Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
வாஸ்துப்படி, கிச்சன்-ல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்ல வீட்டுல பிரச்சனை தான் வரும்...
Vastu Tips In Tamil: ஒரு வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமான பகுதியாகும். வீட்டில் இருக்கும் சமையலறையானது சரியான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். சமையலறை வாஸ்துப்படி இல்லாவிட்டால், அந்த வீட்டில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தில் அது மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுவே சமையலறை வாஸ்துப்படி இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமின்றி, வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களும் அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் சமையலறையில் ஒருசில பொருட்களை வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்தால், அது அந்த வீட்டில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இப்போது வீட்டின் சமையலறையில் எந்த பொருட்களை வைத்திருக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
உடைந்த பாத்திரங்கள்
சிலர் தங்கள் வீட்டில் உடைந்த அல்லது ஓட்டையுள்ள பாத்திரங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி சமையலறையில் உடைந்த பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது அல்லது வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது அந்த வீட்டில் பண பிரச்சனைகளை அதிகரிக்கும்.
முதலுதவி பெட்டி
ஒரு வீட்டில் முதலுதவி பெட்டி இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் அந்த முதலுதவி பெட்டியை வீட்டில் சமையலறையில் வைத்திருக்கக்கூடாது. அப்படி முதலுதவி அல்லது மருந்து பெட்டியை சமையலறையில் வைத்திருந்தால், அது அந்த வீட்டின் தலைவரை அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட வைக்கும். அதுமட்டுமின்றி, அந்த வீட்டில் உள்ளோரும் அடிக்கடி ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
கண்ணாடி
வீட்டில் கண்ணாடியை சரியாக இடத்தில் வைத்திருந்தால், அது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அதுவே அந்த கண்ணாடியை வீட்டின் சமையலறையில் வைத்திருந்தால், அது அந்த வீட்டில் பிரச்சனைகளை உண்டாக்கும்.
அழுக்கு பாத்திரங்கள்
வீட்டின் சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தமான சமையலறையில் லட்சுமி தேவி குடியேறமாட்டாள். மேலும் இரவு தூங்கும் முன் அழுக்கு பாத்திரங்கள் இருந்தால், அவற்றை சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டும். இல்லையெனில் லட்சுமி தேவி கோபமடைந்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவார்.
பழைய மாவு
நீங்கள் வீட்டில் சப்பாத்திக்கு மாவு பிசைந்து பயன்படுத்தினால், அந்த மாவு முழுவதையும் பயன்படுத்திவிடுங்கள். அதை விட்டு பிசைந்த மாவை எடுத்து வைத்து மறுநாள் பயன்படுத்தினால், ராகு மற்றும் சனி வீட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே பழைய மாவைக் கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications