Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
வாஸ்துப்படி, வீட்டின் இந்த இடத்துல வாஷிங் மெஷினை வெச்சுடாதீங்க.. இல்ல வீட்டுல பணமே சேராது...
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுமே நம் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நம் வீட்டில் எந்த ஒரு பொருளை வைப்பதாக இருந்தாலும், அதை வாஸ்து விதிகளைப் பார்த்து வைக்க வேண்டும்.
ஏனெனில் ஒவ்வொரு பொருளும் மற்றும் ஒவ்வொரு இடமும் ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. தவறான இடத்தில் ஒரு பொருளை வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உற்பத்தி செய்து, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும்.

தற்போது நிறைய வீடுகளில் துணியை துவைக்கும் வாஷிங் மெஷின் உள்ளது. இந்த வாஷிங் மெஷினை வீட்டில் சரியான திசையில் வைக்க வேண்டும். இல்லையென்றால், அது வீட்டில் இருப்போரின் தொழில் வாழ்க்கை, நிதி நிலை மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது வாஷிங் மெஷினை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
வாஸ்து சாஸ்திரத்தில் வாஷிங் மெஷினை பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:
* வாஸ்து சாஸ்திரத்தில் வாஷிங் மெஷினை பயன்படுத்துவதற்கு ஒருசில விதிகள் உள்ளன. அந்த விதிகளைப் பின்பற்றி வந்தால், வாழ்க்கை மேம்படும்.
* வாஸ்து விதிகளின் படி, வாஷிங் மெஷினில் அழுக்குத் துணிகளை இரவு முழுவதும் ஊற வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் வீட்டில் உள்ளோர் சிறு விஷயங்களுக்கும் அதிகம் கோபமும், எரிச்சலும் அடையக்கூடும்.
* வாஸ்துப்படி, வாஷிங் மெஷினில் அழுக்கு நீரை சேகரித்து வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த அழுக்கு நீர் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரப்பும். ஆனால் நிறைய பேர் இந்த தவறை செய்வதுண்டு. இப்படி செய்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலால் வீட்டின் சூழல் எப்போதும் பதட்டமாக இருக்கும். வீட்டில் உள்ளோர் சிறு விஷயங்களுக்கும் பெரிய சண்டையைப் போடக்கூடும்.
* முக்கியமாக வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷினில் சிறு பிரச்சனை என்றாலும், அதை தாமதிக்காமல் உடனே சரிசெய்ய வேண்டும்.
எந்த திசையில் வாஷிங் மெஷினைப் பயன்படுத்தக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாஷிங் மெஷினை வீட்டின் குறிப்பிட்ட திசையில் வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் பிரச்சனைகளை இன்னும் அதிகரிக்கும். எனவே வாஷிங் மெஷினை வீட்டில் வாங்கி வைக்கும் முன், அந்த வாஷிங் மெஷினை எந்த திசையில், இடத்தில் வைக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
வடகிழக்கு
வாஸ்துப்படி, வீட்டின் வடகிழக்கு திசையில் வாஷிங் மெஷினை வைக்கக்கூடாது. இந்த திசையில் வைத்தால், அது வீட்டில் உள்ளோருக்கு அடிக்கடி தலைவலியை உண்டாக்கும். தேவையில்லாத விஷயங்களுக்கு கோபப்படக்கூடும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கும்.
மனதில் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டே இருக்கும். வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் பெரியோரின் வார்த்தைகளை கவனிக்கமாட்டார்கள் மற்றும் மூர்க்கத்தனமாக இருப்பார்கள். எனவே இந்த திசையில் மறந்தும் வாஷிங் மெஷினை வைத்து விட வேண்டாம்.
வடக்கு
* வடக்கு திசை நீர் உறுப்புடன் தொடர்புடையவை. இந்த திசையில் நெருப்பு உறுப்புடன் தொடர்புடைய வாஷிங் மெஷினை வைத்தால், அது எதிர்மறை விளைவை தான் ஏற்படுத்தும்.
* முக்கியமாக வடக்கு திசையில் வாஷிங் மெஷினை வைக்கும் போது, அது தொழிலில் தடைகளை உருவாக்குவதோடு, மனநிலையை நிலையற்றதாக வைத்திருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். எனவே வடக்கு திசையில் வாஷிங் மெஷினை வைக்கக்கூடாது.
கிழக்கு
கிழக்கு திசையும் நீர் உறுப்புடன் தொடர்புடையவை. இந்த திசையில் வாஷிங் மெஷினை வைக்கும் போது, அது அந்த வீட்டில் இருப்போரின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் வீட்டில் உள்ளோருக்கு அதிக மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
தெற்கு மற்றும் தென்மேற்கு
வாஸ்துப்படி, தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் தண்ணீர் இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அந்த வீட்டில் உள்ளோர் கடுமையான பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் அந்த வீட்டில் இருப்போரின் பெயரும், புகழும் கெட்டுப் போகும். யாரும் நம்பவோ, மரியாதை கொடுக்கவோமாட்டார்கள். ஆகவே இந்த திசைகளில் வாஷிங் மெஷினை வைப்பது நல்லதல்ல.
எந்த திசையில் வாஷிங் மெஷினை வைக்கலாம்?
தென்கிழக்கு
வாஸ்துப்படி, தென்கிழக்கு திசையில் நெருப்பு உறுப்புடன் தொடர்புடைய பொருட்களை வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த திசையில் வாஷிங் மெஷினை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலை இன்னும் அதிகரிக்கும். இதன் விளைவாக வீட்டில் உள்ளோரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வின் ஒவ்வொரு விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.
வடமேற்கு திசை
வடமேற்கு திசையும் வாஷிங் மெஷினை வைக்க உகந்த திசையாகும். இந்த திசையில் வாஷிங் மெஷினை வைக்கும் போது, வீட்டில் உள்ளோரிடையேயான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் மரியாதை அதிகரிக்கும், அனைத்து வழிகளில் இருந்தும் உதவிகள் கிடைக்கும். எனவே இந்த திசையில் வைக்கலாம்.
மேற்கு திசை
ஒருவேளை தென்கிழக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் வாஷிங் மெஷினை வைக்க முடியாத நிலையில் இருந்தால், மேற்கு திசையில் வாஷிங் மெஷினை வைக்கலாம். இந்த திசையும் வாஷிங் மெஷின் வைக்க உகந்த திசையாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications