Latest Updates
-
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
வாஸ்துப்படி, பெட்ரூம்மில் இந்த 5 பொருட்களை வெக்காதீங்க.. இல்ல பண பிரச்சனையும், டென்சனும் அதிகரிக்கும்..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் ஒவ்வொரு பகுதியும், ஏன் ஒவ்வொரு பொருளும் அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வீட்டில் எந்த ஒரு பொருளை அழகுக்காக வைப்பதாக இருந்தாலும் சரி, வாஸ்துப்படி அவற்றை எங்கு வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்பதை என்பதை அறிந்த பின்னரே வைக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அது அந்த வீட்டில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். ஒரு வீட்டில் படுக்கை அறையானது ஓய்வெடுக்கும் ஒரு அறையாகும். நிறைய பேர் தங்களின் படுக்கை அறையை அழகாக வைத்துக் கொள்ள பல பொருட்களை வாங்கி வைப்பார்கள்.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கை அறையில் வைக்கப்படும் சில பொருட்கள், உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, பண பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இப்போது படுக்கை அறையில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பது குறித்து காண்போம்.
காலணி
நிறைய பேர் தங்களின் வீடுகளுக்குள்ளேயே காலணியை அணிந்து கொண்டு சுற்றுகிறார்கள். வாஸ்துப்படி, காலணிகளை படுக்கையறையில் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காலணிகளானது எதிர்மறை ஆற்றலை உருவாக்கக்கூடியது. இதை படுக்கையறையில் அணிந்தால், மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். அதோடு லட்சுமி தேவியின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும்.
துடைப்பம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டைப் பெருக்கும் துடைப்பத்தில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த துடைப்பத்தை எப்போதும் படுக்கை அறையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவில் விரிசல் ஏற்படும். தம்பதிகளிடையே உள்ள உறவு பாதிக்கப்படும்.
கிழிந்த அல்லது பழைய ஆடைகள்
வாஸ்துப் படி, உங்கள் வீட்டில் கிழிந்த ஆடைகள் இருந்தால், அவற்றை படுக்கை அறையில் உள்ள அலமாரியில் இருந்து அகற்றுங்கள். இல்லாவிட்டால், அது வீட்டில் பல கஷ்டங்களைக் கொண்டு வரும். எனவே நீங்கள் கிழிந்த அல்லது மிகவும் பழைய ஆடைகளை வைத்திருந்தால், அவற்றை தாமதிக்காமல் வீட்டில் இருந்து அகற்றுங்கள்.
எலக்ட்ரானிக் பொருட்கள்
வாஸ்துப்படி, படுக்கை அறையில் போன், சார்ஜர், ஹேர் ட்ரையர், ஹெட் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இந்த வகையான பொருட்கள் படுக்கை அறையில் இருந்தால், அது ராகு தோஷத்தை ஏற்படுத்தும். அதோடு நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் டென்சனை அதிகரிக்கும். எனவே இவற்றை படுக்கை அறையில் வைத்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
தாஜ்மஹால் போட்டோ
என்ன தான் தாஜ்மஹால் காதலின் சின்னமாக கருதப்பட்டாலும், உண்மையில் அது ஒரு சமாதி. வாஸ்துப்படி, தாஜ்மஹாலின் போட்டோ அல்லது சிலையை வீட்டின் படுக்கை அறையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது திருமண வாழ்க்கையில் எதிர்பாராத பல பிரச்சனைகளை வரவழைத்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications