தால், உடனே அதை இடிக்காமல், வாஸ்துப்படி உள் அமைப்பை மட்டும் மாற்றி, குறைபாட்டை போக்கலாம். அதுவும் அடுப்பை சமையலறையில் தென்கிழக்கு மூலையில் வைத்து, சமைப்பவர் கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது அது வீட்டின் செல்வத்தை மற்றும் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஓவன், மிக்ஸி, கிரைண்டரை எங்கு வைக்கலாம்?
சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டியை அமைக்க சிறந்த திசை வடமேற்கு திசை. அதேப் போல் டோஸ்டர், ஓவன், கீசர் போன்றவற்றை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். மேலும் மிக்ஸி, கிரைண்டர், ஜூஸர் போன்றவற்றை தென்கிழக்கு மூலைக்கு அருகே தெற்கு திசையில் வைக்க வேண்டும். முக்கியமாக குளிர்சாதன பெட்டியை சமையலறையில் வைப்பதாக இருந்தால், அதை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்காமல், வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் வையுங்கள்.
மசாலா பொருட்கள், அரிசி, பருப்புக்களை எங்கு வைக்க வேண்டும்?
சமையலறையில் தினசரி பயன்படுத்தப்படும் பொருள் தான் மசாலா பொருட்கள், அரிசி, பருப்பு போன்றவை. இவை அனைத்தையும் வைக்க சிறந்த திசை என்றால் அது தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் தான். அதேப் போல் காலி சிலிண்டரை சமையலறையின் தென்மேற்கு மூலையிலும், பயன்படுத்தும் சிலிண்டரை தெற்கு நோக்கியும் வைக்க வேண்டும். முக்கியமாக சமையலறையின் சுவரானது வெளிர் நிற ஆரஞ்சு அல்லது க்ரீம் நிறங்களில் இருக்க வேண்டும். அது வீட்டில் ஐஸ்வர்யத்தை அதிகரிக்கும்.
எந்த நிறங்களை சமையலறையில் பயன்படுத்தக்கூடாது?
சமையலறையில் எப்போதும் கருப்பு மற்றும் நீல நிறங்களைப் பயன்படுத்தக்கூடாது. வாஸ்துப்படி கருப்பு நிறமானது சமையலறையில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, நிதி இழப்பை ஏற்படுத்தும். ஆனால் பலரது வீட்டின் சமையலறை திட்டுக்களானது கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருப்பு நிற திட்டுக்களால் சந்திக்கும் விளைவுகளைத் தவிர்க்க ஸ்வஸ்திக் சின்னத்தை, அந்த திட்டுக்களில் உருவாக்குங்கள். இது அதன் மோசமான தாக்கத்தைத் தடுத்து, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications