Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
வீட்டில் கிச்சன், பெட்ரூம் மற்றும் பாத்ரூம் இருக்க வேண்டிய இடம் எது தெரியுமா? வாஸ்து சொல்வது என்ன?
தற்போது பெரும்பாலானவர்கள் வாஸ்துப்படி வீடு கட்டுகின்றன. இப்படி வாஸ்துப்படி வீடி கட்டுவதால் வீட்டில் நல்ல சக்திகளும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிலைக்கும் என்பது ஐதீகம். முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே, இப்போது வாஸ்து என்று அழைக்கப்படுகிறது. இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது.
நீங்கள் ஒரு புதிய அபார்ட்மெண்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அல்லது தற்போதுள்ள உங்கள் வீட்டை புதுப்பிக்கிறீர்களா? அப்படியானால் வாஸ்து படி உங்கள் படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை சீரமைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்போதும் சரிபார்ப்பது நல்லது. இது ஒருவரின் வாழ்க்கையிலும் நல்ல வளங்களை தரவல்லது.

ஏனெனில் படுக்கையறை, சமையலறை, குளியலறை உள்ளிட்ட இடங்களுக்கும் வாஸ்துவின் அடிப்படையில் உங்கள் நேரமும் கவனமும் தேவை என்று கூறப்படுகிறது. அந்த வகையில், வீட்டில் பார்னிச்சர்கள், படுக்கை போன்றவற்றை வைப்பதற்கான சரியான இடத்தை வாஸ்து கணக்கிட்டுள்ளது. நீங்கள் கட்டும் வீட்டின் படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறைக்கான வாஸ்து உதவிக்குறிப்புகளைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
படுக்கையறையின் அமைப்பு
பொதுவாக, வீட்டில் உள்ள மாஸ்டர் படுக்கையறையின் திசை வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்க வேண்டும். படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையின் படுக்கையறை மேற்கு நோக்கி இருக்க வேண்டும். விருந்தினர் படுக்கையறை கிழக்கு நோக்கியதாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு ஸ்டடி ரூம் தென்கிழக்கு திசையை எதிர்கொண்டு இருக்க வேண்டும்.
படுக்கையின் இடம்
உங்கள் படுக்கையை கதவுக்கு எதிரே வைக்க வேண்டாம். அதேபோல, தெற்கு அல்லது கிழக்கு திசையில் தலை வைத்து தூங்க வேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். ஒருபோதும், தலை வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்க வேண்டாம். வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.
அலமாரிஇருக்க வேண்டிய இடம்
தெற்கு, தென்-மேற்கு அல்லது மேற்கு திசையில் அலமாரிகள் வைக்கவும். அது சுபமாக இருக்கும்.
படுக்கையறைக்கான நிறங்கள்
ஒரு படுக்கையறைக்கு ஏற்ற வண்ணங்கள் வெளிர் ரோஜா, சாம்பல், நீலம் மற்றும் பச்சை ஆகும்.
சமையலறைக்கான வாஸ்து உதவிக்குறிப்புகள்
உங்கள் சமையலறையை வடிவமைக்கத் திட்டமிடும்போது பின்வரும் காரணிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சமையலறை வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடமேற்கு திசையில் இருந்தாலும் நல்லது.
கட்டடக்கலை நிபுணர்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, தீ, எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், மைக்ரோவேவ், ஓவன் மற்றும் பிற உபகரணங்கள் சமையலறையின் தென்கிழக்கு பகுதியில் வைக்கப்பட வேண்டும். அதேபோல வாஷ்பேசின்கள் மற்றும் சமையல் அடுப்பை ஒரே மேடையில் இருக்கும்படி வைக்கக்கூடாது. அல்லது ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்படி வைக்க வேண்டாம்.
மேலும் வாஷ்பேசின்கள், வாஷிங் மெஷின், நீர் குழாய்கள் மற்றும் சமையலறை வடிகால்களை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்திருங்கள். வாழ்க்கையில் உள்ள தடைகளை சமாளிக்க குளிர்சாதன பெட்டியை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
குளியலறைக்கான வாஸ்து உதவிக்குறிப்புகள்
வீட்டின் வடமேற்கு பகுதியில் உங்கள் குளியலறை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இது கழிவுகளை அகற்றுவதை ஆதரிக்கிறது. எப்போதும் குளியலறையில் ஒரு மர கதவு வைத்திருங்கள். மேலும், எதிர்மறை சக்தியைத் தவிர்க்க கதவை எப்போதும் மூடியே வைக்கவும்.
அலங்கார சிலைகள் அல்லது சாதாரண சிலைகளை குளியலறையில் வைக்க வேண்டாம். குளியலறை சுவர் படுக்கையறை, பூஜை அறை அல்லது சமையலறை சுவருடன் ஒட்டி இருக்க கூடாது. ஏனெனில் அது வீட்டிற்கு எதிர்மறையை சக்தியை கொண்டுவருகிறது. குளியலறையின் கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வாஷ்பேசின், ஷவர் வைக்கலாம்.



Click it and Unblock the Notifications