Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
Vastu Tips: இந்த 5 அதிர்ஷ்ட நிற பர்ஸ்களில் ஒன்றை யூஸ் பண்ணுனா... உங்களுக்கு பணக்கஷ்டமே வராதாம்...!
Vastu Tips: வாஸ்து சாஸ்திரம் பல நூற்றாண்டுகளாக நம் மக்களால் அதிர்ஷ்டத்தைப் பெறவும், வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைப் பெறவும் பயன்படுத்தி வரும் ஒரு சாஸ்திரமாகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நிறங்கள் நம் வாழ்வின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. வண்ணங்கள் வெறும் அலங்கார அம்சமாக இல்லாமல் ஒரு ஆற்றல்மிக்க சக்தியாகும்.
இது உங்களின் அனைத்து முடிவுகளையும் பாதிக்கிறது, உங்கள் ஆடையின் நிறம் வரை, ஆற்றல் அதிர்வுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இது குறிக்கிறது. நீங்கள் பயன்படுத்தம் பர்ஸ் மற்றும் பணப்பைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் பர்ஸ் நிறங்கள் என்னஎன்ன் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த நிறங்கள் உங்கள் பணப்பையை எப்போதும் காலியாக இருக்க விடாது.

பச்சை
பச்சை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறந்த பணப்பை வண்ணங்களில் ஒன்றாகும். இது வளர்ச்சி மற்றும் செல்வத்துடன் தொடர்புடைய நிறமாகும். நீங்கள் மிதுனம், கடகம் அல்லது கன்னி ராசியில் பிறந்தவராக இருந்தால், உங்கள் பணப்பையின் நிறத்தை உங்கள் பிறந்த ராசியுடன் பொருத்த விரும்பினால், பச்சை நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த நிறம் உங்களுக்கு அதிக பணத்தை ஈர்க்கும் மற்றும் நிதி உலகில் செழிப்பை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.
கருப்பு
கருப்பு பெரும்பாலும் ஒரு அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுவதில்லை, ஆனால் பணப்பைகளுக்கு, இது மற்ற நிறங்களை விட மிகச் சிறந்த நிறமாகும். இந்த நிறம் நேர்த்தியான தோற்றத்துடன் இருப்பது மட்டுமின்றி, செல்வத்தையும் வெற்றியையும் குறிக்கிறது. விஞ்ஞானத்தின் படி, கருப்பு மற்ற சாயல்களை விட அதிக ஒளியை உறிஞ்சுகிறது. இது வாஸ்து படி வளர்ச்சி மற்றும் செல்வத்தை கையகப்படுத்துவதைக் குறிக்கிறது.
பிங்க்
பிங்க் நிறம் மிகவும் தனித்துவமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிற பர்ஸை பெரும்பாலும் யாரும் உபயோகிப்பதில்லை. ஆனால் உங்கள் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் இளஞ்சிவப்பு நிற பர்ஸைப் பயன்படுத்த வேண்டும். வாஸ்து படி, இந்த அழகான நிறம் செல்வம் மற்றும் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பணத்தை ஈர்க்கிறது. எனவே இளஞ்சிவப்பு நிற பர்ஸைக் பயன்படுத்தி உங்கள் பணப் பிரச்சனைகளுக்கு நிரந்தர விடைகொடுங்கள்.
ப்ரவுன்
மண்ணின் குணங்களை உள்ளடக்கிய இந்த நிற பர்ஸ், செலவுகளைக் குறைத்து, நிதியை நிலைப்படுத்துகிறது. மேலும், பழுப்பு நிறமானது இனிமையான ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. பழுப்பு நிற பணப்பையை வைத்திருப்பது உங்கள் நிதிநிலையை எப்போதும் உறுதியாக வைத்து சீராக உங்கள் முன்னேற்றத்தை உறுதிசெய்யும்.
மஞ்சள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த நிறம் செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் நம்பிக்கையை குறிக்கிறது என்று நம்பப்படுகிறது. விஷ்ணு பகவானுடன் தொடர்புடையதாக கருதப்படும் மஞ்சள் நிறம், நிதி சிக்கல் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

